10th Retotaling Result: 10ஆம் வகுப்பு மதிப்பெண் மறுகூட்டல் நாளை வெளியீடு - பார்ப்பது எப்படி?
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவின் மீது மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் நாளை (புதன்கிழமை) வெளியாகிறது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவின் மீது மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் நாளை (புதன்கிழமை) வெளியாகிறது.
தமிழ்நாட்டில் 2020-21ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பில் மொத்தம் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 மாணவர்கள் தேர்வெழுதினர். அவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 52 ஆயிரத்து 499 பேர் ஆவர். மாணவிகள் மொத்தம் 4 லட்சத்து 60 ஆயிரத்து 120 ஆகும். மூன்றாம் பாலினத்தவர் 1 நபர் ஆவார்.
இவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளின் தேர்ச்சி விகிதத்தை ஜூன் 20ஆம் தேதி அன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இதில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 90.07 சதவீதம் மாணவர்கள் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4 லட்சத்து 27 ஆயிரத்து 73 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3 லட்சத்து 94 ஆயிரத்து 920 பேர் அடைந்துள்ளனர். அதாவது 85.83 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 714 ஆகும். இவற்றில் மேல்நிலைப்பள்ளிகள் 7 ஆயிரத்து 456 ஆகும். உயர்நிலைப்பள்ளிகள் 5 ஆயிரத்து 258 ஆகும். இவற்றில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 6 ஆகும். 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 886 ஆகும்.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவின் மீது மறுகூட்டல் கோரி மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவ்வாறு விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் நாளை (புதன்கிழமை) வெளியாகிறது.
அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மண்டலத் துணை இயக்குநர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நடைபெற்ற மே 2022, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவின் மீது மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவண்கள் பட்டியல் 27.07.2022 (புதன்கிழமை) அன்று பிற்பகல் வெளியிடப்படும்.
பார்ப்பது எப்படி?
www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குள் சென்று "SSLC MAY 2022 RETOTAL RESULT" என்ற வாசகத்தினை க்ளிக் செய்த பின்னர், தோன்றும் பக்கத்தில் மறு கூட்டல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மதிப்பெண் மாற்றங்களுடன் 27.07.2022 பிற்பகல் முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இந்தப் பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத் தாள்களில் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்படுகிறது.