RTE சேர்க்கை: பெற்றோர்கள் அதிர்ச்சி! தனியார் பள்ளிகளுக்கு பேரிடி! தமிழக அரசு அறிவிப்பால் குழப்பம்!
Tamil Nadu RTE Admission 2025-26: , நாங்களாகவே சேர்த்த மாணவர்களை வெளியேற்றி, அவர்களின் பணத்தை திருப்பி அளித்து, இந்த மாணவர்களின் மொத்த தொகையையும் பின்நாளில் பெற்றுக்கொள்ள சொல்வது நியாயம் இல்லை.

RTE 2025-26 ஆம் ஆண்டு சேர்க்கையை எதிர்பார்த்து காத்திருந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், தனியார் பள்ளிகளுக்கும் பெரும் நிதி இழப்பு ஏற்படும் என தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.
பொதுவாக RTE திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிக்கை April மாதமே வெளியிட்டு E- Service Centres வழியாக பொதுமக்கள் விண்ணப்பிக்க Website Open செய்யப்படும்.
ஆனால் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வரும் RTE Admission தமிழகத்தில் மட்டும் இந்த கல்வி ஆண்டிற்கு நடக்கவில்லை. RTE சம்மந்தப்பட்ட வழக்குகள் முடிந்து எப்படியும் சேர்க்கை அறிவிப்பு வெளிவரும் என தமிழகம் முழுவதும் சுமார் 75,000 குழந்தைகள் RTE க்கான அனைத்து சான்றிதழ்களையும் விண்ணப்பித்து பெற்று, தனியார் பள்ளிகளில் சேர்வதற்காக காத்திருக்கிறார்கள். இவர்களில் சிலர் அரசு அங்கன்வாடிகளிலும், சிலர் Play School-லிலும் இன்னும் சிலர் வீடுகளிலும் உள்ளனர். அவர்களின் எண்ணத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை பேரிடியை இறக்கியுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கான தண்டனை
2013-14 ஆம் ஆண்டு முதல் RTE Admission செய்துவரும் தனியார் பள்ளிகளும் வழக்குகள் முடிந்து RTE Admission அறிவிப்பு வெளியானால் மேலும் 25% இடங்களுக்கான Admission LKG க்கு வரும் என காத்திருந்தன. ஆனால், தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள RTE சேர்க்கை அறிவிப்பு என்பது தனியார் பள்ளிகளுக்கான தண்டனையாகவே பார்க்கப்படுகிறது.
ஆம், கூடுதலாக 25% இடங்களில் புதிதாக RTE சேர்க்கை செய்யலாம் என்ற நிலை பறிபோய், தற்போது அந்தந்த பள்ளிகளில் REGULAR முறையில் பணம் செலுத்தி படித்து வரும் மாணவர்களில் 25% மாணவர்களை அதில் இருந்து வெளியேற்றி RTEயில் Admission செய்து, அம்மாணவர்கள் இதுவரை செலுத்திய பணத்தை திரும்ப தர வேண்டுமாம். இவர்களுக்கான பணத்தை அரசு பிறகு தருமாம். ஆனால் எப்போது தரும்? – முதல் ஆண்டில் தருமா? இரண்டாம் ஆண்டில் தருமா? என்பதற்கான எவ்வித உத்தரவாதமும் இல்லை. இது என்ன மாதிரியான செயல்திட்டம்?.
பெற்றுக்கொள்ள சொல்வது நியாயமா?
இதுவரை தமிழக அரசு, தனியார் பள்ளிகளில் சேர்த்த Extra 25% RTE மாணவர்களுக்கான தொகையை பின்நாளில் வழங்கி வந்ததை ஏற்கலாம். ஆனால், இப்போது நாங்களாகவே சேர்த்த மாணவர்களை REGULAR-ல் இருந்து வெளியேற்றி, அவர்களின் பணத்தை திருப்பி அளித்து, இந்த மாணவர்களின் மொத்த தொகையையும் பின்நாளில் பெற்றுக்கொள்ள சொல்வது நியாயம் இல்லை.
RTE திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியே ஆகவேண்டும் என உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டதால், எங்கள் பள்ளிகளில் நாங்களே Canvass செய்து சேர்த்த மாணவ மாணவியரை, RTE திட்டத்தில் மாற்றி Admission செய்து EMIS ல் பதிவிட வேண்டுமாம். இதன்மூலம் தமிழக அரசுக்கு உதவுவதற்காக தனியார் பள்ளிகள் நிதி இழப்பை சந்திக்க நிர்ப்பந்திக்கப்படுகிறது.
என்ன செய்ய வேண்டும்?
இந்த அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும். கடந்த ஆண்டுகளைப் போல் Open முறையில் பொது அறிவிப்பு வெளியிட்டு புதிதாக RTE சேர்க்கை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் RTE யில் சேர தயார் நிலையில் காத்திருக்கும் சுமார் 75,000 புதிய மாணவ மாணவியர்கள் LKG முதல் 8 ஆம் வகுப்புவரை இலவச கல்வியை பெறுவார்கள். தனியார் பள்ளிகளுக்கும் எவ்வித நிதி இழப்பும் ஏற்படாது.
இக்கோரிக்கையை தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.






















