மேலும் அறிய

போராட்டத்தால் பள்ளி வகுப்பறைக்கு பூட்டு: வராண்டாவில் வெகுநேரம் காத்திருந்த மாணவ, மாணவிகள்

டிட்டோஜாக் வேலை நிறுத்த போராட்டத்தை ஒட்டி தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பூவத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை தலைமை ஆசிரியை மாணவ, மாணவிகளை வெளியேற்றி பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்: டிட்டோஜாக் வேலை நிறுத்த போராட்டத்தை ஒட்டி தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பூவத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை தலைமை ஆசிரியை மாணவ, மாணவிகளை வெளியேற்றி பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள வேலைநிறுத்தம்

தொடக்கக் கல்வித் துறை கட்டமைப்பை அடியோடு சீரழிப்பதாகவுள்ள, பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வைப் பறிக்கக்கூடியதாகவுள்ள மாநில முன்னுரிமையைக் கொண்டு வந்துள்ள அரசாணை எண் 243}ஐ ரத்து செய்ய வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை சரி செய்து, மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை 2006, ஜனவரி 1 ஆம் தேதி முதல் வழங்கப்பட வேண்டும். முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

55 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை

இதன் காரணமாக மாவட்டத்திலுள்ள தொடக்கப்பள்ளிகளில் ஏறத்தாழ 55 சதவீத ஆசிரியர்கள் இன்று பணிக்கு வரவில்லை. அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்ட நிலையில், பல ஆசிரியர்கள் வராததால், மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆளில்லாத நிலை நிலவியது.
 
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பூவத்துாரில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.  இப்பள்ளியில் 127 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அரசு சார்பில் நான்கு ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் இரு ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். 

பள்ளி வகுப்பறையை இழுத்து பூட்டிய தலைமை ஆசிரியை

இந்நிலையில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகளும் ஈடுபட்டனர். இதற்கிடையில், பூவத்துாரில் காலை வழக்கம் போல மாணவ, மாணவிகளும், தற்காலிக ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்தனர். வகுப்பறை திறந்து இருந்த நிலையில், மாணவ, மாணவிகள் வகுப்பறையில் அமர்ந்து இருந்தனர். அப்போது  அங்கு வந்த பள்ளி தலைமையாசிரியை கண்ணகி, மாணவர்களை வெளியேற்றி விட்டு வகுப்பறையை பூட்டி விட்டு சென்றதால் வகுப்பறைக்கு வெளியே வராண்டாவில் அமர்ந்து இருந்தனர். வெகுநேரமாக மாணவ, மாணவிகள் வராண்டாவில் அமர்ந்து இருப்பது குறித்து பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினருக்கு தகவல் கிடைத்தது. 

எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.. 2026ல் அதிமுக ஆட்சி அமைக்கும்: எம்எல்ஏ வைத்திலிங்கம் சூளுரை

கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை

இதையடுத்து அங்கு வந்த பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக கல்வித்துறை அதிகாரிகளின் ஏற்பாட்டின்படி பள்ளி வகுப்பறையின் பூட்டுகள் திறக்கப்பட்டு, இரண்டு மணி நேரமாக வெளியில் காத்திருந்த மாணவ, மாணவிகளை வகுப்பறைக்கு உள்ளே சென்றனர். பெற்றோர் ஆசிரியர் கழகத்தினால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் வகுப்புகளை துவங்கினர். பின்னர் மாணவ, மாணவிகள் தங்களின் பாடங்களை படித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெற்றோர்கள் வேதனை

