மேலும் அறிய

Part Time Teachers: இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்; பள்ளிக்கல்வித்துறை பேச்சுவார்த்தை தோல்வி

சம ஊதியம் கோரிப் போராடும் இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை நடத்திய பேச்சுவார்த்தை  தோல்வியில் முடிந்துள்ளது.

ஊதிய முரண்பாட்டை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் அளிக்க வேண்டும் என்று கோரிப் போராடும் இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை நடத்திய பேச்சுவார்த்தை  தோல்வியில் முடிந்துள்ளது. 3ஆவது நாளாக இந்தப் போராட்டம் இன்று தொடர்ந்து வந்த நிலையில், பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. அதே ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ரூ.5,200 வரையே அடிப்படைஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. அடிப்படை ஊதிய வேறுபாடு காரணமாக மொத்த ஊதியம் ரூ.15,500 வரை குறைத்து வழங்கப்படுகிறது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை அடுத்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். எனினும் அவர்களின் கோரிக்கையை திமுக, அதிமுக அரசுகள் நிறைவேற்றவில்லை. இந்நிலையில் சம வேலைக்கு சம ஊதியம் அளிக்க வேண்டும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி வந்தனர். 

3 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம்

சங்க ஆசிரியர்கள் சென்னை பேராசிரியர் அன்பழகன் (டிபிஐ) வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வி அலுவலகம் முன்பு நேற்று முன் தினம் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொண்டு, ஊதிய வேறுபாட்டை களையக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மயங்கி விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில் 3 நாட்களாகப் போராடும் இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

பேச்சுவார்த்தை தோல்வி

போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுடன் செயலாளர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. 

எனினும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக, கல்வித் துறை உறுதி அளித்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். 

மாற்றுத் திறனாளிகள் 3வது நாளாக போராட்டம்

அதேபோல, அரசுக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர் பணி வழங்கக் கோரி பார்வையற்ற பட்டதாரிகளும்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குநரக வளாகத்தில் 3-வது நாளாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
"நானா இருந்தா தோற்கடிச்சிருப்பேன்" டிரம்ப் வெற்றி குறித்து பைடன் ஒபன் டாக்!
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
Embed widget