மேலும் அறிய

TN 12th Result 2026: மயிலாடுதுறை மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் இவர்தான் முதல் மதிப்பெண்!

Tamil Nadu 12th Result 2026 Updates: மயிலாடுதுறை மாவட்டத்தில் 12 -ம் வகுப்பு பொது தேர்வு முடிவில் 596 மதிப்பெண்களைப் பெற்று தனியார் பள்ளி மாணவி ஹிசாரா சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மயிலாடுதுறை: தமிழகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் மயிலாடுதுறை மாவட்டம் 93.51 சதவீத தேர்ச்சியைப் பதிவு செய்து, கடந்த ஆண்டை விடப் புள்ளிவிவர அடிப்படையில் முன்னேற்றம் கண்டுள்ளது. வழக்கம்போலவே மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

தேர்வு எழுதிய மாணவர்களின் புள்ளிவிவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் சுயநிதிப் பள்ளிகள் என மொத்தம் 95 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்தப் பொதுத்தேர்வை எதிர்கொண்டனர்.

மாவட்டத்தின் ஒட்டுமொத்தப் பங்கேற்பு மற்றும் தேர்ச்சி விவரம்:

தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள்: 10,286

* மாணவர்கள்: 4,724

* மாணவிகள்: 5,561

* தேர்ச்சி பெற்ற மொத்த மாணவர்கள்: 9,618

* மாணவர்கள்: 4,271

* மாணவிகள்: 5,347

மாவட்டத்தில் மொத்தமாகத் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 9,618 ஆகும். இதில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 90.39 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 96.15 சதவீதமாகவும் உள்ளது. மாணவர்களை விட மாணவிகள் 5.76 சதவீதம் அதிகமாகத் தேர்ச்சி பெற்று, தங்களின் மேலாதிக்கத்தைத் தக்கவைத்துள்ளனர்.

கடந்த ஆண்டை விட முன்னேற்றம்

கல்வித் துறையில் மயிலாடுதுறை மாவட்டம் படிப்படியாக முன்னேறி வருவதை இந்த ஆண்டு முடிவுகள் காட்டுகின்றன. கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 0.26 சதவீதம் கூடுதல் தேர்ச்சி கிடைத்துள்ளது. ( கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 93.26 ஆகும்) இது சிறிய அளவிலான முன்னேற்றமாகத் தெரிந்தாலும், மாநில அளவிலான தரவரிசையில் மயிலாடுதுறை மாவட்டம் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளது. கடந்த முறை மாநில அளவில் 33-வது இடத்தில் இருந்த மயிலாடுதுறை மாவட்டம், இந்த ஆண்டு 4 இடங்கள் முன்னேறி 29-வது இடத்தைப் பிடித்துள்ளது.

சாதனை படைத்த பள்ளிகள்

மாவட்டத்தில் உள்ள 95 பள்ளிகளில், பல தனியார் பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. 36 அரசு பள்ளிகளில் வெறும் 2 பள்ளிகள் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. 

தரவரிசையில் முன்னேற்றம்: 29-வது இடம்

மயிலாடுதுறை மாவட்டம் இந்த ஆண்டு 93.51 சதவீத தேர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு 93.26 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம், இந்த ஆண்டு 0.26 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, கடந்த ஆண்டு மாநில அளவில் 33-வது இடத்தில் இருந்த மயிலாடுதுறை மாவட்டம், தற்போது 4 இடங்கள் முன்னேறி 29-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த முன்னேற்றம் மாவட்ட நிர்வாகத்திற்குச் சிறு ஆறுதலைத் தந்தாலும், உள்நோக்கிப் பார்க்கும்போது அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகள் பெரும் தொய்வைச் சந்தித்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

புள்ளிவிவரங்கள் காட்டும் உண்மை நிலை

மாவட்டத்தில் மொத்தம் 95 பள்ளிகளைச் சேர்ந்த 10,286 மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை எழுதினர். இதில் 9,618 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள்: 4,724 பேர் தேர்வு எழுதியதில் 4,271 பேர் தேர்ச்சி (90.39%).

