TN 10th Result 2024: சேலம் மத்திய சிறையில் 100% தேர்ச்சி... 10ம் வகுப்பு தேர்வில் சிறைவாசிகள் படைத்த சாதனை
Tamil Nadu 10th Result 2024: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சேலம் மத்திய சிறையில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது இதுவே முதல் முறை என சேலம் சிறை கண்காணிப்பாளர் வினோத் பெருமிதம்.
தமிழக முழுவதும் இன்று பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இன்று காலை 9:30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
சிறை வாசிகள் சாதனை:
சேலம் மத்திய சிறையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 23 சிறைவாசிகள் எழுதிய நிலையில் 23 பேரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சேலம் மத்திய சிறையில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது இதுவே முதல் முறையாகும். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்விலும் சேலம் மத்திய சிறையில் தேர்வு எழுதிய கைதிகள் 100% தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.
சேலம் தேர்ச்சி விகிதம்:
சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை 21,474 மாணவர்கள், 20,877 மாணவிகள் என 42,351 பேர் தேர்வு எழுதினர். இதில் 19,066 மாணவர்கள் 19,793 மாணவிகள் என மொத்தம் 38,859 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 88.79 சதவீதம் மாணவர்கள், 94.81 சதவீதம் மாணவிகள் என மொத்தம் 91.75 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 296 அரசு பள்ளிகளை பொறுத்தவரை 11,917 மாணவர்கள், 12,766 மாணவிகள் என மொத்தம் தேர்வு எழுதி நிலையில், 24,683 பேர் தேர்வு எழுதி உள்ளனர். இதில் 10,226 மாணவர்களும், 11,900 மாணவிகள் என மொத்தம் 22,126 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி 89.64 சதவீதம் ஆக உள்ளது. இந்த ஆண்டு 89.65% தேர்ச்சி பெற்று தமிழகத்தில் 18 வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் தேர்ச்சி விகிதம்:
நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை 10,147 மாணவர்கள், 9,612 மாணவிகள் என 19,759 பேர் தேர்வு எழுதினர். இதில் 9,318 மாணவர்கள் 9,159 மாணவிகள் என மொத்தம் 18,478 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 91.83 சதவீதம் மாணவர்கள், 95.29 சதவீதம் மாணவிகள் என மொத்தம் 93.51 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 163 அரசு பள்ளிகளை பொறுத்தவரை 5,774 மாணவர்கள், 5,852 மாணவிகள் என மொத்தம் தேர்வு எழுதி நிலையில், 11,626 பேர் தேர்வு எழுதி உள்ளனர். இதில் 5,108 மாணவர்களும், 5,455 மாணவிகள் என மொத்தம் 10,563 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 90.86 ஆக உள்ளது.