மேலும் அறிய

TNPSC Results Schedule: ஏப்ரலில் குரூப் 1 உள்ளிட்ட 9 தேர்வுகளின் முடிவுகள் வெளியீடு; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு- முழு அட்டவணை இதோ!

ஏப்ரல் மாதத்தில் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு உள்ளிட்ட 9 தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு உள்ளிட்ட 9 தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்துடன் மொத்தம் 17 வகையான தேர்வுகளின் முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்ற அட்டவணையும் வெளியாகி உள்ளது. 

தேர்வர்கள் கூடுதல் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in/static_pdf/document/Result_Schedule.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, டிஎன்பிஎஸ்சியின் முழு அட்டவணையைக் காணலாம். 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி ) மூலம் பல்வேறு அரசுத் துறைகளுக்கான பணிகளில் உள்ள காலியிடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்பட்டு வருகின்றன. இதற்கான தேர்வு அட்டவணையையும் தேர்வு முடிவுகள் வெளியாகும் உத்தேச அட்டவணையையும் டிஎன்பிஎஸ்சி அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 17 வகையான தேர்வுகளின் முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்ற அட்டவணை நேற்று இரவு (ஏப்ரல் 18) வெளியாகி உள்ளது. 

டிசம்பரில் குரூப் 2 தேர்வு முடிவுகள்

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடந்த  குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்தாண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்று தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியிடப்பட்டன. இதில் 57,641 பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்களில்  55,071 பேர் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்த தேர்வு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் இவர்களுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளன.

பிற தேர்வுகள்

77 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப் VII- Bக்கான தேர்வு (நிர்வாக அதிகாரி) அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி வெளியானது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி இதற்கான தேர்வுகள் நடைபெற்றன. அதே ஆண்டு நவம்பரில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 2023 ஏப்ரலில் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. 

அதேபோல் குரூப் -8 (நிர்வாக அதிகாரி) தேர்வுகளுக்கான அறிவிப்பு மே மாதம் 20 ஆம் தேதி வெளியாகி, செப்டம்பர் 11 ஆம் தேதி தேர்வு நடைபெற்றது.  அதே ஆண்டு நவம்பரில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 2023 ஏப்ரலில் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. 

குரூப் 1 தேர்வு 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு நடைபெற்றது. 92 பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வை 1,90,957 பேர் எழுதியிருந்தனர். 

5 மாதங்களை கடந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் வெளியாகாமல் இருந்ததால் தேர்வு எழுதியவர்கள் கவலையடைந்தனர். இந்நிலையில் தற்போது, குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 பணியிடங்களுக்கான குரூப் 6 தேர்வு (தமிழ்நாடு வனத்துறை துணை வனப் பயிற்சியாளர் பணி) டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகள் ஏப்ரலில் வெளியாக உள்ளன. 

தமிழ்நாடு செயலக சேவை குரூப் V - A பணிக்கான தேர்வு (உதவி பகுதி அலுவலர்) டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாக உள்ளன. 

TNPSC Results Schedule: ஏப்ரலில் குரூப் 1 உள்ளிட்ட 9 தேர்வுகளின் முடிவுகள் வெளியீடு; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு- முழு அட்டவணை இதோ!

தேர்வர்கள் கூடுதல் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in/static_pdf/document/Result_Schedule.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, டிஎன்பிஎஸ்சியின் முழு அட்டவணையைக் காணலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kanguva:
Kanguva: "கங்குவா படத்தின் முதல் அரைமணி நேரம் சுமார்தான்.. ஆனால்" சூர்யா மனைவி ஜோதிகா ஆதங்கம்
தூள் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி; குரூப் 1, 1ஏ, குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இதுதான் விஷயம்!
தூள் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி; குரூப் 1, 1ஏ, குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இதுதான் விஷயம்!
TN UYEGP Scheme: இளைஞர்களுக்கான ஜாக்பாட்..! ரூ.15 லட்சம் வரை கடன், ரூ.3.75 லட்சம் மானியம் - வாரிக் கொடுக்கும் தமிழக அரசு
TN UYEGP Scheme: இளைஞர்களுக்கான ஜாக்பாட்..! ரூ.15 லட்சம் வரை கடன், ரூ.3.75 லட்சம் மானியம் - வாரிக் கொடுக்கும் தமிழக அரசு
Tamilnadu RoundUp: விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தீவிர எதிர்ப்பு, மதுரையில் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu RoundUp: விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தீவிர எதிர்ப்பு, மதுரையில் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanguva:
Kanguva: "கங்குவா படத்தின் முதல் அரைமணி நேரம் சுமார்தான்.. ஆனால்" சூர்யா மனைவி ஜோதிகா ஆதங்கம்
தூள் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி; குரூப் 1, 1ஏ, குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இதுதான் விஷயம்!
தூள் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி; குரூப் 1, 1ஏ, குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இதுதான் விஷயம்!
TN UYEGP Scheme: இளைஞர்களுக்கான ஜாக்பாட்..! ரூ.15 லட்சம் வரை கடன், ரூ.3.75 லட்சம் மானியம் - வாரிக் கொடுக்கும் தமிழக அரசு
TN UYEGP Scheme: இளைஞர்களுக்கான ஜாக்பாட்..! ரூ.15 லட்சம் வரை கடன், ரூ.3.75 லட்சம் மானியம் - வாரிக் கொடுக்கும் தமிழக அரசு
Tamilnadu RoundUp: விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தீவிர எதிர்ப்பு, மதுரையில் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu RoundUp: விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தீவிர எதிர்ப்பு, மதுரையில் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
உக்கிரமடையும் போராட்டம்! தண்ணீர் தொட்டி மேல் மண்ணெண்ணெய் கேன்களுடன் மக்கள் - மதுரையில் நடப்பது என்ன?
உக்கிரமடையும் போராட்டம்! தண்ணீர் தொட்டி மேல் மண்ணெண்ணெய் கேன்களுடன் மக்கள் - மதுரையில் நடப்பது என்ன?
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
Embed widget