மேலும் அறிய

TN 12th Answer Sheet: பிளஸ் 2 விடைத்தாள் நகல் பதிவிறக்கம், மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு எப்போது, எப்படி?- வெளியான அறிவிப்பு

பிளஸ் 2 பொதுத்‌ தேர்வு விடைத்தாள் நகலினை இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்வது, மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு செய்வது குறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

பிளஸ் 2 பொதுத்‌ தேர்வு விடைத்தாள் நகலினை இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்வது, மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு செய்வது குறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ இன்று (மே 29) தெரிவித்து உள்ளதாவது:

’’கடந்த மார்ச்‌/ ஏப்ரல்‌ மாதத்தில் மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வு எழுதி விடைத்தாள்‌ நகல்‌ கோரி விண்ணப்பித்த மாணவர்களின்‌ விடைத்தாள்‌ நகலினை நாளை 30.05.2023 ( செவ்வாய்க்கிழமை) பிற்பகல்‌ முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

எப்படி?

தேர்வர்கள் https://dge.tn.gov.in/ என்ற இணையதளத்திற்குச்‌ சென்று Notification-ஐ க்ளிக் செய்தவுடன்‌ HSE Second Year Exam, March/ April 2023 - Scripts Download என்ற வாசகத்தினை "Click" செய்தால்‌ தோன்றும்‌ பக்கத்தில் தங்களது பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதியினைப்‌ பதிவு செய்து தாங்கள்‌ விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின்‌ நகலினைப்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

விடைத்தாள்களின்‌ நகலினை பதிவிறக்கம்‌ செய்த பிறகு மறுகூட்டல்‌ -॥ அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால்‌, இதே இணையதள முகவரியில்‌ "Application for Retotalling/ Revaluation" க்ளிக் செய்து, வெற்று விண்ணப்பத்தினைப்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ள வேண்டும்‌.

தேர்வர்கள்‌ இவ்விண்ணப்பப்‌ படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள்‌ எடுத்து 34.05.2023 ( புதன்கிழமை) பிற்பகல்‌ முதல்‌ 03.06.2023 (சனிக்கிழமை) மாலை 5.00 மணிவரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ ஒப்படைக்க வேண்டும்‌. மறுகூட்டல்‌ மற்றும்‌ மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ பணமாகச்‌ செலுத்த வேண்டும்‌.

புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும்‌ மயிலாடுதுறை மாவட்டங்களில்‌ மறுகூட்டல்‌ -॥ அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ தேர்வர்கள்‌ சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அலுவலகத்தில்‌ விண்ணப்பப்‌ படிவங்களை ஒப்படைத்து, அதற்குரிய கட்டணத்‌ தொகையை பணமாக டசலுத்த வேண்டும்‌.

மறுமதிப்பீடு

பாடம்‌ (ஒவ்வொன்றிற்கும்‌) - ரூ. 505/-

மறுகூட்டல்‌-॥

உயிரியல்‌ பாடம்‌ மட்டும்‌ - ரூ.305/-
ஏனைய‌ பாடங்கள்‌ (ஒவ்வொன்றிற்கும்‌) - ரூ.205/-’’

இவ்வாறு அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ தெரிவித்துள்ளது. 

முன்னதாக மே 8ஆம் தேதி மாநிலம் முழுவதும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
TVK Vijay:
TVK Vijay: "பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி" பதிலடி தருவாரா விஜய்?
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
TVK Vijay:
TVK Vijay: "பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி" பதிலடி தருவாரா விஜய்?
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Embed widget