மேலும் அறிய

கியூட், பொதுத்தேர்வுகள்.. லட்சக்கணக்கான மாணவர் தகவல்கள் டார்க் வெப்பில் விற்பனை- பெரும் ஆபத்து!

கியூட் மற்றும் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தகவல்கள் இணையத்தில் விற்பனை ஆகி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் கியூட் எனப்படும் மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு மற்றும் பல்வேறு பள்ளிப் பொதுத்தேர்வுகளை எழுதிய லட்சக்கணக்கான மாணவர்களின் ரகசியத் தகவல்கள் இணையத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவது அம்பலமாகியுள்ளது. தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை இந்த விவகாரம் எழுப்பியுள்ளது.


கசிந்த தகவல்கள் என்னென்ன?

கியூட், சிபிஎஸ்இ மற்றும் பல்வேறு மாநில பாடத்திட்டங்களின் கீழ் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் அடிப்படை விவரங்கள் பெரும் அளவில் கசிந்துள்ளன. மாணவர்களின் பெயர்கள், பெற்றோரின் பெயர்கள், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், இருப்பிட முகவரி மற்றும் தேர்ச்சி விவரங்கள் ஆகியவை இந்தத் தரவுகளில் அடங்கும்.


எங்கே விற்கப்படுகிறது?


இந்த ரகசியத் தரவுகள் டார்க் வெப், டெலிகிராம் சேனல்கள் மற்றும் சில ஹேக்கிங் இணையதளங்களில் மிகக் குறைந்த விலைக்கு பேக்கேஜ்களாக விற்கப்படுகின்றன. குறிப்பாக studentdataprovider.com, studentsdatabases.com, studentdatahub.com, studentsdatabase.net, bulkstudentdata.com மற்றும் studentdatabaseindia.com ஆகிய தளங்களில் இந்த விவரங்கள் உள்ளன. 


குறிப்பாக க்யூட் தேர்வு எழுதிய சுமார் 15 லட்சம் மாணவர்களின் தகவல் உள்ளதாக studentdataprovider.com விளம்பரம் செய்தது. இவை 1000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. 
மாணவர்களின் மாநிலம் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் இந்தத் தரவுகள் வகைப்படுத்தப்பட்டு, யார் வேண்டுமானாலும் பணம்கொடுத்து வாங்கும் வகையில் பொதுவெளியில் சந்தைப்படுத்தப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பதுங்கியுள்ள ஆபத்துகள்

இவ்வாறு திருடப்படும் தகவல்களைப் பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் மாணவர்களையும் பெற்றோர்களையும் எளிதாக வலையில் வீழ்த்த முடியும். புகழ்பெற்ற கல்லூரிகளில் கட்டணமில்லா சேர்க்கை வழங்குவதாகக் கூறுவது, வினாத்தாள் கசிந்துவிட்டதாகக் கூறி பணம் பறிப்பது, கல்வி உதவித்தொகை மற்றும் கல்விக்கடன் தருவதாகக் கூறி மோசடி செய்வது போன்ற குற்றங்கள் அதிகரிக்க இது நேரடியாக வழிவகுக்கும். மேலும், மாணவர்களின் எண்களுக்குத் தேவையற்ற ஸ்பேம் அழைப்புகளும், ஃபிஷிங் லிங்க்குகளும் அனுப்பப்பட்டு வங்கி மோசடிகள் நடைபெறவும் அதிக வாய்ப்புள்ளது.

வல்லுநர்கள் எச்சரிக்கை

தேர்வு நடத்தும் முகமைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் இணையப் பாதுகாப்பு கட்டமைப்பு பலவீனமாக இருப்பதே இவ்வளவு பெரிய அளவிலான தரவு திருட்டிற்குக் காரணம் என சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

மாணவர்களின் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பதற்கான டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தை (DPDP Act) முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Embed widget