இதுகுறித்து பெற்றோர்கள் தரப்பில் கூறுகையில், ஆசிரிய, ஆசிரியைகள் போராட்டம் நடத்தினால் பள்ளி விடுமுறை என்று எங்களிடமாவது தெரிவித்து இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி இருக்கமாட்டோம். ஆனால் வகுப்பறைகளை பூட்டி விட்டு சென்றது கண்டனத்திற்கு உரியது. வெகு நேரம் வரை குழந்தைகள் வராண்டாவிலேயே உட்கார்ந்து இருப்பது தெரிய வந்து பள்ளிக்கு சென்றோம். பின்னர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வகுப்பறை திறக்கப்பட்டது. இதுபோன்று இனியும் நடக்காதவாறு கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Class 12 Result: பிளஸ் 2 தேர்வில் 93.88% மதிப்பெண்- முடிவுகள் வெளியாகும் முன்னே பரிதாபமாக பலியான மாணவி
Class 12 Result: பிளஸ் 2 தேர்வில் 93.88% மதிப்பெண்- முடிவுகள் வெளியாகும் முன்னே பரிதாபமாக பலியான மாணவி
RTE Admission 2026: தனியார் பள்ளியில் இலவச கல்வி- ஆர்டிஇ சேர்க்கை எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
RTE Admission 2026: தனியார் பள்ளியில் இலவச கல்வி- ஆர்டிஇ சேர்க்கை எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
உதவித்தொகை, வேலை உறுதி: ஐஐடி சென்னையில் எம்டெக், எம்எஸ்சி, எம்ஏ படிப்புகள்! விண்ணப்பிப்பது எப்படி?
உதவித்தொகை, வேலை உறுதி: ஐஐடி சென்னையில் எம்டெக், எம்எஸ்சி, எம்ஏ படிப்புகள்! விண்ணப்பிப்பது எப்படி?
Anna University: அப்போ ஞானசேகரன்..இப்போ ஞானவேல் பாபு; அண்ணா பல்கலை. பேராசிரியர் பாலியல் புகாரில் சஸ்பெண்ட்!
Anna University: அப்போ ஞானசேகரன்..இப்போ ஞானவேல் பாபு; அண்ணா பல்கலை. பேராசிரியர் பாலியல் புகாரில் சஸ்பெண்ட்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்
மீண்டும் திமுக ஆட்சி! வெளியான சர்வே முடிவுகள்.. காலரை தூக்கும் ஸ்டாலின்
விஜய்க்கு காவல்துறை செக்வீட்டில் இருந்தே பரப்புரை?கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Artemis II: 50 ஆண்டுகளில் முதல்முறை..! நிலவிற்கு மனிதர்களை அனுப்பிய நாசா - ஆர்டெமிஸ் II செய்யப்போவது என்ன?
Artemis II: 50 ஆண்டுகளில் முதல்முறை..! நிலவிற்கு மனிதர்களை அனுப்பிய நாசா - ஆர்டெமிஸ் II செய்யப்போவது என்ன?
Trump Vs Iran: சும்மா அடிச்சு விடுங்க.! புதிய அதிபர் போர்நிறுத்தம் கேட்டதாக பதிவிட்ட ட்ரம்ப்; காரித்துப்பிய ஈரான்
சும்மா அடிச்சு விடுங்க.! புதிய அதிபர் போர்நிறுத்தம் கேட்டதாக பதிவிட்ட ட்ரம்ப்; காரித்துப்பிய ஈரான்
IPL 2026: மொத ரவுண்டிற்கே நாக்-அவுட் ஆன CSK - ஐபிஎல் புள்ளிப்பட்டியல் நிலவரம் - டாப் 4 இடங்களில் எந்த அணிகள்?
IPL 2026: மொத ரவுண்டிற்கே நாக்-அவுட் ஆன CSK - ஐபிஎல் புள்ளிப்பட்டியல் நிலவரம் - டாப் 4 இடங்களில் எந்த அணிகள்?
IPL 2026 LSG vs DC: சாமியாய் மாறிய சமீர் ரிஸ்வி..! தோற்க வேண்டிய டெல்லி சூப்பர் வெற்றி! பண்ட் ரசிகர்களுக்கு ஏமாற்றம்
IPL 2026 LSG vs DC: சாமியாய் மாறிய சமீர் ரிஸ்வி..! தோற்க வேண்டிய டெல்லி சூப்பர் வெற்றி! பண்ட் ரசிகர்களுக்கு ஏமாற்றம்
TVK Vijay Nomination: விஜய் நாளை வேட்புமனுத்தாக்கல்! திருச்சி கிழக்கில் நாளை எங்கே பரப்புரை செய்கிறார்?
TVK Vijay Nomination: விஜய் நாளை வேட்புமனுத்தாக்கல்! திருச்சி கிழக்கில் நாளை எங்கே பரப்புரை செய்கிறார்?
காண்டம் தட்டுப்பாடு! ஈரானால் புதிய நெருக்கடியில் இந்தியா!8000 கோடி நட்டம்!
காண்டம் தட்டுப்பாடு! ஈரானால் புதிய நெருக்கடியில் இந்தியா!8000 கோடி நட்டம்!
Car Sales: மாஸ் காட்டிய மாருதி! மார்ச் மாசம் அதிகம் விற்ற கார் யாரோடது?
Car Sales: மாஸ் காட்டிய மாருதி! மார்ச் மாசம் அதிகம் விற்ற கார் யாரோடது?
Indigo Fare Increased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?
Indigo Fare Increased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?
Embed widget