மேலும் அறிய

TN 12th Exam: +2 தேர்வு முடிவு: தேர்ச்சியில் சரிந்த வட தமிழகம்- சிறப்புத் திட்டம் உருவாக்கக் கோரிக்கை!

TN 12th exam result 2026: தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், 27 மாவட்டங்களின் சராசரி அரசு பள்ளி தேர்ச்சி விகிதம் இந்த அளவை எட்ட முடியவில்லை.

+2 தேர்வு முடிவுகள்: தேர்ச்சி விகிதத்தை உயர்த்த அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் சிறப்புத் திட்டம் வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கான 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட 0.17% அதிகமாக நடப்பாண்டில் 95.20% மாணவச் செல்வங்கள் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு நான் சொல்லவிரும்பும் அறிவுரை என்னவென்றால், மனம் தளர்ந்து விடாதீர்கள் என்பதுதான். அடுத்த மாதம் நடைபெறவுள்ள துணைத் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற்று உயர்கல்வியை தொடர வேண்டும் என்று உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

15 சதவீதம் மட்டுமே!

அதே நேரத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பகுப்பாய்வு செய்து பார்க்கும்போது, அரசு பள்ளிகளின் நிலை, தரம் ஆகியவை குறித்து, குறிப்பாக வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளின் நிலை குறித்து பெரும் கவலை ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 7536 மேல்நிலைப் பள்ளிகளில் 2639 பள்ளிகள், அதாவது 35% பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. அவற்றில் மொத்தமுள்ள 3,152 தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் 1854 பள்ளிகள், அதாவது 58.81%  பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், அரசு பள்ளிகளின் நிலை கவலையளிப்பதாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 3,168 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வெறும் 489 பள்ளிகள் மட்டுமே 100% தேர்ச்சியைப் பெற்றுள்ளன. இது 15.43% மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்டா மற்றும் வட தமிழகத்தில் தேர்ச்சி சரிவு

அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதமும் மிக மோசமாகவே இருக்கிறது. மாநிலத்தின் சராசரி தேர்ச்சி விகிதம் 95.20% ஆக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், 27 மாவட்டங்களின் சராசரி அரசு பள்ளி தேர்ச்சி விகிதம் இந்த அளவை எட்ட முடியவில்லை. ஈரோடு, சிவகங்கை, திருச்சி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சாவூர், இராமநாதபுரம், நாமக்கல், தூத்துக்குடி, சேலம் ஆகிய 11 மாவட்டங்களில் மட்டும் தான் அரசு பள்ளிகளின் சராசரி தேர்ச்சி விகிதம் 95 சதவீதத்தைத் தாண்டியிருக்கிறது. எட்டு மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளின் சராசரி தேர்ச்சி விகிதம் 90%க்கும் கீழ் சரிந்திருப்பதும், அந்த மாவட்டங்கள் டெல்டா மற்றும் வட தமிழகத்தைச் சேர்ந்தவை என்பதும் கவலையளிக்கக் கூடியவை.

அதேபோல், ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் பார்த்தால், கடைசி 10 இடத்தை பிடித்துள்ள விழுப்புரம், இராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், கிருஷ்ணகிரி, அரியலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, தருமபுரி, மயிலாடுதுறை ஆகியவற்றில் 7 மாவட்டங்கள் வட தமிழ்நாட்டையும், மீதமுள்ள 3 மாவட்டங்கள் காவிரி பாசன பகுதிகளையும் சேர்ந்தவையாகும். தேர்ச்சி விகிதத்தில் கடைசி 11 முதல் 15 இடங்களைப் பிடித்திருக்கும் திருப்பத்தூர், திருவள்ளூர், நீலகிரி, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம் ஆகியவற்றில் 3 மாவட்டங்கள் வட தமிழ்நாட்டையும், நாகை மாவட்டம் டெல்டாவையும் சேர்ந்தவை. ஒட்டுமொத்தமாக பார்த்தால் கடைசி 15 இடங்களைப் பிடித்த மாவட்டங்களில் 10 மாவட்டங்கள் வட தமிழகத்தை சேர்ந்தவை என்பதிலிருந்தே கல்வித்தரத்தில் வட தமிழகம் எவ்வளவு பின்தங்கியுள்ளது என்பதை உணர முடியும்.

வட மாவட்டங்கள் தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கியிருப்பதில் ஆச்சரியமடையவும், அதிர்ச்சியடையவும் எதுவும் இல்லை. பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டது முதல் சுமார் 45 ஆண்டுகளாகவே பொதுத்தேர்வுகளில் வட மாவட்டங்கள் பின்தங்கியே தான் உள்ளன. கடந்த சில பத்தாண்டுகளாக காவிரி பாசன மாவட்டங்களும் தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கத் தொடங்கியுள்ளன.

என்ன காரணம்?

பொதுத்தேர்வுகளின் தேர்ச்சி விகிதத்தில் வட மாவட்டங்களும், அண்மைக்காலமாக காவிரி பாசன மாவட்டங்களும் பின்தங்கியிருப்பதற்கான காரணங்களை கண்டறிய ஆராய்ச்சிகள் எதுவும் தேவையில்லை. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையும், கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் தான் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு முதன்மைக் காரணம்.

