மேலும் அறிய

Periyar University Issue: சர்ச்சை கேள்வி; உள்நோக்கம் இல்லை - வருத்தம் தெரிவித்த பெரியார் பல்கலைக்கழகம்

Periyar University Question Paper Issue: பெரியார் பல்கலைக்கழகப் பருவத் தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்ட விவகாரத்தில் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

பெரியார் பல்கலைக்கழகப் பருவத் தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்ட(Periyar University Question Paper Issue) விவகாரத்தில் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதில் எந்த உள்நோக்கமும் நேரடிப் தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

பெரியார் பல்கலைக்கழகம்(Periyar University) சார்பில் நடத்தப்பட்ட முதுகலை வரலாறு பாடத்திற்கான தேர்வில் ஜாதி குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி இடம் பெற்று இருந்தது. இது பல்வேறு தரப்பினரிடையே  கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த விளக்கத்தை பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கோபி தெரிவித்துள்ளார். 

அந்த அறிக்கையில், சர்ச்சைக்குரிய கேள்வியால் மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் இனிவரும் காலங்களில் இது போன்ற சர்ச்சைக்குரிய வினாக்கள் இடம்பெறாதவாறு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சர்ச்சைக்குரிய கேள்விகள் இடம் பெற்ற வினாத்தாள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கோபி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கோபி தெரிவித்துள்ளதாவது:

பெரியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ ஏப்ரல்‌-2022-இன்‌ பருவத்தேர்வுகள்‌ தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்‌, கடந்த 14.07.2022 அன்று முதுநிலை வரலாற்றுப்‌ பாடத்திற்கு நடைபெற்ற Freedom Movement in Tamil Nadu from 1880 C.E. to 1947 C.E.  என்ற தாளில் Part-Aவில் ஒரு மதிப்பெண்‌ வினாவில்‌ வரிசை எண் 11-ல் Which one is the lower caste belongs to Tamil Nadu?  (தமிழ்நாட்டில்‌ உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது?) என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சர்ச்சை குறித்து கீழ்கண்ட விளக்கம்‌ அனுப்பப்படுகிறது:

பல்கலைக்கழக வினாத்தாள்‌ அமைப்பது குறித்து பாடத்திட்டக்குழு வல்லுநர்கள்‌ வழங்கும்‌ பட்டியலில்‌ உள்ள பிற பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ பிற பல்கலைக்கழகத்தில்‌ உள்ள இணைவு பெற்ற கல்லூரிகளில்‌ பணியாற்றி வரும்‌ ஆசிரியர்களை அனுபவத்தின்‌ அடிப்படையில்‌ தலைவராக ((Chairman for Question Paper Setting) நியமிக்கப்படும். குறைந்தது மூன்று வருட கற்பித்தல்‌ அனுபவம்‌ உள்ள பிற ஆசிரியர்களுக்கு கேள்வித்தாள்‌ தயாரிக்கும்‌ பொறுப்பினை தலைவர்‌ என்ற நிலையில்‌ பல்கலைக்கழகத்தால்‌ நியமிக்கப்பட்ட பேராசிரியரே (Chairman) நியமித்து வினாத்தாள்கள்‌ தயாரிக்கப்படும்‌.

அவர்கள்‌ தயாரித்து வழங்கும்‌ வினாத்தாள்கள்‌ பல்கலைக்கழகத்தால்‌ வழங்கப்பட்டுள்ள பாடத்திட்டத்திற்கு உட்பட்டு அமைந்துள்ளதா? மதிப்பெண்கள்‌ முறையாகப் பிரித்து வழங்கப்பட்டுள்ளனவா? சர்சைக்குரிய வார்த்தைகள்‌ ஏதேனும்‌ உள்ளனவா? போன்றவற்றை தலைவர்‌ (Chairman for Question Paper Setting) என்ற நிலையில்‌ அவரே இறுதி செய்து பல்கலைக்கழகத்திற்கு வினாத்தாள்களை அனுப்பிவைப்பார்‌.

அவ்வாறு அனுப்பும்‌ போது ஒவ்வொரு பாடத்திற்கும்‌ இரண்டு வேறுபட்ட வினாத்தாள்கள்‌ தயாரித்து வழங்குவார்கள்‌. அவ்வாறு வழங்கப்படும்‌ வினாத்தாள்களில்‌ Random‌ முறையில்‌ இரண்டு வினாத்தாள்களில்‌ ஒன்று அச்சகத்திற்கு அனுப்பிவைக்கப்படும்‌. அவ்வாறு அனுப்பி வைக்கப்படும்‌ வினாத்தாள்‌ பல்கலைக்கழக வினாத்தாள்‌ பிரிவால்‌, அலுவலகப்‌ பயன்பாட்டிற்கான வினாத்தாள்‌ எண்‌ (Question Paper S.No.)  குறிப்பிடப்பட்டு அச்சகத்திற்கு அனுப்பிவைக்கப்படும்‌. 

அச்சகத்திலிருந்து முழுமையாக மூடி முத்திரையிடப்பட்ட பாக்கெட்டில்‌ கல்லூரி பெயர்‌, தேர்வு நடைபெறும்‌ நாள், வினாத்தாள்களின்‌ எண்ணிக்கை மற்றும்‌ வினாத்தாளின்‌ வரிசை எண்‌ ஆகியவை அச்சடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு வழங்கப்படும்‌. வினாத்தாள்களைப் பாதுகாப்பு‌ கருதி பல்கலைக்கழக தேர்வுத்துறை அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ எவரும்‌ படிப்பதற்கு அனுமதி இல்லை. எனவே இந்த சர்ச்சைக்குரிய வினா குறித்து
பல்கலைக்கழகத்திற்கு எந்த விதமான உள்நோக்கமோ, நேரடியான தொடர்போ இல்லை என்பதை தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

இவ்வாறான சர்ச்சைக்குரிய வினா கேட்கப்பட்டதன்‌ அடிப்படையில்‌, மாணாக்கர்களுக்கும்‌, பொதுமக்களுக்கும், கல்வியாளர்களுக்கும், கல்லூ நிர்வாகத்தினருக்கும்‌ மன உளைச்சல்‌ ஏற்பட்டிருப்பின்‌ அம்மன உளைச்சலுக்கு பல்கலைக்கழக நிர்வாகம்‌ வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. 

அத்துடன்‌, இனி வரும்‌ காலங்களில்‌ இவ்வாறான சர்ச்சைக்குரிய வினாக்கள்‌ எழாதவாறு வினாத்தாள்‌ அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்‌ எனவும்‌ உறுதியளிக்கப்படுகிறது. மேலும்‌ இந்த வினாத்தாள்‌ குறித்து முறையான விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்றும்‌
தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.

இவ்வாறு பல்கலைக்கழக பதிவாளர் கோபி தெரிவித்துள்ளார்.

Salem Periyar University: பெரியார் பல்கலை. சர்ச்சை கேள்வி விவகாரம்: குழு அமைத்து விசாரணை- உயர் கல்வித்துறை உறுதி

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Breaking News LIVE: அம்பேத்கர் குறித்த பேச்சு; அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Breaking News LIVE: அம்பேத்கர் குறித்த பேச்சு; அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Embed widget