(Source: ECI/ABP News/ABP Majha)
FB Page Hacked: பள்ளிக் கல்வித்துறையின் ஃபேஸ்புக் பக்கம் முடக்கம்: விஜய் படக் காட்சிகளைப் பதிவேற்றியதால் அதிர்ச்சி!
TN School Education Department FB Page Hacked: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் ஃபேஸ்புக் பக்கத்தை மர்ம நபர்கள் சிலர் முடக்கி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் ஃபேஸ்புக் பக்கத்தை மர்ம நபர்கள் சிலர் முடக்கி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பக்கம் முடக்கப்பட்டு, நடிகர் விஜயின் மாஸ்டர் படக் காட்சிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சமூக வலைதளங்களில் முழுவீச்சுடன் இயங்கி வருகிறது. குறிப்பாக ஃபேஸ்புக், எக்ஸ் தளங்களில் தொடர்ந்து போஸ்ட்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
அரசின் நலத் திட்டங்கள், சாதனை மாணவ - மாணவிகளின் பேட்டிகள், நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுகள் குறித்த விவரங்கள் எனப் பல்வேறு தகவல்கள் இந்த பக்கங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
நடிகர் விஜயின் மாஸ்டர் படக் காட்சிகள்
இந்த நிலையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் ஃபேஸ்புக் பக்கத்தை மர்ம நபர்கள் சிலர் முடக்கி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பக்கம் முடக்கப்பட்டு, நடிகர் விஜயின் மாஸ்டர் படக் காட்சிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ’மாஸ்டர்’ படத்தின் காட்சிகள் தனித்தனி வீடியோவாக இந்தி மொழியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
டிஜிபி அலுவலகத்தில் புகார்
ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது குறித்து, பள்ளிக் கல்வித்துறை சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாம்: Govt School Admission: அரசுப் பள்ளிகளுக்குப் படையெடுக்கும் மாணவர்கள்; 10 நாளில் 1 லட்சத்தை நெருங்கும் எண்ணிக்கை