மேலும் அறிய

TRB TET Exam 2025: டெட் தகுதி தேர்வு: இன்றே கடைசி! ஆசிரியர் கனவு நிறைவேற இதை மிஸ் பண்ணாதீங்க- விவரம்!

முதல் தாள் எழுதி தேர்ச்சி பெறும் தேர்வர்கள், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் ஆகப் பணியாற்றலாம்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே ( செப்டம்பர் 8ஆம் தேதி) கடைசித் தேதி என டிஆர்பி தெரிவித்துள்ளது. 

டெட் (TET- Teachers Eligibility Test) எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1, தாள் 2 என நடத்தப்படுகிறது. முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர் தகுதித் தேர்வு நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் நடைபெறும் என முந்தைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

தேர்வு எப்போது?

தற்போது நிர்வாக காரணங்களால், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நவம்பர் 15-ம் தேதி (15.11.2025) அன்று தாள் I மற்றும், நவம்பர் 16-ம் தேதி(16.11.2025) அன்று தாள் II-ம் நடைபெறும் என திருத்திய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

முதல் தாள் எழுதி தேர்ச்சி பெறும் தேர்வர்கள், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் ஆகப் பணியாற்றலாம். இரண்டாம் தாளில் தேர்ச்சி பெறுவோர் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றலாம்.

வயது வரம்பு

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க உச்சபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை.

விண்ணப்பக் கட்டணம்

பொதுத் தேர்வர்களுக்கு 600 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. எனினும் எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு 300 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு தாள்களுக்கும் விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், இரண்டு தேர்வுக்கும் தனித்தனியாகத் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம்.

மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று டிஆர்பி தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள்

மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு, இரு தாள்களுக்கும் தனித்தனியாகத் தேர்வு நடத்தப்பட உள்ளது. பொதுப் பிரிவினருக்கு குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். எஸ்சி, பிசி, எம்பிசி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 82 மதிப்பெண்கள் எடுத்தால் போதுமானது, எஸ்டி மாணவர்கள், 60 மதிப்பெண்கள் எடுத்தால் போதும்.

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் https://trb1.ucanapply.com/apply_now என்ற இணைப்பை  க்ளிக் செய்ய வேண்டும்.

அதில், https://trb1.ucanapply.com/register?sub_id=eyJpdiI6InVGbm1xMDJEWUhsWUxrVFdzVE5MRVE9PSIsInZhbHVlIjoiK3ZUd2VXUWVMU1pScjBPZXplc04rUT09IiwibWFjIjoiODhlZTIwYTc0Mzc3NTk1ODg0NDFlNzFlZmFiZWNiYzlkNGNlOTFhMzI5ODUxNmIyNzg0MGEzMjBlMWI0MDNkYyIsInRhZyI6IiJ9 என்ற இணைப்பை க்ளிக் செய்து முதல் தாளுக்கு விண்ணப்பிக்கலாம்.

அதேபோல https://trb1.ucanapply.com/register?sub_id=eyJpdiI6InZ2M3F4WGo1UXpyWkhxU3NZMkJtVUE9PSIsInZhbHVlIjoiT1lRb281WWNMMTlGWDIxSkNNcHZvZz09IiwibWFjIjoiMDMyMDEwMDQ1YjdiMmMyZTY4NmExM2Y0MjNlMDk3NmJjNjBjZmMxZjAzZWQ5MDZiYmNkN2FlYzI2MTZhOWI0YSIsInRhZyI6IiJ9 என்ற இணைப்பின்மூலம் இரண்டாம் தாளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

எனினும் இவை இரண்டிலும் இ - மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை உள்ளிட்டு விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம்.

தொலைபேசி எண்:   1800 425 6753 (10:00 am – 05:45 pm)

முழு விவரங்களுக்கு: https://www.trb.tn.gov.in/admin/pdf/4796496415notific.pdf 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
ABP Premium

வீடியோ

”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Maruti eVitara: மாருதி சுசூகியின் முதல் மின்சார வாகனத்தில் என்ன இருக்கிறது.? இ விதாராவின் அம்சங்கள் விரிவாக..
மாருதி சுசூகியின் முதல் மின்சார வாகனத்தில் என்ன இருக்கிறது.? இ விதாராவின் அம்சங்கள் விரிவாக..
Indian Cars Export Record: வெளிநாடுகளில் பட்டையை கிளப்பும் இந்திய கார்கள்; சாதனையை நோக்கி நடைபோடும் ஏற்றுமதி
வெளிநாடுகளில் பட்டையை கிளப்பும் இந்திய கார்கள்; சாதனையை நோக்கி நடைபோடும் ஏற்றுமதி
உஷார்... ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம்.! 22ஆம் தேதி முதல் செக் - வெளியான முக்கிய அறிவிப்பு
உஷார்... ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம்.! 22ஆம் தேதி முதல் செக் - சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு
TVK Vijay Speech: தூய சக்தி தவெகவிற்கும் .. தீய சக்தி திமுகவிற்கும் இடையே தான் போட்டி- விஜய் அதிரடி
களத்தில் இல்லாதவர்களை தவெக எதிர்க்காது... களத்தில் இருப்பவர்களோடு தான் போட்டியே- விஜய் அதிரடி
Embed widget