மேலும் அறிய

சிறுபான்மையினர் மாணவர்கள் விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பிக்கலாம் - சேருவதற்கான தகுதிகள் என்னென்ன?

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர்கள் விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பிக்கலாம் .

தமிழ்நாடு அரசால் தேனி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கு பள்ளி விடுதிகள் 23 (மாணவர்களுக்கு-14, மாணவியர்களுக்கு-9) மற்றும் கல்லூரி விடுதிகள் 6 (மாணவர்களுக்கு-3, மாணவியர்களுக்கு-3) என மொத்தம் 29 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.


சிறுபான்மையினர் மாணவர்கள் விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பிக்கலாம் - சேருவதற்கான தகுதிகள் என்னென்ன?

பள்ளி விடுதிகளில் 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவர், மாணவியர்களும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ,மாணவியர் இவ்விடுதிகளில் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர்.

விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் பின்வரும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

1. அனைத்து விடுதி மாணவ / மாணவியருக்கு மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படும்.
2. 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும்.
3.10-ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் பொருட்டு சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் வினா வங்கி நூல்கள் வழங்கப்படும்.
4.கல்லூரி விடுதிகளில் முதலாம் ஆண்டு தங்கிப் பயிலும் மாணவ / மாணவியருக்கு ஜமக்காளமும், பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ / மாணவியருக்கு ஆண்டுதோறும் பாய்களும் வழங்கப்படும்.
5.மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.


சிறுபான்மையினர் மாணவர்கள் விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பிக்கலாம் - சேருவதற்கான தகுதிகள் என்னென்ன?

விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்

1.பெற்றோர், பாதுகாவலரது  ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல்இருக்கவேண்டும்.       

2.இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்த பட்சம் 8கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு   பொருந்தாது                                                                                                                                                                                                             

3.தகுதியுடைய  மாணவ, மாணவியர்  விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 14.06.2024 சமர்ப்பிக்க வேண்டும். 

கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில்  15.07.2024-க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். 

மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Free Wi-Fi scheme : இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Embed widget