SSLC Result 2024: பள்ளிகள் வாரியாக செங்கல்பட்டு மாவட்ட முடிவுகள்..! அரசு பள்ளிகளில் பரிதாப நிலை ?
Tamil Nadu 10th Result 2024: மாநில அளவில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் 36வது இடத்திற்கு செங்கல்பட்டு மாவட்டம் சென்றுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 85.44 ஆக உள்ளது. அதுவே அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 87.17, மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 96.42 ஆக உள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்:
செங்கல்பட்டு (Chengalpattu News): தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் இருக்கும் அரசு தேர்வுகள் மையத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 8.18 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று இருந்த நிலையில், நடப்பாண்டில் 91.55 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் 0.16 % கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வு முடிவுகளில் தமிழ்நாடு முழுவதும் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் குறிப்பாக மாணவர்கள் 88.58 சதவீதம் (3,96,152) பேரும் மாணவிகள் 94.53 சதவீதம் (4,22,591) பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்ட தேர்வு முடிவுகள் என்ன ? ( Chengalpattu 10th Result )
செங்கல்பட்டு மாவட்டத்தில் 15968 மாணவர்களும்,15948 மாணவிகளும் மொத்தம் 31916 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி இருந்தனர். இவற்றில் 13,317 மாணவர்களும், 14 ஆயிரத்து 572 மாணவிகளும் மொத்தம் 27 ஆயிரத்து 889 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 83.40, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 91.37, மாவட்ட மொத்த தேர்ச்சி சதவீதம் 87.38 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு சதவீதம் 88.27 ஆக இருந்தது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. 33வது இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மாநில அளவில் இடம்பிடித்துள்ளது.
அரசு பள்ளிகளின் நிலவரம் என்ன ?
அரசு, நகராட்சி மற்றும் நலத்துறை பள்ளிகளை சார்ந்த மொத்த தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 14003, இதில் 11,091 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 79. 20. தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 72.74, அதுவே மாணவிகளின் பேச்சு சதவீதம் 85.44 . மாநில அளவில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் 36வது இடத்திற்கு செங்கல்பட்டு மாவட்டம் சென்றுள்ளது. கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் பின்தங்கி உள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளிகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 5140 தேர்ச்சி பெற்றவர்கள் 4481, தேர்ச்சி சதவீதம் 87.17. மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 81.29, அதுவே மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 92.04.
மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகள்
செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 12773, தேர்ச்சி பெற்றவரின் எண்ணிக்கை 12,317. மொத்த தேர்ச்சி சதவீதம் 96.42, மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 94.94 ஆக உள்ளது. அதுவே மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 98.10 ஆக உள்ளது. குறிப்பாக மொத்தம் 61 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது