SSC Tier-I Exam: தென் மண்டல எஸ்.எஸ்.சி தேர்வு டையர் 1-க்கான தேதிகள் அறிவிப்பு - விவரம் உள்ளே
தேர்வுக்கான மின்னணு அனுமதிச் சீட்டினை, தேர்வு நடைபெறும் தேதிக்கு 4 நாட்கள் முன்பிருந்து, தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
2020 வருட ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு, (நிலை -1) கணினி வழியில் நடத்தப்படும் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது
இது தொடர்பாக தேர்வாணையம் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், " நிலை -1 ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வை எழுதுவதற்கு தென் மண்டலத்தில் 2,56,457 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் வேலூர், ஆந்திரப்பிரதேசத்தில் சிராலா, குண்டூர், காக்கிநாடா, கர்னூல், நெல்லூர், ராஜமுந்திரி, திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் மற்றும் விஜயநகரம், தெலங்கானாவில் ஹைதராபாத், கரீம்நகர் மற்றும் வாரங்கல் ஆகிய 20 நகரங்களில் உள்ள 39 மையங்களில் நடைபெற உள்ளது.
JEE Main Results Declared: JEE முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு : செக் செய்வது எப்படி?
தென் மண்டலத்தில் 13.08.2021, 16.08.2021, 17.08.2021, 18.08.2021, 20.08.2021, 23.08.2021 மற்றும் 24.08.2021 ஆகிய 7 நாட்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று ஷிஃப்டுகளில் - காலை 09:00 முதல் 10:00 மணி வரை, நண்பகல் 12:00 முதல் 1 :00 மணி வரை மற்றும் பிற்பகல் 3 முதல் 4 மணி வரை - தேர்வு நடைபெறும்.
இத் தேர்வுக்கான மின்னணு அனுமதிச் சீட்டினை, தேர்வு நடைபெறும் தேதிக்கு 4 நாட்கள் முன்பிருந்து, தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது பற்றிய தகவல், விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்பட்டுள்ளது.
SSC Southern Region Combined Graduate Level Examination 2020 (Tier-I) will be held from august 13 to 24
தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பைகள் தேர்வுக் கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு அனுமதிச் சீட்டு மற்றும் செல்லத்தக்க அசல் அடையாள அட்டை வைத்திருப்போர் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு, தென்மண்டல அலுவலகத்தின் உதவி எண்களான 044-28251139 மற்றும் 9445195946 ஆகியவற்றை அணுகலாம். கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், அனுமதி சீட்டில் உள்ள விதிமுறைகளை பின்பற்றுமாறு தேர்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணை செயலாளர் மற்றும் தென் மண்டல இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாசிக்க:
Teacher training exam : ஆசிரியர் பயிற்சி தேர்வுகள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
அம்மா சொன்ன ஒரே அட்வைஸ்.. முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் அதிகாரியான இளம் பெண்!
NEET PG 2021: மாணவர்கள் கவனத்துக்கு: நீட் பி.ஜி. தேர்வு இடஒதுக்கீட்டுத் திருத்தம் செய்வது எப்படி?
தருமபுரியில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றும் செங்கல் சூளையில் வேலை செய்யும் பட்டதாரிகள்...