இந்த சமூகத்தில் நாளை நடமாடும் நல்ல மனிதர்களை உருவாக்க கூடிய இடம் தான் பள்ளிக்கூடம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
திருச்சி பொன்மலைப்பட்டி புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவிகளுக்கு விலையில்லா இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.
![இந்த சமூகத்தில் நாளை நடமாடும் நல்ல மனிதர்களை உருவாக்க கூடிய இடம் தான் பள்ளிக்கூடம் - அமைச்சர் அன்பில் மகேஷ் School is the place where we can create good people who will walk in this society tomorrow Minister Anbil Mahesh TNN இந்த சமூகத்தில் நாளை நடமாடும் நல்ல மனிதர்களை உருவாக்க கூடிய இடம் தான் பள்ளிக்கூடம் - அமைச்சர் அன்பில் மகேஷ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/21/1bb4cf1073b12c97602f4911fdfb73611689920695133184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருச்சி பொன்மலைப்பட்டி புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவிகளுக்கு விலையில்லா இலவச மிதிவண்டிகளை வழங்கினார். குறிப்பாக திருச்சி பொன்மலைப்பட்டி புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவிகளுக்கு விலையில்லா இலவச மிதிவண்டிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், “தமிழக முதலமைச்சர் மாணவ செல்வங்களிடம் தொடர்ந்து முன்வைக்கக்கூடிய வேண்டுகோள். நன்கு உணவருந்த வேண்டும். நன்கு விளையாட வேண்டும். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தாங்கள் கற்பித்து நல்ல மதிப்பெண்கள் பெரும் அதே நேரத்தில் தாங்கள் கற்றுக் கொண்டதை சக மாணவர்களுக்கு சொல்லித் தந்து உதவ வேண்டும். இந்த சமூகத்தில் நடமாடும் நல்ல மனிதர்களை உருவாக்கக்கூடிய இடம்தான் பள்ளிக்கூடம், இங்கு படித்து விட்டு செல்பவர்கள் மருத்துவர்களாக, பொறியாளராக, ஏன் கல்வித்துறை அமைச்சராக கூட ஆகலாம். பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்னென்ன வழிகாட்டுதல்களை சொல்லித் தருகிறார்களோ அதனை மாணவச் செல்வங்கள் பின்பற்ற வேண்டும்” என மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மேடையில் பேசுகையில், “சிறப்பான நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று இருக்கும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கும், நிகழ்ச்சியினை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த சி.இ.ஓ அவர்களுக்கும், மேடையில் வீற்றிருக்கும் அனைவருக்கும் பத்திரிக்கை நண்பர்களுக்கும் மாணவ செல்வங்களுக்கும் இனிய காலை வணக்கத்தினை தெரிவித்துக் கொண்டார். திருச்சி மாவட்டத்தில் 8213 மாணவர்களுக்கும் 12,186 மாணவிகளுக்கும் என மொத்தமாக 20399 மிதிவண்டிகளை வழங்க இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது - இந்நிலையில் இதன் அடிப்படையில் இன்று பொன்மலை பட்டியில் 448 மாணவிகளுக்கு இன்று மிதிவண்டிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். மேலும் திருச்சி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யபட்ட மிதிவண்டிகளை படிபடியாக அனைத்து பள்ளிகளுக்கும் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது” என தெரிவித்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)