கரூர் மாவட்டத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு தற்காலிக இடம் - ஆட்சியர் நேரில் பார்வை
அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்பொழுது தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது. அதனை தற்காலிகமாக அரசு சொந்தமான இடங்களில் பரிசீலிக்கப்பட்டு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் ஆண்டிப்பட்டிக் கோட்டை பழைய மேல்நிலைப்பள்ளியில் அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்காலிகமாக கல்லூரி நடத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தற்பொழுது அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்பொழுது தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது. அதனை அரசு சொந்தமான இடங்களில் பரிசீலிக்கப்பட்டு ஆண்டிப்பட்டிக்கோட்டை உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக இயங்குவதற்கு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விரைவில் இடம் தேர்வு செய்து நிரந்தர கட்டடம் அமைக்கப்படும் அதுவரை தற்காலிகமாக இயங்கி வரும் என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திருச்சி மண்டல இணை இயக்குனர் (உயர்கல்வித்துறை) குணசேகரன், செயற்பொறியாளர் சிவக்குமார், அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வசந்தி மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், இரயில்வே மற்றும் வங்கி பணியாளர்
போட்டித்தேர்வுகளுக்கு “நான் முதல்வன்“ திட்டத்தின் வாயிலாக இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளது தொடர்பான செய்தி குறிப்பு.
கரூர், மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின்“நான் முதல்வன்” திட்டத்தின் போட்டித் தேர்வுகளாகிய மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC), இரயில்வே தேர்வு குழுமம் (RRB), வங்கி பணியாளர் தேர்வு குழுமம் (IBPS) உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வெற்றி பெற ஏதுவாக இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளது.இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள www. naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் 20.05.2023 க்குள் மாணவர்கள் தங்களின் விவரங்கள் முன்பதிவு செய்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பயிற்சி வகுப்புகள் மே மாதம் 25ஆம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகி வரும் கரூர் மாவட்டவேலை தேடும் இளைஞர்கள் மேற்குறித்த இணையதளத்தில் முன்பதிவு செய்துகொண்டு பயனடையுமாறு கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
கோடை விடுமுறையை முன்னிட்டு கணினி அடிப்படை கற்றல் நிகழ்ச்சி.
கரூர் மாவட்ட மைய நூலகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு அடிப்படை கணினி கற்றல் பயிற்சி நடைபெற்றது. கரூர் மாவட்ட மைய நூலகத்தில் கடந்த சில நாட்களாக மாணவ மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நடத்தப்பட்டு, பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடிப்படை கணினி கட்டண நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மையம் நூலகர் சுகன்யா வரவேற்றார். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் சக்திவேல் வாழ்த்தி பேசினார். கரூர் கோட்டை மைய இயக்குனர் குமார் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு அடிப்படை கணினி கற்றல் பயிற்சி அளித்தார். மேலும் ஐஸ்வர்யா கலந்து கொண்டு கணினியில் எம்எஸ் வேர்ட், எக்ஸெல் பெயிண்ட் போன்றவற்றை மாணவ மாணவிகளுக்கு கற்றுக் கொடுத்தார். இறுதியில் மாணவ மாணவிகள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள் குழந்தைகள் மற்றும் மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டார் நூலகர் கார்த்தி நிவாஸ் நன்றி கூறினார்.