மேலும் அறிய

அமைதி காக்கும் ஆசிரியர் வாரியம்; உதவிப்பேராசிரியர் தேர்வு முடிவு குளறுபடிக்கு தீர்வு எப்போது?

உதவிப்பேராசிரியர் தேர்வு: பூஜ்ஜிய மதிப்பெண் குளறுபடி! ஆசிரியர் வாரியம் விளக்கம் தருமா?

உதவிப்பேராசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் நீண்ட நாட்களாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நிரந்தர ஆசிரியர் நியமனம் இல்லாதிருந்த நிலையில், 61 பாடங்களுக்கு, 2,708 உதவிப்பேராசிரியர் நியமனங்களுக்கு, 27.12.2025 அன்று எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

4 மாதங்கள் கழித்து தேர்வு முடிவுகள்

நியமனங்கள் குறைவாக இருந்த, 5 பாடப்பிரிவுகளுக்கு மட்டும் 25.02.2026 அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு பணி நியமனங்கள் நடைபெற்றன. மீதமிருந்த 56 பாடங்களுக்கு 25.06.2026 அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

விவரித்து எழுதுதல் கேள்விக்கான மதிப்பெண் வழங்கியதில் பெருமளவில் குளறுபடிகள் நடைபெற்றதாக பரவலாக சொல்லப்படுகிறது.

கீழ்க்கண்ட அடிப்படையில் தேர்வுகள் நடைபெற்றன.

முதல் தாள்

இரண்டு பகுதிகள்.

இரண்டு பகுதிகளும், விடையை தேர்ந்தெடுத்து எழுதும் முறை.

முதல் பகுதி, கட்டாய தமிழ். இது அனைவருக்கும் பொதுவானது.

இதில் 50 மதிப்பெண்களுக்கு 20 மதிப்பெண் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் கட்டாயத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லையென்றால், அடுத்த இரண்டு தாள்களும் மதிப்பீடு செய்யப்படாது என அறிவிக்கப்பட்டு இருந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும், இந்த தமிழ் தேர்வுக்கு விதிவிலக்கு கொடுக்கப்பட்டிருந்தது. 6958 பேர், கட்டாய தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை.

இரண்டாவது பகுதியில், அந்தந்த பாடங்களிலிருந்து 100 வினாக்கள், 150 மதிப்பெண்கள்.

இரண்டாம் தாள் விவரித்து எழுதுதல். அனைவருக்கும் பொதுவானது. இந்திய அரசியல் அமைப்பு, இந்திய பொருளாதாரம், நவீன இந்திய வரலாறு, தமிழ்நாட்டின் வரலாறு மற்றும் பொருளாதாரம், சுற்றுச்சூழல், அறிவியலும், தொழில் நுட்பமும், தற்கால நிகழ்வுகள் ஆகிய தலைப்புகளில் இருந்து ஐந்து கேள்விகள் கேட்கப்படும், ஏதாவது ஒரு கேள்விக்கு மட்டும் விடையளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

மதிப்பெண் 50.

முதல் தாளின் இரண்டாம் பகுதி தேர்வுக்கான 150 மதிப்பெண்களும், இரண்டாம் தாளின் 50 மதிப்பெண்கள் என மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு , இட ஓதுக்கீடு பிரிவினராக இருந்தால், 35%, இட ஓதுக்கீடு அல்லாத பிரிவினராக இருந்தால் 40% மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே தகுதியுடையவர்களாவர்கள் என்றும் இவர்களில் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

காலிப்பணியிடங்கள் 5 க்கு அதிகமாக இருந்தால் மதிப்பெண் அதிகம் பெற்றவர்களில் இருந்து ஒரு பணியிடத்து இருவர் என்ற அடிப்படையிலும்,  பணியிடம் 5 க்கும் குறைவாக உள்ள பாடப்பிரிவுகளுக்கு, ஒரு பணியடத்திற்கு மூன்று பேர் என்ற  அடிப்படையிலும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்முகத்தேர்வு அனைவருக்கும் 15 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது வெளியான தேர்வு முடிவுகளில், விவரித்து எழுதுதல் கேள்விக்கு பூஜ்யம் உள்ளிட்ட மிக்குறைந்த மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகளும், சந்தேகங்களும் எழுந்துள்ளன.

எழுப்பப்படும் புகார்களுக்கு, உரிய விளக்கங்களையும், தெளிவுகளையும் ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தி உள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
"முதலில் எங்களை நிரந்தரமாக்குங்கள், அப்புறம் TRB தேர்வு நடத்துங்கள்!" - முதல்வர் விஜய்யின் ஒற்றைப் பேனா முனையில் காத்திருக்கும் எதிர்காலம்!
மீண்டும் மீண்டுமா? திருக்குறளை பாதியில் மறந்த அமைச்சர் விஸ்வநாதன்- பரபரப்பு வீடியோ
மீண்டும் மீண்டுமா? திருக்குறளை பாதியில் மறந்த அமைச்சர் விஸ்வநாதன்- பரபரப்பு வீடியோ
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Embed widget