மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

கிராம சபைக் கூட்டங்களில் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பள்ளி தலைமை ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும்.

பள்ளி தலைமை ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும். பங்கேற்று, பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முன்வைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள்  கிராம சபைக் கூட்டங்களில் கட்டாயம் பங்கேற்று, இடைநிற்றல், மாணவர் சேர்க்கை, கற்றல்,‌ கற்பித்தல்‌, பள்ளி உட்கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு தொடர்பாகவும் விவாதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்‌, அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ , மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள்‌ ஆகியோருக்கு பள்ளிக்கல்வி ஆணையர்‌ சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பள்ளி மேலாண்மைக்‌ குழு கூட்ட தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தில்‌ பகிர்ந்து கொண்டு விவாதிப்பது தொடர்பான வழிகாட்டுதல்கள்‌:

1. அக்டோபர்‌ 2ஆம்‌ தேதி நடைபெற இருக்கும்‌ கிராம சபை கூட்டத்தில்‌ பள்ளியின்‌ சார்பில்‌ தலைமையாசிரியர்‌. பள்ளி மேலாண்மைக்‌ குழுவின்‌ தலைவர்‌, உறுப்பினர்கள்‌ கலந்து கொண்டு நடந்து முடிந்த பள்ளி மேலாண்மைக்‌ குழுக்‌ கூட்டத்தில்‌ பள்ளி வளர்ச்சி, கற்றல்‌ கற்பித்தல்‌ போன்றவை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களைப் பகிர்ந்து கொண்டு விவாதிக்க வேண்டும்‌.

2. பள்ளியின்‌ தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மைக்‌ குழுவின்‌ தலைவர்‌, உறுப்பினர்கள்‌ தங்கள்‌ பள்ளியின்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழுக்‌ கூட்‌ டத்தில்‌ பள்ளி வளர்ச்சி, கற்றல்‌ கற்பித்தல்‌ போன்றவை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை முறைப்படி தொகுத்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

3. கீழ்க்கண்ட கருத்துக்கள்‌ தொடர்பான தீர்மானங்களை முறைப்படி தொகுத்து கிராம சபைக் கூட்டத்தில்‌ ஆலோசனைகளுக்காக சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

அ. இடைநிற்றல்‌
ஆ .மாணவர்‌ சேர்க்கை
இ. கற்றல்,‌ கற்பித்தல்‌
ஈ. பள்ளி உட்கட்டமைப்பு
உ. மாணவர்‌ பாதுகாப்பு

4. அக்டோபர்‌ 2ஆம்‌ தேதி நடைபெறும்‌ சிறப்பு கிராம சபை கூட்டத்தில்‌ இத்தீர்மானங்களைப்‌ பகிர்ந்து கொண்டு அது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டு தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்‌.

5. கிராம சபை கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக்‌ குழுக்‌ கூட்ட தீர்மானங்களைப்‌ பகிர்ந்துகொள்வதன்‌ மூலம்‌ கிராம மக்கள்‌ தங்கள்‌ பள்ளி சார்ந்த பிரச்சனைகள்‌ மற்றும்‌ தேவைகளை அறிந்துகொண்டு தங்களின்‌ பங்களிப்பை அளிக்க இயலும்‌. மேலும்‌ கிராமப்‌ பஞ்சாயத்துக்கள்‌ பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணையாகச் செயல்பட முடியும்‌.

6. கிராம சபை கூட்டத்தில்‌, பள்ளி மேலாண்மைக்‌ குழுக்‌ கூட்ட தீர்மானங்கள்‌ தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை,முடிவுகளை இம்மாதம்‌ கடைசி வெள்ளிக்‌ கிழமை நடைபெறும்‌ பள்ளி மேலாண்மைக்குழுக்‌ கூட்டத்தில்‌ கலந்தாலோசிக்க வேண்டும்‌.

மேற்காணும்‌ அனைத்து வழிமுறைகளையும்‌ பின்பற்றி பள்ளி மேலாண்மைக்‌ குழுக்‌ கூட்ட தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தில்‌ பகிர்ந்து கொண்டு விவாதிக்க தலைமையாசிரியர்கள்‌, பள்ளி மேலாண்மைக்‌ குழு தலைவர்‌,உறுப்பினர்களை அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ , மாவட்டத்‌ திட்ட ஒருங்கிணைப்பாளர்கள்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானைPriyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்Maharastra CM :  ஷிண்டே  vs ஃபட்னாவிஸ் புதுகணக்கு போடும் பாஜக! முதல்வர் அரியணை யாருக்கு?Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget