மேலும் அறிய

முக்கால்வாசி கல்லூரி, பல்கலை.களில் பேராசிரியர், முதல்வர், துணைவேந்தர் பணியிடங்கள் காலி; எச்சரிக்கை மணி

188 கல்லூரிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 7,500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன- வேல்முருகன்.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது:

’’தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப உயர்கல்வித்துறை அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் தக்க ஆலோசனைகளை வழங்கி, ஆளுநரை நேரில் சந்தித்து, துணைவேந்தர் நியமனம் தொடர்பான கடந்த கால சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இந்தியாவில் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு 49 சதவீதத்துடன் முன்னிலையில் உள்ளது. தேசிய சராசரி 28 சதவீதமாக உள்ள நிலையில், கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 54 சதவீதம் வரை உயர்ந்திருந்தது.

மொத்தம் 61 பல்கலைக்கழகங்கள்

தமிழ்நாட்டில் 22 மாநிலப் பல்கலைக்கழகங்கள் உள்பட மொத்தம் 61 பல்கலைக்கழகங்கள் உள்ளன. உயர்கல்வித் துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதில், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (சென்னை), சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருப்பூர் அன்னை தெரேசா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 11 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ளது.

16-ல் துணைவேந்தர் பதவி காலி

இதோடு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் துணைவேந்தர் பதவி நிரப்பப்படவில்லை. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 22 பல்கலைக்கழகங்களில் 16-ல் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது.

கடந்த ஆட்சியில் ஆளுநர் ரவி பொறுப்பேற்ற பிறகு, துணைவேந்தர்களை தேர்வு செய்யும் தேடல் குழுவில் யு.ஜி.சி. விதிகளின்படி யு.ஜி.சி. பிரதிநிதிகளை கூடுதலாக சேர்க்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இதற்கு அப்போதைய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. தன்னிச்சையாக தேடல் குழுவை நியமித்து ஆளுநருக்கு அனுப்புவது, ஆளுநர் நிராகரிப்பது என ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன.

இதையும் வாசிக்கலாம்: Re NEET 2026: நீட் மறு தேர்வு; மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பை அறிவித்த NTA- கால அவகாசம் நீட்டிப்பு!  

105 கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் காலி

தமிழ்நாட்டில் 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் என மொத்தம் 188 அரசு கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 105 கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் நிரப்பப்படவில்லை. பொறுப்பு முதல்வர்களை கொண்டே கல்லூரிகள் இயங்கி வருகின்றன. முதல்வர் நியமன விவகாரத்தில் பதவி மூப்பு தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வந்த பிறகும், அதிகாரிகள் முதல்வர்களை நியமிக்க ஆர்வம் காட்டவில்லை.

தற்போது 7,500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலி

188 கல்லூரிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 7,500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்தியாவிலேயே பழமையான பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தில் 67 சதவீதம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 65%, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 60%, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 55%, அழகப்பா பல்கலைக்கழகத்தில் 42%, அண்ணா பல்கலைக்கழகத்தில் 34% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

துணைவேந்தர் பதவி காலியாக இருப்பதால், செனட், சிண்டிகேட் கூட்டங்கள் நடைபெற முடியாமல் பல்கலைக்கழகங்களின் நிர்வாகமும் கல்விப் பணிகளும் முடங்கியுள்ளன. சென்னை மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவே ஒவ்வொரு மாதமும் திண்டாட்டம் நிலவுகிறது.

ஆராய்ச்சி நிதி பெற முடியாத நிலை

துணைவேந்தர்கள் இல்லாததால் NIRF, NAAC போன்ற தரவரிசைப் பட்டியல்களில் கவனம் செலுத்த முடியவில்லை. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டங்களைப் புதுப்பிக்க முடியவில்லை. புதிய பாடத்திட்டங்களுக்கு அனுமதி பெற முடியவில்லை. சர்வதேச ஆராய்ச்சித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், ஆராய்ச்சி நிதி பெறவும் முடியாத நிலை உள்ளது.

துணைவேந்தர், முதல்வர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களின் பெருமளவு காலிப்பணியிடங்கள் காரணமாக தமிழ்நாட்டின் உயர்கல்வியின் வளர்ச்சி ஒட்டுமொத்தமாக முடங்கியுள்ளது. உயர்கல்வியில் அதிக மாணவர்களைச் சேர்ப்பது மட்டும் சாதனையல்ல; பட்டம் முடித்து வெளியேறும் மாணவர்களுக்கு கல்விக்கு ஏற்ற வேலைவாய்ப்பு கிடைப்பதுதான் உண்மையான வளர்ச்சியின் அளவுகோலாகும்.

எனவே, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப உயர் கல்வித்துறை அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் தக்க ஆலோசனைகளை வழங்கி, ஆளுநரை நேரில் சந்தித்து, துணைவேந்தர் நியமனம் தொடர்பான கடந்த கால சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’.

இவ்வாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
இனி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! பாலுடன் சாக்லேட் ஹெல்த் மிக்ஸ் வழங்கும் புதுச்சேரி அரசு!
இனி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! பாலுடன் சாக்லேட் ஹெல்த் மிக்ஸ் வழங்கும் புதுச்சேரி அரசு!
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Kovai TVK Issue : பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்
Ariyalur Farmer Suicide : தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
Student Attack : +2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
Embed widget