TN 10th 12th Result 2022: 10, 12-ஆம் வகுப்பில் அதிக தேர்ச்சி பெற்றது அரசுப்பள்ளிகளா..? தனியார் பள்ளிகளா..? முழு விவரம் உள்ளே..!
TN 10th 12th Result 2022: 10 மற்றும் 12ம் வகுப்பில் அரசுப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதங்களின் முழு விவரத்தை கீழே விரிவாக காணலாம்.
தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியது. இந்த நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்புகளின் அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள் பெற்ற தேர்ச்சி விகிதத்தை கீழே விரிவாக காணலாம்.
10ம் வகுப்பு :
10ம் வகுப்பு தேர்வுகளை மொத்தம் 12 ஆயிரத்து 714 பள்ளிகள் எழுதியுள்ளன. இவற்றில் 7 ஆயிரத்து 456 பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகள் ஆகும். 5 ஆயிரத்து 258 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகள் ஆகும். 10ம் வகுப்பு தேர்வில் மொத்தம் 4 ஆயிரத்து 6 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவற்றில் 856 பள்ளிகள் அரசுப்பள்ளிகள் ஆகும்.
10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் 85.25 சதவீதம் ஆகும். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 89.01 சதவீதம் ஆகும். தனியார் சுயநிதி பள்ளி மாணவர்கள் 98.31 சதவீதம் ஆகும். இருபாலர் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 90.37 சதவீதம் ஆகும். மகளிர் பள்ளியில் படித்த மாணவிகள் 93.80 சதவீதம் ஆகும். ஆண்கள் பள்ளியில் படித்த மாணவர்கள் 79.33 சதவீதம் ஆகும்.
12ம் வகுப்பு :
12ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 7 ஆயிரத்து 499 பள்ளி மாணவர்கள் எழுதினர். அவற்றில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 626 ஆகும். 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலை பள்ளிகளின் எண்ணிக்கை 246 ஆகும்.
12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் 89.06 சதவீதம் ஆகும். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 94.87 சதவீதம் ஆகும். தனியார் சுயநிதி பள்ளிகள் 99.15 சதவீதம் ஆகும். இருபாலர் படிக்கும் பள்ளி மாணவர்கள் 94.05 சதவீதம் ஆகும். மகளிர் பள்ளியில் படித்த மாணவிகள் 96.37 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்கள் பள்ளியில் படித்த மாணவர்கள் 86.60 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களில் அரசுப்பள்ளிகளை விட தனியார் பள்ளி மாணவர்கள் அதிகளவு தேர்ச்சி பெற்றிருப்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்