மேலும் அறிய

தலைமைச் செயலாளரை திடீரென சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ்; பரபர பின்னணி இதுதான்!

சமக்ர சிக்‌ஷா அபியான் என்னும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்துக்கான முதல் தவணை நிதியை மத்திய அரசு இன்னும் விடுவிக்காத நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் முருகானந்தத்தைச் சென்னையில் சந்தித்துப் பேசினார். சமக்ர சிக்‌ஷா அபியான் என்னும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்துக்கான முதல் தவணை நிதியை மத்திய அரசு இன்னும் விடுவிக்காத நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் இணைய சம்மதம் தெரிவித்து சில மாதங்களுக்கு முன்பு, தமிழக தலைமைச் செயலாளர், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி இருந்தார். எனினும் அதில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக மும்மொழிக் கொள்கை, 3, , 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு, 8ஆம் வகுப்பு முதல் தொழில் கல்வி பாடம் ஆகியவற்றுக்கு விலக்கு தேவை என்று தமிழக அரசு தெரிவித்து இருந்தது.

இதற்கு மத்திய அரசு செவிசாய்க்காத நிலையில், சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்துக்கான முதல் தவணை நிதி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. 

பின்னணி என்ன?

இதற்கிடையே கொள்கையை விட்டுக்கொடுத்து மத்திய அரசிடம் நிதி பெறமாட்டோம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்து இருந்தார். மேலும் பேசிய அவர், ’’இதுகுறித்து முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரை அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். உங்களின் (மத்திய அரசு) மறைமுக நோக்கம் என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை.  அதைத் தெரிந்துகொள்ள, எங்கள் குழுவின் பரிந்துரை அவசியம்.

குழு ஒப்புக்கொள்ளவில்லை என்ற சூழலில், நாங்களும் இதை ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பிறகே மத்தியக் கல்வி அமைச்சரைச் சந்தித்தோம். எஸ்எஸ்ஏ திட்டத்துக்கான நிதியைத்தான் கேட்கிறோம். பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேர்க்கச் சொல்லவில்லை’’ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார்.

சந்திப்பில் நடந்தது என்ன?

இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் முருகானந்தத்தைச் சென்னையில் சந்தித்துப் பேசினார். அப்போது பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் சேர்வது பற்றி எழுதிய கடிதம் குறித்தும் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்துக்கான நிதியைப் பெறுவது பற்றியும் கலந்து ஆலோசித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

அதேபோல எஸ்எஸ்ஏ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளதால் 15,000 ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் தலைமைச் செயலாளருடன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget