மேலும் அறிய

12th Supplementary Exam Hall Ticket: பிளஸ் 2 துணைத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; ஆன்லைனிலேயே பெறலாம்- எப்படி?

Tamilnadu 12th Supplementary Exam 2024 Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகி உள்ளது. இதை ஆன்லைனிலேயே பெறலாம்.

மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு எனப்படும் 12ஆம் வகுப்பு துணைத்‌ தேர்வு ஜூன்‌, ஜூலை மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தனித்தேர்வர்கள்‌ தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டுகளை இணையதளம்‌ மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மாநிலக் கல்வி பாடத் திட்டத்தில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகள், மே 6ஆம் தேதி வெளியான நிலையில், பொதுத் தேர்வில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றனர். மீதமுள்ள 5.44 சதவீத மாணவர்களுக்கு துணைத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டன. 

இந்த மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூன் 24 முதல் ஜூலை 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த நிலையில் துணைத் தேர்வை எழுத விண்ணப்பித்தத்‌ தனித்தேர்வர்கள்‌ தங்களது தேர்வுக்‌ கூட நுழைவுச்‌ சீட்டுகளை இன்று (புதன்கிழமை) முதல்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின்‌ மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌.

ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?

* தனித்தேர்வர்கள்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச்‌ செல்ல வேண்டும்.

* அதில், "HALL TICKET" என்ற வாசகத்தினை க்ளிக் செய்ய வேண்டும்.

*அவ்வாறு செய்தால்‌ தோன்றும்‌ "HSE SECOND YEAR SUPPLEMENTARY EXAM, JUNE/ JULY 2024 - HALL TICKET DOWNLOAD" என்ற வாசகத்தை க்ளிக் செய்ய வேண்டும்.

*அவ்வாறு தோன்றும்‌ பக்கத்தில்‌ தங்களது விண்ணப்ப எண் (Application Number) அல்லது நிரந்தரப்‌ பதிவெண்‌ (Permanent Register No.) மற்றும்‌ பிறந்த தேதியினைப்‌ (Date of Birth‌) பதிவு செய்ய வேண்டும். அல்லது https://apply1.tndge.org/private-hall-ticket-revised என்ற இணைப்பை க்ளிக் செய்தும் தேவையான தகவல்களை உள்ளீடு செய்யலாம். 

* இவ்வாறு செய்வதன் மூலம் தங்களுடைய தேர்வுக்‌ கூட நுழைவுச்‌ சீட்டைப்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

செய்முறைத்‌ தேர்வுகள் எப்போது?

செய்முறைத்‌ தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத்‌ தனித்தேர்வர்கள்‌ தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின்‌ முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும்‌. உரிய தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும்‌ தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்‌ என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.dge.tn.gov.in/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget