மேலும் அறிய

School Reopen: குழந்தைகளே ரெடியாகுங்க! முடிந்தது அரையாண்டு தேர்வு விடுமுறை: இன்று பள்ளிகள் திறப்பு..!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை நிறைவடைந்து பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி அன்று அரையாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்றது. 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, டிசம்பர் 19ம் தேதி  தொடங்கிய தேர்வு டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற்றது.  மொத்தமாக 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்ற நிலையில், 6, 8, 10, 12 ஆம் வகுப்புகளுக்கு காலையிலும், 7, 9, 11 ஆம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வு நடந்து முடிந்தது.

பள்ளிகள் இன்று திறப்பு:

அதைதொடர்ந்து, கடந்த 24ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில்,  9 நாட்கள் அரையாண்டு விடுமுறை நிறைவடைந்த நிலையில், இன்று முதல் தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும்  மற்றும் தனியார் பள்ளிகள் வழக்கம் போல் திறக்கப்பட்டு இயங்கப்பட உள்ளன. அதேநேரம், 1  முதல் 5 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அரையாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டு, வரும் 5 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி திட்டம் நடைபெறவுள்ளதால் விடுமுறை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

பள்ளி நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை:

முன்னதாக, அரையாண்டு விடுமுறையில் சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று புகார் எழுந்தது. இதனால், அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியது. பொதுத் தேர்வுகளை எழுத உள்ள மாணவர்களுக்கு மட்டும் அசைன்மென்ட்டுகளை வழங்கலாம் என்றும் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்வு முறை:

2022- 2023 ஆம் கல்வியாண்டில் அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு இந்தத் தேர்வு நடைபெற்றது. அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப்பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாக வினாத் தாள்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக தேர்வு நாட்களுக்குரிய வினாத் தாள்களை பெற தங்கள் பள்ளி சார்பாக ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து, அவ்விவரத்தினை சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப் பள்ளித் தலைமையாசிரியருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தனர். கடந்த காலாண்டுத் தேர்வில் பள்ளிகளே வினாத் தாள்களைத் தயாரித்துக்கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த முறை அரையாண்டுத் தேர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படை பின்பற்றப்பட்டது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

TN By Election Results 2026 LIVE: 2 தொகுதிகளிலும் தவெக முன்னிலை- 2ஆம் இடத்தில் யார்.?
TN By Election Results 2026 LIVE: 2 தொகுதிகளிலும் தவெக முன்னிலை- 2ஆம் இடத்தில் யார்.?
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
திருச்சி மாஸ் சாதனை! உயர்கல்வி சேர்க்கையில் தமிழகத்திலேயே முதலிடம்: வெற்றிக் கொடி நாட்டியது
திருச்சி மாஸ் சாதனை! உயர்கல்வி சேர்க்கையில் தமிழகத்திலேயே முதலிடம்: வெற்றிக் கொடி நாட்டியது
குரூப் 4: லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள்; வெறும் 6,574 அறிவிப்பா? - கொந்தளித்த டிடிவி தினகரன்
குரூப் 4: லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள்; வெறும் 6,574 அறிவிப்பா? - கொந்தளித்த டிடிவி தினகரன்

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election Results LIVE Blog : 2 தொகுதிகளிலும் தவெக முன்னிலை- 2ஆம் இடத்தில் யார்.?
TN By Election Results LIVE Blog : 2 தொகுதிகளிலும் தவெக முன்னிலை- 2ஆம் இடத்தில் யார்.?
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
IAS Transfer: உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
Kilambakkam: அடுத்த பிரச்னை ஓவர்..! இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா ரயிலில் போகலாம் - ரயில் இணைப்பில் அப்க்ரேட்
அடுத்த பிரச்னை ஓவர்..! இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா ரயிலில் போகலாம் - ரயில் இணைப்பில் அப்க்ரேட்
TN Weather News: 9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Embed widget