மேலும் அறிய

Kalaignar Memorial Library: புத்தகப் பிரியர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்...! பட்ஜெட்டில் அமைச்சர் அறிவித்து அதிரடி அறிவிப்பு

TN budget 2023: மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் ஜூன் மாதம் திறக்கப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் ஜூன் மாதம் திறக்கப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். 3 லட்சம் புத்தகங்களுடன்  மதுரை கலைஞர் நுாற்றாண்டு கலைஞர் நுாலகம் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதனிடையே இந்தாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து 2023-24 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை  தாக்கல் செய்வதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. காலை 10 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். 

இதில் மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் ஜூன் மாதம் திறக்கப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். 3 லட்சம் புத்தகங்களுடன்  மதுரை கலைஞர் நுாற்றாண்டு கலைஞர் நுாலகம் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

பள்ளிக் கல்வித்துறை அறிவிப்புகள்

அரசுப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் புதிய பள்ளிக் கட்டிடங்கள் ரூ.7000 கோடியில் கட்டப்படும் எனவும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். அதேபோல காலை உணவுத் திட்டம் ரூ.500 கோடி மதிப்பில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் ரூ.10 கோடி மதிப்பில் புத்தகத் திருவிழா தொடர்ந்து நடத்தப்படும் எனவும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்படும் பள்ளிகள் அனைத்தும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இணைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

பிற அறிவிப்புகள்

எண்ணும்‌ எழுத்தும்‌ திட்டமானது 2025 ஆம்‌ ஆண்டுக்குள்‌ ஒன்று முதல்‌ மூன்றாம்‌ வகுப்புகளில்‌ பயிலும்‌ மாணவர்கள்‌ அனைவரும்‌ அடிப்படை கல்வியறிவும்‌ எண்கணிதத்‌ திறனும்‌ அடைவதை நோக்கமாகக்‌ கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பின்‌ அடிப்படையில்‌, வரும்‌ நிதியாண்டில்‌ 110 கோடி ரூபாய்‌ செலவில்‌ நான்காம்‌ ஐந்தாம்‌ வகுப்புகளுக்கும்‌ இத்திட்டம்‌ விரிவுபடுத்தப்படும்‌.

தலைநகர்‌ சென்னை மட்டுமன்றி தமிழ்நாட்டின்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ புத்தகத்‌ திருவிழாக்களும்‌ ஐந்து இலக்கியத்‌ திருவிழாக்களும்‌ வெற்றிகரமாக, இவ்வாண்டு நடத்தப்பட்டன. மகத்தான இம்முயற்சியை வரும்‌ ஆண்டில்‌ 10 கோடி ரூபாய்‌ நிதியுடன்‌ தொடர உரிய நடவடிக்கைகள்‌ எடுக்கப்படும்‌. 

முதல்‌ சென்னை சர்வதேச புத்தகக்‌ கண்காட்சியினை 24 நாடுகளின்‌ பங்கேற்புடன்‌ 2023 ஆம்‌ ஆண்டு ஜனவரி மாதத்தில்‌ அரசு வெற்றிகரமாக நடத்தியது. தமிழ்நாடு மற்றும்‌ பல்வேறு நாடுகளைச்‌ சேர்ந்த வெளியீட்டாளர்களிடையே அறிவு பரிமாற்றம்‌ மற்றும்‌ பதிப்புரிமை பரிமாற்றத்திற்கு வழி வகுக்கும்‌ 355 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்‌ கையொப்பமிடப்பட்டுள்ளன. இந்த சர்வதேச புத்தகக்‌ கண்காட்சி வரும்‌ ஆண்டிலும்‌ நடத்தப்படும்‌.

இவ்வாறு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாம்: TN Budget 2023 LIVE: தமிழ்நாடு பட்ஜெட்டில், பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 40, 299 கோடி நிதி ஒதுக்கீடு- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Embed widget