மேலும் அறிய

TN 12th Result 2023: பிளஸ் 2 ரிசல்ட்; கடந்த ஆண்டை விட பின் தங்கிய காஞ்சிபுரம் - முக்கிய தகவல்கள் உள்ளே

TN 12th Result 2023: காஞ்சிபுரம் (kanchipuram) மாவட்டம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இவ்வாண்டு 31 வது இடத்தை பிடித்துள்ளது.

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 

kanchipuram Pass Percentage, TN 12th Result 2023: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் நடப்பாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தேர்வுகளை  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவர்கள் எழுதினர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு விடைத்தாள்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

TN 12th Result 2023: பிளஸ் 2 ரிசல்ட்; கடந்த ஆண்டை விட பின் தங்கிய காஞ்சிபுரம் - முக்கிய தகவல்கள் உள்ளே

விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. தேர்வுகள் முடிந்த நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு விடைத்தாள்கள்  அனுப்பி வைக்கப்பட்டு, ஏப்ரல் 11 ஆம் தேதியில் இருந்து 21ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 79 முகாம்கள் அமைக்கப்பட்டு  50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் பணிகளை மேற்கொண்டனர். இதனையடுத்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு திட்டமிட்டபடி மே 5 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாவதாக இருந்தது. 

காஞ்சிபுரம் (kanchipuram) மாவட்ட முடிவுகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவ மற்றும் மாணவிகளின் எண்ணிக்கை 13141. இதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 11935 .  தேர்ச்சி சதவீதம் 90.82
 
தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை-6429 , தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை - 5561, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் - 86.50. தேர்வு எழுதிய மாணவிகளின் எண்ணிக்கை - 6712,தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை - 6374 ,தேர்ச்சி விகிதம் 94.96
 
காஞ்சிபுரம் மாவட்டத்தின் அரசு பள்ளி தேர்ச்சி விகிதம்
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 48 பள்ளி. 6847 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், தேர்ச்சி பெற்றவர்கள்- 5920, தேர்ச்சி விகிதம் 86.46.  பரந்தூர் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது
TN 12th Result 2023: பிளஸ் 2 ரிசல்ட்; கடந்த ஆண்டை விட பின் தங்கிய காஞ்சிபுரம் - முக்கிய தகவல்கள் உள்ளே
 
இந்நிலையில் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பிஎம்எஸ் அரசு மகளிர் பள்ளியில் காலையிலிருந்து மாணவிகள் பள்ளியில் வந்து செல்போனில் தேர்ச்சி முடிவுகளை கண்டனர். பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இப்பள்ளியில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் இனிப்பு வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார். மேலும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு அடுத்து கல்லூரியில் சேர விரும்புவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
 
 பின் தங்கிய காஞ்சிபுரம் மாவட்டம்
 
காஞ்சிபுரம் மாவட்டம் இவ்வாண்டு 31 வது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் மாநில அளவில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவித்திற்க்கு அடிப்படையிலும் காஞ்சிபுரம் மாவட்டம் 31 வது தர வரிசை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு மாநில அளவில் மாவட்டத்தின் தரம் 28 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 31 ஆக குறைந்துள்ளது அதுவே கடந்தாண்டு அரசு பள்ளிகளின் தேர்ச்சியை அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் 27-வது இடத்தில் இருந்து 31-வது இடத்திற்கு சரிந்துள்ளது

TN 12th Result 2023: பிளஸ் 2 ரிசல்ட்; கடந்த ஆண்டை விட பின் தங்கிய காஞ்சிபுரம் - முக்கிய தகவல்கள் உள்ளே

தேர்ச்சி விகிதம் எவ்வளவு? 

தமிழ் நாடு முழுவதும், 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத 8.65 லட்சம் மாணவ,மாணவிகள் விண்னப்பித்த நிலையில், 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 பேர் தேர்வு எழுதினர். இதில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வெழுதியவர்களில் மாணவிகளின் எண்ணிக்கை 4,21,013 ஆகும். மாணவர்கள் எண்ணிக்கை 3லட்சத்து 82, 371 ஆகும். இதில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் எண்ணிக்கை 4, 05, 753, மாணவர்கள் 3, 49, 697 ஆகும். மாணவர்களை விட மாணவிகள் 4.93 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

TN 12th Result 2023: பிளஸ் 2 ரிசல்ட்; கடந்த ஆண்டை விட பின் தங்கிய காஞ்சிபுரம் - முக்கிய தகவல்கள் உள்ளே

வெளியான தேர்வு முடிவுகள் 

அதன்படி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில்  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவ, மாணவிகள் www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.inwww.tnresults.nic.in ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
உங்களுக்கு போட்டியா எங்க அண்ணன் வரான்...ரீல்ஸ் போட்ட சிறுவர்கள்..அனிருத் கொடுத்த பதிலை பாருங்கள்
உங்களுக்கு போட்டியா எங்க அண்ணன் வரான்...ரீல்ஸ் போட்ட சிறுவர்கள்..அனிருத் கொடுத்த பதிலை பாருங்கள்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
Embed widget