வட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் போன்ற முதன்மைப் பாடங்களை நடத்துவதற்குக் கூட ஆசிரியர்கள் இல்லை. அதேநேரத்தில் தென் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் இந்தப் பாடங்களை நடத்துவதற்கு இரண்டு ஆசிரியர்களும், சில பள்ளிகளில் மூன்று ஆசிரியர்களும் உள்ளனர். வட மாவடங்களில் உள்ள பள்ளிகளில் புதிதாக பணி அமர்த்தப்படும் ஆசிரியர்களில் பெரும்பான்மையானோர் சொந்த ஊர்களுக்கு இட மாற்றம் பெற்று செல்வதுதான் இதற்கு காரணம்.

வட மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு இரண்டாவது காரணம் அங்குள்ள மக்களின் சமூக, பொருளாதாரக் காரணிகள் தான். வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் மக்கள் வன்னியரும், பட்டியல் சமூகத்தினரும்தான். அவர்களில் வறுமையில் வாடும், குடிசை வீடுகளில் வாழும் வன்னியர்களால் அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் சேர முடியாது. அரசு பள்ளிகளில்தான் சேர்ந்து பயில முடியும். ஆனால், அங்கு போதிய கட்டமைப்புகளோ, ஆசிரியர்களோ இல்லை.  

காலையில் எழுந்தவுடன் வாழ்வாதாரத்திற்கான சில பணிகளை செய்து விட்டுத்தான் பள்ளிகளுக்கு செல்ல முடியும்;  அவர்களால் தனிப்பயிற்சி வகுப்புகளில் சேர முடியாது. வாழ்வாதாரப்பணிகள் காரணமாக அவர்களால் அதிக நேரம் படிக்கவும் முடியாது என்ற நிலையில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் உள்ளனர்.  இந்த சிக்கல்கள் அனைத்துக்கும் தீர்வு கண்டால் தான் பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் வட தமிழ்நாடு பின்தங்கியிருப்பதற்கு முடிவு கட்ட முடியும்.

தமிழ்நாட்டில், குறிப்பாக வடதமிழ்நாடு மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் அவற்றின் கட்டமைப்புகளையும், மனிதவளத்தையும் மேம்படுத்துவது தான் ஒரே தீர்வு என்பதை பல ஆண்டுகளாக நான் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இனியாவது அதற்கான சிறப்புத் திட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Govt: தவிக்க விட்ட திமுக..! தூசி தட்டி கையிலெடுத்த தவெக அரசு - இளம் மருத்துவர்கள் செம்ம குஷி
தவிக்க விட்ட திமுக..! தூசி தட்டி கையிலெடுத்த தவெக அரசு - இளம் மருத்துவர்கள் செம்ம குஷி
மதுரை இளைஞர்களே... TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!
மதுரை இளைஞர்களே... TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கை அமல்: CBSE அதிரடி வழிகாட்டுதல் - மாணவர்களுக்கு என்னென்ன சலுகைகள்? முழு விவரம்!
புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கை அமல்: CBSE அதிரடி வழிகாட்டுதல் - மாணவர்களுக்கு என்னென்ன சலுகைகள்? முழு விவரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகும் CM விஜய் - லிஸ்டில் 7 பேரா? என்ன காரணம், யாருக்கு ஜாக்பாட்?
அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகும் CM விஜய் - லிஸ்டில் 7 பேரா? என்ன காரணம், யாருக்கு ஜாக்பாட்?
அமைச்சர் கோட்டாவில் வசூல் வேட்டை; சிக்கப்போகும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர்கள்?
அமைச்சர் கோட்டாவில் வசூல் வேட்டை; சிக்கப்போகும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர்கள்?
Impact of ABP Nadu's news: ஏபிபிநாடு செய்தி எதிரொலி! ஆபத்துக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள் – அதிரடி சுத்தம்!
Impact of ABP Nadu's news: ஏபிபிநாடு செய்தி எதிரொலி! ஆபத்துக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள் – அதிரடி சுத்தம்!
TN Weather Update: தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
த.வெ.க-வில் இணையும் 4 முன்னாள் அமைச்சர்கள், 7 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்; அதிர்ச்சியில் அதிமுக!
த.வெ.க-வில் இணையும் 4 முன்னாள் அமைச்சர்கள், 7 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்; அதிர்ச்சியில் அதிமுக!
Tata Sieera EV: சியாரா விலையில் மின்சார கார்..! 535KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8,400 EMI - முழு விவரங்கள்
சியாரா விலையில் மின்சார கார்..! 535KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8,400 EMI - முழு விவரங்கள்
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்தது- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்தது- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
290 கி.மீட்டர் மைலேஜ்.. Vespa S 150 ஸ்கூட்டரை வாங்கலாமா? விலை எப்படி?
290 கி.மீட்டர் மைலேஜ்.. Vespa S 150 ஸ்கூட்டரை வாங்கலாமா? விலை எப்படி?
Embed widget