TN 12th Public Exam: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வுகள்.. முழு விவரம் இதோ..
இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வை சுமார் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வை சுமார் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை பொதுத்தேர்வு தொடங்க இருப்பது குறித்த அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 வகுப்பு தேர்வை சுமார் 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 மாணவ மாணவிகள் தேர்வை எழுதுகின்றனர். இதில் 4 லட்சத்த 03 ஆயிரத்து 156 மாணவர்களும், 4 லடசத்து 33 ஆயிரத்து 436 மாணவிகளும், 23 ஆயிரத்து 747 பேர் தனித்தேர்வர்களும், மாற்றுத் திறனாளிகள் 5 ஆயிரத்து 206 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 6 பேரும், சிறை கைதிகள் 90 பேரும் தேர்வை எழுதுகின்றனர்.
இதேபோல் புதுச்சேரியில் 6 ஆயிரத்து 982 மாணவர்களும், 7 ஆயிரத்து 728 மாணவிகளும் என மொத்தம் 14 ஆயிரத்து 728 மாணவர்கள் பொதுத்தேர்வை எழுத உள்ளனர். பிள்ஸ் 2 தேர்வுகளுக்காக மொத்தம் 3 ஆயிரத்து 225 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 46 ஆயிரத்து 870 ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் 4 ஆயிரத்து 235 பேர் பறக்கும் படை மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், வருவாய் துறை அதிகாரிகள் தலைமையில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 281 வினாத்தாள் கட்டுப்பாட்டு அறைகளில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட ஆயுதம் ஏந்திய காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெறும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின் சாதனங்களை கொண்டு செல்லவும், ஹால் டிக்கெட்டில் இடம் பெற்றுள்ள விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் இருக்கை, குடிநீர் வசதி, கழைவறை வசதி என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வானது பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறுகிறது. 10 மணிக்கு புகைப்படம், பதிவெண் (regiter number/roll number), பாடம் முதலான விவரங்கள் கொண்ட முதன்மை விடைத்தாள்கள் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு அறையில் வழங்கப்படும். இவற்றை சரிபார்த்த பின் 10.15 மணிக்கு தேர்வு எழுத தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்நாளான இன்று மொழி தாள் தேர்வு நடைபெறுகிறது. பின் மார்ச் 15ஆம் தேதி ஆங்கிலம்,
மார்ச் 17- தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல், பயோ கெமிஸ்ட்ரி
மார்ச் 21 - இயற்பியல், பொருளாதாரம்
மார்ச் 27 - கணிதவியல், விலங்கியல், நர்சிங்
மார்ச் 31- உயிரியல், வரலாறு, வணிகக் கணிதம்
ஏப்ரல் 3- வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் என அந்தந்த பாடத்திற்கான தேர்வுகள் நடைபெறுகிறது.
தேர்வு அறையில் செல்போன் கொண்டு செல்வது, ஆள்மாறாட்டம், துண்டுதாள் அல்லது பிற மாணவர்களை பார்த்து எழுதுவது, விடைத்தாள் மாற்றிக்கொள்வது உள்ளிட்ட செயலில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். இந்த செயல்களை ஊக்கப்படுத்த நினைத்தால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு காலங்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.