மேலும் அறிய

Tamilkudal Program: அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் 3 தமிழ்க்கூடல் நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவு; விதிகள் வெளியீடு

தமிழகத்தில் உள்ள 6,218 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டுக்கு 3 தமிழ்க்கூடல் நிகழ்ச்சிகள் நடத்த, ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.9 ஆயிரம் வீதம் ரூ.5.59 கோடி நிதி ஒதுக்கி அரசு ஆணையிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 6,218 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டுக்கு 3 தமிழ்க்கூடல் நிகழ்ச்சிகள் நடத்த, ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.9 ஆயிரம் வீதம் ரூ.5.59 கோடி நிதி ஒதுக்கி அரசு ஆணையிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி குறித்து சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். 

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

’’தமிழகத்தில் உள்ள 6,218 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டுக்கு 3 தமிழ்க்கூடல் நிகழ்ச்சிகள் நடத்த, ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.9 ஆயிரம் வீதம் ரூ.5.59 கோடி நிதி ஒதுக்கி அரசு ஆணையிட்டுள்ளது. இவற்றை நடத்த முதுகலை தமிழாசிரியரை நியமிக்க வேண்டும். அவருடன், தலைமை ஆசிரியர்கலந்து ஆலோசித்து, நிகழ்ச்சிகளை முடிவு செய்துகொள்ள வேண்டும்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில்‌ 19.04.2022-ஆம்‌ நாளன்று நடைபெற்ற 2022-2023 ஆம்‌ ஆண்டு தமிழ்‌ வளர்ச்சி மானியக்‌ கோரிக்கையின்போது தொழில்துறை அமைச்சர்‌ பின்வரும்‌ அறிவிப்பினை வெளியிட்டார்:

"அரசுப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களிடையே தமிழ்‌ மொழியின்‌ தொன்மை, இலக்கண இலக்கியங்கள்‌ மீது பற்றும்‌ ஆர்வமும்‌ ஏற்படுத்திடும்‌ வகையிலும்‌ தமிழுக்குத்‌ தொண்டாற்றிய தமிழறிஞர்களைப்‌ பற்றி அறிந்து கொள்ளும்‌ வகையிலும்‌ தமிழ்நாடு முழுவதிலும்‌ உள்ள 6218 அரசு உயர்நிலைப்‌ பள்ளி மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ உள்ள தமிழ் மன்றம் மேம்படுத்தப்படும். அதற்காக ஒவ்வொரு பள்ளியிலும்‌ ஆண்டுக்கு மூன்று தமிழ்க் கூடல்‌ நடத்த ஆண்டுதோறும்‌ பள்ளி ஒன்றுக்கு ரூபாய்‌ 9000/- வீதம்‌ நிதியுதவி வழங்கப்படும்‌. இதற்கெனத்‌ தொடர்‌ செலவினமாக ரூபாய்‌ 5.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது."

5.59 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதிலும்‌ உள்ள 6218 அரசு உயர்‌/மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ உள்ள தமிழ்‌ மன்றத்தை மேம்படுத்தி, ஒவ்வொரு பள்ளியிலும்‌ ஆண்டுக்கு 3 தமிழ்க் கூடல்‌ நடத்திட அனுமதி அளிக்கப்படுகிறது.‌ அதற்கான செலவினங்களை மேற்கொள்ள தொடர்‌ செலவின வகைப்பாட்டில்‌ ஆண்டுதோறும்‌ பள்ளி ஒன்றுக்கு ரூ.9000/- (ரூபாய்‌ ஒன்பதாயிரம்‌ மட்டும்‌) வீதம்‌ பள்ளிக்‌ கல்வி இயக்குநர்‌ வாயிலாக தமிழ்நாடு முழுவதிலும்‌ உள்ள முதன்மைக்‌ கல்வி அலுவலருக்கு வழங்கி அவ்வலுவலகம்‌ வாயிலாக தற்போதுள்ள 6218 அரசு உயர்‌/மேல்நிலைப்‌ பள்ளிகளுக்கு மொத்தம்‌ ரூ.5,59,62,000/-க்கு (ரூபாய்‌ ஐந்து கோடியே ஐம்பத்தொன்பது இலட்சத்து அறுபத்து இரண்டாயிரம்‌ மட்டும்‌) கீழ்க்காணும்‌ நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

* தமிழ்க்கூடல்‌ நிகழ்ச்சி நடத்த ஒவ்வொரு பள்ளியிலும்‌ பணியாற்‌றும்‌ முதுநிலை தமிழாசிரியர்‌ ஒருவரை அப்பள்ளியின்‌ தலைமையாசிரியர்‌ நியமிக்க வேண்டும்‌. ஒவ்வொரு ஆண்டும்‌ நடத்தப்பெறும்‌ 3 தமிழ்க்கூடல்‌ நிகழ்ச்சிகள்‌ தொடர்பாக அந்தந்த பள்ளிகளின்‌ தலைமை ஆசிரியரும்‌ முதுநிலை தமிழாசிரியரும்‌ கலந்து ஆலோசித்து முடிவுசெய்து கொள்ள வேண்டும். 

* ஒவ்வொரு ஆண்டும்‌ தமிழ்க்கூடல்‌ நடத்தப்பெறுவதை அந்தந்த மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ உறுதிப்படுத்தப்பட வேண்டும்‌.

* ஒவ்வொரு ஆண்டும்‌ தமிழ்க்கூடல்‌ நிகழ்ச்சி நடத்தப்பட்டமைக்கான செலவின விவரங்களையும்‌, பயனீட்டுச்‌ சான்றிதழையும்‌ இயக்குநருக்கு அனுப்ப வேண்டும்‌.

* எக்காரணத்தைக்‌ கொண்டும்‌ அத்தொகையினை பிற இனங்களுக்கு பயன்படுத்தக்‌ கூடாது.

இவ்வாறு அறிவொளி தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Quarterly Exam Holiday : மாணவர்களே ரெடியா? நாளை காலாண்டு தேர்வு… அடுத்து இத்தனை நாள் தொடர் விடுமுறையா.? இதோ சூப்பர் தகவல்
மாணவர்களே ரெடியா? நாளை காலாண்டு தேர்வு… அடுத்து இத்தனை நாள் தொடர் விடுமுறையா.? இதோ சூப்பர் தகவல்
தமிழக அரசின் ₹36 லட்சம் கல்வி உதவித்தொகை: தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முழு விவரம்..
தமிழக அரசின் ₹36 லட்சம் கல்வி உதவித்தொகை: தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முழு விவரம்..
15 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சமூக வலைதளம் பயன்படுத்த தடையா? - அரசுக்கு சௌமியா அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை!
15 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சமூக வலைதளம் பயன்படுத்த தடையா? - அரசுக்கு சௌமியா அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: செலவை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - தினகரன்
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: செலவை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - தினகரன்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Sekar Babu : மாஜி அமைச்சர் சேகர்பாபுக்கு குறிவைத்த விஜய்.! 6 பிரிவில் வழக்கு -சுற்றிவளைக்கும் போலீஸ்- அடுத்தது என்ன.?
மாஜி அமைச்சர் சேகர்பாபுக்கு குறிவைத்த விஜய்.! 6 பிரிவில் வழக்கு -சுற்றிவளைக்கும் போலீஸ்- அடுத்தது என்ன.?
Brics Summit: ப்ரிக்ஸ் மாநாட்டை நடத்தி முடித்த இந்தியா..! வன்மத்தை கக்கிய மேற்கத்திய ஊடகங்கள் - பயம் காரணமா?
ப்ரிக்ஸ் மாநாட்டை நடத்தி முடித்த இந்தியா..! வன்மத்தை கக்கிய மேற்கத்திய ஊடகங்கள் - பயம் காரணமா?
Vijay Sethupathi: வாய்விட்ட விஜய் சேதுபதி..! வீடு கட்டி அடித்த தவெகவினர் - பிக்பாஸ் சர்ச்சைக்கு விஜய் டிவி விளக்கம்
வாய்விட்ட விஜய் சேதுபதி..! வீடு கட்டி அடித்த தவெகவினர் - பிக்பாஸ் சர்ச்சைக்கு விஜய் டிவி விளக்கம்
TN Weather News: 9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங், சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங், சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
சிஎம் விஜய் பெயரில் ‘AI Deep Fake’ வீடியோ.! யார் அந்த குற்றவாளி- ராஜஸ்தானில் தட்டி தூக்கிய போலீஸ்
சிஎம் விஜய் பெயரில் ‘AI Deep Fake’ வீடியோ.! யார் அந்த குற்றவாளி- ராஜஸ்தானில் தட்டி தூக்கிய போலீஸ்
CM Vijay: ஒரே நாளில் ரூ.12,300 கோடி முதலீடுகளை ஈர்த்த CM விஜய்; எந்தெந்த கம்பெனிகள்.? இவ்வளவு வேலைவாய்ப்புகளா.?
ஒரே நாளில் ரூ.12,300 கோடி முதலீடுகளை ஈர்த்த CM விஜய்; எந்தெந்த கம்பெனிகள்.? இவ்வளவு வேலைவாய்ப்புகளா.?
OLD AGE PENSION : அடி தூள்.! காத்திருந்த ஓய்வூதியதார்களுக்கு குட் நியூஸ்.! வங்கி கணக்கில் பணம் போட்டாச்சு- தமிழக அரசு அசத்தல்
அடி தூள்.! காத்திருந்த ஓய்வூதியதார்களுக்கு குட் நியூஸ்.! வங்கி கணக்கில் பணம் போட்டாச்சு- தமிழக அரசு அசத்தல்
Quarterly Exam Holiday : மாணவர்களே ரெடியா? நாளை காலாண்டு தேர்வு… அடுத்து இத்தனை நாள் தொடர் விடுமுறையா.? இதோ சூப்பர் தகவல்
மாணவர்களே ரெடியா? நாளை காலாண்டு தேர்வு… அடுத்து இத்தனை நாள் தொடர் விடுமுறையா.? இதோ சூப்பர் தகவல்
Embed widget