TANCET 2025 Result: எம்பிஏ, எம்சிஏ சேர்க்கை; டான்செட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு- காண்பது எப்படி?
TANCET 2025 Exam Result Date: டான்செட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. தேர்வர்கள் தங்களின் மதிப்பெண் அட்டைகளை மே 7 முதல் ஜூன் 6ஆம் தேதி வரை பெறலாம்.

எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் டான்செட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. இதைக் காண்பது எப்படி? பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் எம்பிஏ, எம்சிஏ ஆகிய முதுகலைப் படிப்புகளில் சேர நடத்தப்பட்ட டான்செட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
எம்பிஏ, எம்சிஏ மாணவர் சேர்க்கை
இந்தத் தேர்வின் மூலம்தான், தமிழ்நாட்டில் உள்ள பிற பல்கலைக்கழகங்கள், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
2025ஆம் ஆண்டுக்கான எம்சிஏ படிப்புக்கான டான்செட் தேர்வு மார்ச் 22ஆம் தேதி காலை நடைபெற்ற நிலையில், எம்பிஏ படிப்புக்கு மார்ச் 22ஆம் தேதி மதியம் தேர்வு நடந்தது. சீட்டா தேர்வு மார்ச் 23ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற்றது. இதற்காக மாநிலம் முழுவதும் 15 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.
மதிப்பெண் அட்டை எப்போது?
தேர்வர்கள் தங்களின் இறுதி விடைக் குறிப்பை, https://tancet.annauniv.edu/tancet/cmshall/status1.php என்ற பக்கத்தில் கண்டு அறியலாம்.
இந்த நிலையில் தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. தேர்வர்கள் தங்களின் மதிப்பெண் அட்டைகளை மே 7 முதல் ஜூன் 6ஆம் தேதி வரை பெறலாம்.
TANCET 2025 தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்வது எப்படி?
- தேர்வர்கள், அதிகாரப்பூர்வ வலைத்தளமான tancet.annauniv.edu ஐப் பார்வையிடவும்.
- முகப்புப் பக்கத்தில், TANCET 2025 தேர்வு முடிவுகளை இணைப்பில் கிளிக் செய்யவும்.
- உங்கள் லாகின் விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
- தேர்வு முடிவுகளை சரிபார்த்து, பதிவிறக்கம் செய்யவும்.
- எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
தொலைபேசி எண்கள்: 044 – 22358314 / 22358289
இ- மெயில் முகவரி: tanceeta@gmail.com
கூடுதல் தகவல்களுக்கு: https://tancet.annauniv.edu/tancet/index.html

