SSLC Result 2024: தென்மாவட்டங்களில் முதலிடம் யாருக்கு? - தேர்ச்சி சதவீதத்தில் முன்னணியில் இருப்பது யார்? - விவரம் இதோ...!
Tamil Nadu 10th Result 2024: தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் 96.24 சதவீத தேர்ச்சியுடன் நான்காவது இடத்தையும், தென் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்தையும் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியான நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் 10,829 மாணவர்களும், 11,387 மாணவிகளும் என மொத்தமாக 22216 பேர் தேர்வு எழுதியதில் 9,714 மாணவர்களும் 10,956 மாணவிகளும் என மொத்தம் 20670 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 89.70, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் மிக அதிகமாக 96.21 சதவீதமாகவும் உள்ளது. மாவட்டத்தின் மொத்த சராசரி தேர்ச்சி விகிதம் 93.04 சதவீதமாக உள்ளது. மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 94 அரசு பள்ளியில் 2984 மாணவர்களும், 3886 மாணவிகளும் ஆக மொத்தம் 6870 பேர் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதியதில் மாணவர்கள் 2570 பேரும், மாணவிகள் 3666 பேரும் என மொத்தம் 6236 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 86.13 சதவீதமாகவும் மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 94.34 சதவீதமாகவும் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 90.77 சதவீதமாகவும் உள்ளது. கடந்த ஆண்டு 94.19 ஆக இருந்த தேர்ச்சி சதவிகிதம் இந்தாண்டு 93.04 சதவிகிதமாக குறைந்துள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் 8969 மாணவர்களும், 8939 மாணவிகளும் என மொத்தமாக 17908 பேர் தேர்வு எழுதியதில் 8066 மாணவர்களும் 8533 மாணவிகளும் என மொத்தம் 16599 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 89.93 விட மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் மிக அதிகமாக 95.46 சதவீதமாகவும் உள்ளது. மாவட்டத்தின் மொத்த சராசரி தேர்ச்சி விகிதம் 92.63 சதவீதமாக உள்ளது. மேலும் தென்காசி மாவட்டத்தில் உள்ள 81 அரசு பள்ளியில் 3050 மாணவர்களும், 3785 மாணவிகளும் ஆக மொத்தம் 6835 பேர் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதியதில் மாணவர்கள் 2560 பேரும், மாணவிகள் 3520 பேரும் என மொத்தம் 6080 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 83.93 சதவீதமாகவும் மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 93 சதவீதமாகவும் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 88.95 சதவீதமாகவும் உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 10534 மாணவர்களும், 11309 மாணவிகளும் என மொத்தமாக 21843 பேர் தேர்வு எழுதியதில் 9645 மாணவர்களும் 10973 மாணவிகளும் என மொத்தம் 20618 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 91.56 விட மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் மிக அதிகமாக 97.03 சதவீதமாகவும் உள்ளது. மாவட்டத்தின் மொத்த சராசரி தேர்ச்சி விகிதம் 94.39 சதவீதமாக உள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 90 அரசு பள்ளியில் 2369 மாணவர்களும், 3063 மாணவிகளும் ஆக மொத்தம் 5432 பேர் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதியதில் மாணவர்கள் 2052 பேரும், மாணவிகள் 2896 பேரும் என மொத்தம் 4948 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 86.62 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 94.55 சதவீதமாகவும் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 91.09 சதவீதமாகவும் உள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் 11101 மாணவர்களும், 11422 மாணவிகளும் என மொத்தமாக 22523 பேர் தேர்வு எழுதியதில் 10466 மாணவர்களும் 11210 மாணவிகளும் என மொத்தம் 21676 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 94.28 விட மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் மிக அதிகமாக 98.14 சதவீதமாகவும் உள்ளது. மாவட்டத்தின் மொத்த சராசரி தேர்ச்சி விகிதம் 96.24 சதவீதமாக உள்ளது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 141 அரசு பள்ளியில் 3374 மாணவர்களும், 3288 மாணவிகளும் ஆக மொத்தம் 6662 பேர் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதியதில் மாணவர்கள் 3129 பேரும், மாணவிகள் 3211 பேரும் என மொத்தம் 6340 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 92.74 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 97.66 சதவீதமாகவும் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 95.17 சதவீதமாகவும் உள்ளது.
எஸ் எஸ் எல் சி தேர்ச்சி சதவீதத்தில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் 93.04 சதவீதத்துடன் 16 வது இடத்தை பிடித்துள்ளது. 17 வது இடத்தில் 92.69 சதவீதத்துடன் தென்காசி உள்ளது. 94.39 சதவீதத்துடன் தூத்துக்குடி மாவட்டம் ஒன்பதாவது இடத்திலும் ,கன்னியாகுமரி மாவட்டம் 96.24 சதவீத தேர்ச்சியுடன் நான்காவது இடத்திலும் உள்ளது. மொத்தமாக தென் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதோடு 4 மாவட்டங்களிலும் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று தேர்ச்சி சதவிதத்தில் முதலிடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.