மேலும் அறிய

எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.. 2026ல் அதிமுக ஆட்சி அமைக்கும்: எம்எல்ஏ வைத்திலிங்கம் சூளுரை

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட யாரையும் நாங்கள் இழக்க விரும்பவில்லை. ஆனால், அ.தி.மு.க., இணைய கூடாது என நினைக்காதவர்கள், விரும்பாதவர்கள் தானாகவே அ.தி.மு.க.,வை விட்டு வெளியேறி விடுவார்கள்.

தஞ்சாவூர்: எழுதி வைத்துக் கொள்ளுங்கள் வரும் 2025ம் ஆண்டு டிசம்பருக்குள் அ.தி.மு.க., ஒற்றுமையாகும். 2026ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும் என்று தஞ்சாவூரில் ஓ.பி.எஸ்., ஆதரவாளரும், ஒரத்தநாடு எம்.எல்.ஏ.,வுமான வைத்திலிங்கம் தெரிவித்தார்.

அதிமுக ஒன்றாக இணைய வேண்டும்

இதுகுறித்து அவர் தஞ்சையில் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:  அ.தி.மு.க., தொண்டர்கள் 99.9 சதவீதம் பேர் கட்சி ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்புகின்றனர். வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலிலதா ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என நினைக்கின்றனர். அந்த எண்ணத்தை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆத்மாக்கள் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா?

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட யாரையும் நாங்கள் இழக்க விரும்பவில்லை. ஆனால், அ.தி.மு.க., இணைய கூடாது என நினைக்காதவர்கள், விரும்பாதவர்கள் தானாகவே அ.தி.மு.க.,வை விட்டு வெளியேறி விடுவார்கள். இது காலத்தின் கட்டாயம். ஒற்றை தலைமையா?, இரட்டை தலைமையா? என்பது அ.தி.மு.க., இணையும் போது முடிவுக்கு வரும்.

2025ம் ஆண்டு டிசம்பருக்குள் அ.தி.மு.க., ஒற்றுமையாகும். 2026ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். கடந்த நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளை கொண்டு தான், அவர் அ.தி.மு.கவை அழித்து விடுவார் என டிடிவி. தினகரன் கருத்து தெரிவித்தார். உண்மையும் அதுதான்.

150 இடங்களில் வெற்றி பெறும் என ஏமாற்றினார்

கடந்த 2021ம் ஆண்டில் அ.ம.மு.க., தே.மு.தி.க.வை அ.தி.மு.க., கூட்டணியில் சேர்க்க வேண்டும் என நானும், நத்தம் விசுவநாதனும் வற்புறுத்தினோம். அன்றைக்கு அ.தி.மு.க., தனித்து நின்றே 150 இடங்களில் வெற்றி பெற்று விடலாம் என எடப்பாடி பழனிசாமி கூறி எல்லோரையும் ஏமாற்றினர். லோக்சபா தேர்தலிலும் பெரிய மகா கூட்டணி உருவாகும் நாம் 40 சதவீதம் வெற்றி பெற்று விடலாம் என கூறினார். ஆனால் 20 சதவீதம் அளவுக்கு இன்றைக்கு மோசமான நிலைக்கு அ.தி.மு.க.,வை பழனிசாமி கொண்டு வந்துள்ளதை நினைத்து தினகரன் கருத்து தெரிவித்து இருப்பார்.

அ.தி.மு.க.,வை ஒன்றிணைக்க சசிகலா சுற்றுப்பயணம் செய்கிறார். சசிகலா  எடப்பாடி பழனிசாமி, தினகரன், ஓபிஎஸ் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது ஒவ்வொரு தொண்டனின் எண்ணம். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்பு செய்திகள்

அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget