மேலும் அறிய

NEET Exam: நாடு முழுவதும் இன்று நடைபெறும் நீட் தேர்வு.. 20 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு.. கட்டுபாடுகள் என்ன? முழு விவரம்..

2023-24ம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப்படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

2023-24ம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப்படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வை 1.47 லட்சம் பேர் எழுதவுள்ளனர்.  நாடு முழுவதும் 20.87 லட்சம் பேர் தேர்வை எழுதுகின்றனர்.

மருத்துவ படிப்பதற்கான தேசிய தகுதித் தேர்வான நீட் தேர்வின் மூலம் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா ,யுனானி ஆயுர்வேதா, மற்றும் ராணுவ மருத்துவ கல்லூரிகளில் பயிலும் பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையானது நடத்தப்படுகிறது.

 இன்று  நாடு முழுவதும் 499 நகரங்களில்  நடைபெறவுள்ள நீட் தேர்வை எழுத 20 லட்சத்து 87 ஆயிரம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் 95 ஆயிரம் மாணவிகளும், 51 ஆயிரம் மாணவர்களும் என 1.47 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 14 ஆயிரம் பேர் அரசுப்பள்ளி மாணவர்கள் ஆவர். சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 31 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில், 2 மணி முதல் 5.10 மணி வரை நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டில் சுமார் 1.47 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ளது.

மாணவர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ, அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை, மாற்று திறனாளிகளாக இருந்தால் அதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வழக்கம்போல தேர்வுக்கூடங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், முழுக்கை சட்டை, இறுக்கமான, எம்பிராய்டரி போட்ட ஆடைகள், குர்தா, பைஜாமா ஆகியவற்றையும், மாணவிகள், ஜீன்ஸ், லெக்கின்ஸ், காதணி, மூக்குத்தி, மொதிரம், நெக்லஸ், பிரேஸ்லெட், கொலுசு ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு கூடத்திற்கு காலணி அணிந்து செல்லவும் அனுமதி இல்லை. மொபைல் போன், கைக்கடிகாரம், பேனா, பென்சில், பவுச் பாக்ஸ், கால்குலேட்டர், பென் டிரைவ், ப்ளூ டூத், ஸ்மார்ட் வாட்ச் போன்றவற்றை எடுத்துச்செல்லக்கூடாது. இதனிடையே, மணிப்பூரில் கலவரம் காரணமாக, அந்த மாநிலத்தில் தேர்வு மையங்களைக் கொண்ட மாணவர்களுக்கு நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் வேறு ஒரு தேதியில் நீட் தேர்வு நடத்தப்படும் என தேர்வு முகமை அறிவித்துள்ளது.

முகக் கவசம், கையுறை, வெளிப்படையாகத் தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில், 50 மில்லி அளவிலான கை சுத்திகரிப்பான், புகைப்படம் ஒட்டப்பட்ட நுழைவுச் சீட்டு, அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை, தேவையெனில் பிற சான்றிதழ்கள் (மாற்றுத்திறனாளி சான்றிதழ் மாதிரியான) பொருட்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

TN Engineering Admission: பி.இ., பி.டெக். பகுதிநேரப் படிப்புகளுக்கு விண்ணப்பப் பதிவு மும்முரம்; என்ன வழிமுறை?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
Embed widget