மேலும் அறிய

மருத்துவக் படிப்புகளுக்கு கடும் போட்டி! புதுச்சேரி சென்டாக்கில் ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிப்பு!

புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு சென்டாக்கில் விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன.

புதுச்சேரி: எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு சென்டாக்கில் விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன.

புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் (BDS), ஆயுர்வேதம் (BAMS) மற்றும் கால்நடை மருத்துவம் (B.V.Sc) உள்ளிட்ட தொழில்முறை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் சென்டாக் (CENTAC) வாயிலாகப் பெறப்பட்டு வரும் நிலையில், நாடு முழுவதிலும் இருந்து மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். மாணவர்கள் www.centacpuducherry.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் கடந்த 30-ஆம் தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பப் பதிவு தொடங்கி நான்கு நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

3,487 பேர் பதிவு; 2,204 பேர் சமர்ப்பிப்பு!

நேற்று வரையிலான நிலவரப்படி, மொத்தம் 3,487 மாணவர்கள் இணையவழியில் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 2,204 மாணவர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர்.

ஒதுக்கீடு வாரியாகப் பெறப்பட்ட விண்ணப்பங்கள்:

  • அரசு ஒதுக்கீடு: 439
  • அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு: 210
  • நிர்வாக ஒதுக்கீடு: 1,517
  • வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) பிரிவு: 33

மாநில அளவிலான விண்ணப்ப விவரங்கள்:

பிராந்திய ரீதியாகப் பார்க்கும்போது, புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த உள்ளூர் மாணவர்கள் 649 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல, பிற மாநிலங்களைச் சேர்ந்த 1,517 மாணவர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

மேலும், சிறப்புப் பிரிவுகளின் கீழ்:

  • என்.ஆர்.ஐ. (NRI) பிரிவு: 33 பேர்
  • என்.ஆர்.ஐ. ஸ்பான்சர் பிரிவு: 96 பேர்
  • ஓ.சி.ஐ. (OCI) பிரிவு: 5 பேர்

சிறப்பு இடஒதுக்கீட்டுப் பிரிவுகள்:

சிறப்பு இடஒதுக்கீட்டுப் பிரிவுகளின் கீழும் ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்:

சிறந்த விளையாட்டு வீரர்கள் பிரிவு: 33 விண்ணப்பங்கள்

சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் பிரிவு: 14 விண்ணப்பங்கள்

அரசுப் பள்ளி மாணவர்கள் பிரிவு: 18 பேர்

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவு: 6 பேர்

தெலுங்கு சிறுபான்மையினர் பிரிவு: 6 பேர்

(குறிப்பு: மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தற்போது வரை விண்ணப்பங்கள் எதுவும் பதிவாகவில்லை).

யார் யார் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்?

எம்.பி.பி.எஸ். & பி.டி.எஸ்.: அரசு ஒதுக்கீட்டு இடங்கள், கிறிஸ்துவ மற்றும் தெலுங்கு சிறுபான்மையினர் இடங்கள், அகில இந்திய நிர்வாக இடங்கள் மற்றும் என்.ஆர்.ஐ. சீட்டுகள் உள்ளன.

ஆயுர்வேதம் (BAMS): அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டுமே உள்ளன.

கால்நடை மருத்துவம் (B.V.Sc): சுயநிதி மற்றும் என்.ஆர்.ஐ. சீட்டுகள் உள்ளன.

விண்ணப்பிக்கும் விதிமுறைகள்:

அரசு ஒதுக்கீட்டு இடங்கள்: புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த உள்ளூர் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

சிறுபான்மையினர் இடங்கள்: கிறிஸ்துவ மற்றும் தெலுங்கு பேசும் சிறுபான்மையினருக்கான இடங்களுக்கும் புதுச்சேரி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

நிர்வாக & சுயநிதி இடங்கள்: அகில இந்திய நிர்வாக இடங்கள் மற்றும் சுயநிதி இடங்களுக்கு புதுச்சேரி மாணவர்கள், பிற மாநில மாணவர்கள் மற்றும் ஓ.சி.ஐ. பிரிவினர் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டண விவரங்கள்:

  • அரசு ஒதுக்கீடு (SC / ST / மாற்றுத்திறனாளிகள்): 500
  • அரசு ஒதுக்கீடு (இதர பிரிவினர்): 1,000
  • நிர்வாக இடங்கள்: 2,000
  • NRI / NRI ஸ்பான்சர்டு / OCI பிரிவினர்: 5,000

சேர்க்கை மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு 0413-2655570, 2655571 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
"மாணவர்களின் குரலைக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே" - நிவேதித் ஆல்வா பெருமிதம்
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Embed widget