மேலும் அறிய

12th Result District Wise: 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு ... உங்கள் மாவட்டம் எத்தனையாவது இடம் தெரியுமா?

TN 12th Results 2023 District Wise Pass Percentage: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் மாவட்ட வாரியாக பெறப்பட்ட தேர்ச்சி விகிதம் பற்றி காணலாம். 

Tamil Nadu 12th Result 2023: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் மாவட்ட வாரியாக பெறப்பட்ட தேர்ச்சி விகிதம் பற்றி காணலாம். 

வெளியான தேர்வு முடிவுகள்

தமிழ்நாட்டில் 10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை அமலில் இருந்து வருகிறது. இதில் மாணவ, மாணவியர்களின் உயர்கல்வியை நிர்ணயிக்க செய்வதில் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மிக முக்கிய பங்குகளை வகிக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் நடப்பாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 3 ஆம் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெற்றது. 

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை  தமிழ்நாட்டில்  சுமார் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 மாணவ-மாணவிகள் எழுதினர். புதுச்சேரியில்  14 ஆயிரத்து 728 மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதினர்.  இதற்காக  3 ஆயிரத்து 225 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கிய நிலையில், அதற்கு முந்தைய நாளான ஏப்ரல் 10 ஆம் தேதி சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு விடைத்தாள்கள்  அனுப்பி வைக்கப்பட்டது. 

மாறிய ரிசல்ட் தேதி 

முதலில் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பில் மே 5ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மே 7 ஆம் தேதியான நேற்று  இளநிலை  மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. நீட் தேர்வை எழுதவிருக்கு மாணவர்களின் மனநிலை 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு மாணவர்களும் பெற்றோர்களும், ஆசிரியர் சங்கங்களும்   தேதியை மாற்றக்கோரி கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.  

ரிசல்ட் பார்ப்பது எப்படி? 

இன்று காலை 9.30 மணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதனை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில்  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  வெளியிட்டார். www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in ,  www.dge.tn.gov.in , www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களின் மூலமாக மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட வாரியாக விவரம் 

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் விருதுநகர் (97.85% ),  திருப்பூர் (97.79%),  பெரம்பலூர் (97.59%) ஆகிய மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளது. 4வது இடத்தில் கோவை (97.57%), 5வது இடத்தில்தூத்துக்குடி (97.36%), 6வது இடத்தில் சிவகங்கை (97.26%), 7வது இடத்தில் கன்னியாகுமரி (97.05), 8 வது இடத்தில் ஈரோடு (96.98%), 9வது இடத்தில் நாமக்கல் (96.94%), 10வது இடத்தில் அரியலூர் (96.88%) ஆகிய மாவட்டங்கள் முதல் 10 இடத்தில் உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் 87.30% சதவீத தேர்ச்சியுடன் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது.  

பிற மாவட்டங்கள்

  • திருநெல்வேலி - 96.61%
  • தென்காசி - 95.96%
  • ராமநாதபுரம் - 96.30%
  • தேனி - 93.17%
  • மதுரை - 95.84%
  • திண்டுக்கல் - 93.77%
  • ஊட்டி - 93.85%
  • சேலம் - 94.22%
  • கிருஷ்ணகிரி - 89.69%
  • தர்மபுரி - 92.72%
  • புதுக்கோட்டை - 92.81%
  • கரூர் - 94.31%
  • திருச்சி - 96.02%
  • நாகப்பட்டினம் - 90.68%
  • மயிலாடுதுறை - 90.15%
  • திருவாரூர் - 91.46%
  • தஞ்சாவூர் - 95.18%
  • விழுப்புரம் - 90.66%
  • கள்ளக்குறிச்சி - 91.06%
  • கடலூர் - 92.04 %
  • திருவண்ணாமலை - 89.80%
  • வேலூர் - 89.20%
  • திருப்பத்தூர் - 91.13%
  • காஞ்சிபுரம் - 90.82%
  • செங்கல்பட்டு -  92.52%
  • திருவள்ளூர் - 92.47%
  • சென்னை - 94.14%
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
உங்களுக்கு போட்டியா எங்க அண்ணன் வரான்...ரீல்ஸ் போட்ட சிறுவர்கள்..அனிருத் கொடுத்த பதிலை பாருங்கள்
உங்களுக்கு போட்டியா எங்க அண்ணன் வரான்...ரீல்ஸ் போட்ட சிறுவர்கள்..அனிருத் கொடுத்த பதிலை பாருங்கள்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
Embed widget