மாணவிகள்: 5,561 பேர் தேர்வு எழுதியதில் 5,347 பேர் தேர்ச்சி (96.15%). வழக்கம் போலவே மாணவிகள் மாணவர்களை விட 5.76 சதவீதம் அதிகமாகத் தேர்ச்சி பெற்றுத் தங்கள் சாதனையைத் தொடர்ந்துள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்கள் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 36 அரசு பள்ளிகளில் மாணவர்கள் 1742 பேரும், மாணவிகள் 2179 பேர் என மொத்தம் 3921 பேர் தேர்வு எழுதினர். இதில் 1441 மாணவர்களும், 2028 மாணவிகள் என மொத்தம் 3469 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 82.72 சதவீதமும் மாணவிகள் 93.07 பேரும் தேர்ச்சி பெற்று அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 88.47 ஆக பதிவாகியுள்ளது.

அரசுப் பள்ளிகளின் பின்னடைவு: கல்வியாளர்கள் கவலை

இந்த ஆண்டு முடிவுகளில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 36 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வெறும் 2 பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளன. மீதமுள்ள 34 பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறத் தவறியுள்ளனர்.

அதேசமயம், மாவட்டத்தில் உள்ள தனியார் சுயநிதிப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அதிக அளவில் 100 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த அரசுப் பள்ளிகள் பெரும் பங்கு வகிக்க வேண்டிய நிலையில், 36-ல் 2 பள்ளிகள் மட்டுமே முழுமையான வெற்றியைப் பெற்றது கல்வித்துறையின் கண்காணிப்பு குறித்துப் பல கேள்விகளை எழுப்புகிறது.

மாவட்ட அளவில் முதலிடம் 

மயிலாடுதுறை மாவட்ட அளவில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெணை மயிலாடுதுறை மாவட்டம் நாஞ்சில்நாடு ஆசாத் பெண்கள் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் பயின்ற ஹிசாரா என்ற மாணவி 596 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இதேபோன்று இரண்டாம் இடத்தை சீர்காழி பெஸ்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவியும் பிடித்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு வந்த முதலிடம் பிடித்த ஹிசாராவிற்கு பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர் இனிப்பு ஊட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

மாணவி பெற்ற மதிப்பெண்கள்

தமிழ் -99

ஆங்கிலம்-98

பொருளியல்-99

வணிகவியல்-100

கணக்கு பதிவியல்-100

கணிணி பயன்பாடுகள்-100

அதே பள்ளியில் பயின்று வந்த ஹஷ்நிதா 593 மதிப்பெண் பெற்று நான்கு பாடங்களில் 100 - 100 எடுத்து சாதனை படைத்துள்ளார்.

தமிழ் - 98

ஆங்கிலம் - 95

பொருளியல் - 100

வணிகவியல் -100

கணக்கு பதிவியல் - 100

கணிணி பயன்பாடுகள் - 100

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுதான் வாழ்க்கை இல்லை

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுதான் வாழ்க்கையை தீர்மானிக்கும் என்றால், நிச்சயம் இல்லை. அதனால், மாணவச் செல்வங்களே தேர்வு எழுதியாகிவிட்டது, முடிவும் வந்துவிட்டது. இனி எதையும் மாற்ற முடியாது. ஆகையால், பதற்றமடையாமல் தேர்வு முடிவுகளை எதிர்கொள்ளுங்கள்.

தேர்வில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைத்தால் மகிழ்ச்சி, இல்லையென்றால் வருத்தம் இருக்கும். ஆனால், இதுதான் நம் வாழ்க்கையை தீர்மானிக்க போகும், இறுதி வாய்ப்பு கிடையாது. எதிர்பார்த்த முடிவு கிடைக்காவிட்டால், அதற்கடுத்த என்ன செய்யலாம் என்று, உங்கள் ஆசிரியரிடமோ அல்லது உங்களுக்கு தெரிந்த வல்லுநர்களிடமோ கலந்து ஆலோசித்து, அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து முடிவு எடுங்கள். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget