(Source: ECI/ABP News/ABP Majha)
10th 11th 12th Exam Time Table: வெளியான தேதிகள்; 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எப்போது?- முழு அட்டவணை இதோ!
TN 10th 11th 12th Public Exam Time Table 2023: 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன என்ற அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன என்ற அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் இடையிடையே மூடப்பட்டன. இதனால் கற்றலும் கற்பித்தலும் பாதிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களின் கடந்த கால செயல்திறன், காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
மே மாதத்தில் நடைபெற்ற 2021 பொதுத் தேர்வுகள்
இதற்கிடையே 2021-2022ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் மே மாதம் தொடங்கி, அதே மாதத்தில் முடிவடைந்தன. 10, 11, 12 ஆகிய 3 வகுப்புக்கான பொதுத் தேர்வுகளையும் சுமார் 26 லட்சம் மாணவர்கள் எழுதினர். குறிப்பாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் மே 30 வரை பொதுத்தேர்வு நடைபெற்றது.
பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 முதல் மே 31ம் தேதி வரை பொதுத்தேர்வு நடந்தது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு ஏப்ரல் 25ம் தேதி தொடங்கி நடைபெற்றது. மே 5 முதல் மே 28 வரை பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 வரை தேர்வுகள் நடைபெற்றன.
இந்த நிலையில் 2022- 23 ஆம் கல்வி ஆண்டு எந்த தாமதமும் இல்லாமல் ஜூன் மாதம் தொடங்கியது. கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால், அனைத்துப் பள்ளிகளிலும் நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
அட்டவணை வெளியீடு
இந்த நிலையில், 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன என்ற அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (நவம்பர் 7) சென்னையில் அறிவித்துள்ளார். இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 வரை 12ஆம் வகுப்புத் தேர்வு நடைபெற உள்ளது. 7,600 பள்ளிகளில், 8.8 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுத உள்ளனர்.
11ஆம் வகுப்புத் தேர்வை 8.5 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். மார்ச் 14ஆம் தேதி இவர்களுக்குத் தேர்வு தொடங்கும் நிலையில், ஏப்ரல் 5ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.
10ஆம் வகுப்புத் தேர்வு
10ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதி அன்று தொடங்குகின்றன. ஏப்ரல் 20ஆம் தேதி வரை இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை | 10th Exam Time Table 2022 Tamil Nadu
ஏப்ரல் 6 - மொழித்தாள்
ஏப்ரல் 10 - ஆங்கிலம்
ஏப்ரல் 13- கணிதம்
ஏப்ரல் 15- விருப்ப மொழித்தாள்
ஏப்ரல் 17- அறிவியல்
ஏப்ரல் 20- சமூக அறிவியல்
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை | 12th Exam Time Table 2022 Tamil Nadu
மார்ச் 13 - மொழித்தாள்
மார்ச் 15- ஆங்கிலம்
மார்ச் 17- தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல், பயோ கெமிஸ்ட்ரி
மார்ச் 21 - இயற்பியல், பொருளாதாரம்
மார்ச் 27 - கணிதவியல், விலங்கியல், நர்சிங்
மார்ச் 31- உயிரியல், வரலாறு, வணிகக் கணிதம்
ஏப்ரல் 3- வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்