மேலும் அறிய

Sylendra Babu: நட்ராஜ் வழியில் சைலேந்திர பாபு?- 6 நாட்களில் ஓய்வு; அடுத்து டிஎன்பிஎஸ்சி தலைவர்!

தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திர பாபு, ஓய்வுக்குப் பிறகு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திர பாபு, ஓய்வுக்குப் பிறகு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழ்நாட்டின் அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நியமனம் செய்து வருகிறது. ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு, ஆட்களைத் தேர்வு செய்வது டிஎன்பிஎஸ்சியின் முக்கியப் பணியாகும். எனினும் இதற்குத் தலைவர் யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. இதனால் தேர்வுகள், தேர்வு முடிவுகள் வெளியீடு உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. 

இந்த நிலையில், தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திர பாபு விரைவில் ஓய்வுபெற உள்ளார். அவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

டிஎன்பிஎஸ்சி அமைப்பு

டிஎன்பிஎஸ்சி 1 தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பு. இதில் தற்போது தலைவர் பணியிடம் காலியாக, நிரப்பப்படாமல் உள்ளாது. அதேபோல டிஎன்பிஎஸ்சியில் தற்போது 3 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். உறுப்பினர்களில் ஒருவரான முனியநாதன் ஐஏஎஸ் (ஓய்வு), பொறுப்பு தலைவராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 ஆகக் குறைந்துள்ளது. 

6 நாட்களில் ஓய்வு பெறும் சைலேந்திர பாபு 

தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திர பாபு ஜூன் மாதம் 30ஆம் தேதியோடு ஓய்வுபெற உள்ளார். அதன் பிறகு அவர் விரைவில் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான தமிழக அரசு உயர்மட்டக் குழுவில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும் தகவல் கசிந்துள்ளது. 

டிஎன்பிஎஸ்சி அமைப்பில் ஒருவர், தனது 62 வயது வரை தலைவராகவோ, உறுப்பினராகவோ பதவி வகிக்க முடியும். 61 வயதான சைலேந்திர பாபு ஓராண்டுக்கு, தலைவர் பதவியில் இருப்பார் என்று கூறப்படுகிறது. 

நட்ராஜ் வழியில்... 

இதேபோல முன்னாள் டிஜிபி நட்ராஜ், 2012ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டார். தன்னுடைய பதவிக் காலத்தில் வெளிப்படைத் தன்மை, ஆன்லைன் மூலம் தேர்வுக்கு விண்ணப்பிப்பது, தேர்வு மையங்களில் கேமரா பொருத்தம், ஆன்லைனில் மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகியவற்றை அறிமுகம் செய்தார். அவரின் வழியில், சைலேந்திர பாபு நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

1987 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திர பாபு. நாகர்கோவிலைச் சேர்ந்த இவர், தமிழ்நாட்டின் காவல்துறை தலைமை இயக்குநராகப் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Coolie Update: ஜூலையில் கூலி ஷூட்டிங்! தலைவர் போட்டோவுடன் தாறுமாறு அப்டேட் கொடுத்த லோகேஷ்!
Coolie Update: ஜூலையில் கூலி ஷூட்டிங்! தலைவர் போட்டோவுடன் தாறுமாறு அப்டேட் கொடுத்த லோகேஷ்!
Breaking News LIVE: உத்தர பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது: ரயில் சேவை பாதிப்பு
Breaking News LIVE: உத்தர பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது: ரயில் சேவை பாதிப்பு
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?காரணம் என்ன? ஜோதிடம் சொல்வது என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?காரணம் என்ன? ஜோதிடம் சொல்வது என்ன?
NEET Re Exam: ஜூன் 30ஆம் தேதி வெளியாகிறதா நீட் மறுதேர்வு முடிவுகள்?: காண்பது எப்படி?
NEET Re Exam: ஜூன் 30ஆம் தேதி வெளியாகிறதா நீட் மறுதேர்வு முடிவுகள்?: காண்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!Jagan Mohan Reddy joins Congress : DK சிவகுமாருடன் ரகசிய ஆலோசனை?காங்கிரஸில் இணையும் ஜெகன்!Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Coolie Update: ஜூலையில் கூலி ஷூட்டிங்! தலைவர் போட்டோவுடன் தாறுமாறு அப்டேட் கொடுத்த லோகேஷ்!
Coolie Update: ஜூலையில் கூலி ஷூட்டிங்! தலைவர் போட்டோவுடன் தாறுமாறு அப்டேட் கொடுத்த லோகேஷ்!
Breaking News LIVE: உத்தர பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது: ரயில் சேவை பாதிப்பு
Breaking News LIVE: உத்தர பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது: ரயில் சேவை பாதிப்பு
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?காரணம் என்ன? ஜோதிடம் சொல்வது என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?காரணம் என்ன? ஜோதிடம் சொல்வது என்ன?
NEET Re Exam: ஜூன் 30ஆம் தேதி வெளியாகிறதா நீட் மறுதேர்வு முடிவுகள்?: காண்பது எப்படி?
NEET Re Exam: ஜூன் 30ஆம் தேதி வெளியாகிறதா நீட் மறுதேர்வு முடிவுகள்?: காண்பது எப்படி?
CM Stalin: நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையுடன் கூடுதலாக ஊக்கத்தொகை: முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
CM Stalin: நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையுடன் கூடுதலாக ஊக்கத்தொகை: முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
Nagarjuna: விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாகார்ஜூனா.. தள்ளிவிடப்பட்ட மாற்றுத்திறனாளி நபருடன் சந்திப்பு!
Nagarjuna: விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாகார்ஜூனா.. தள்ளிவிடப்பட்ட மாற்றுத்திறனாளி நபருடன் சந்திப்பு!
Kalki 2898 AD: கல்கி படத்தின் டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா? வடமாநிலத்தின் உச்சத்தில் பிரபாஸ்!
Kalki 2898 AD: கல்கி படத்தின் டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா? வடமாநிலத்தின் உச்சத்தில் பிரபாஸ்!
"தெற்கில் இருந்து வடக்கு.. அனைவரின் குரல்களும் கேட்கப்படும்" - ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ராகுல் காந்தி!
Embed widget