மேலும் அறிய

ஆராய்ச்சி மாணவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம்; உயர் கல்வி உதவித்தொகையை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

120 பேருக்கு ஆராய்ச்சி படிப்பைத் தொடர மாதம் ரூ.25,000/- ஊக்கத் தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு ஊக்கத் தொகை பெறுவதற்கான ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

ஆராய்ச்சி மாணவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கும் முதலமைச்சர் உயர் கல்வி உதவித்தொகையை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.

உயர்கல்வித் துறை சார்பில் தமிழ்நாட்டில் உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவியருடைய ஆராய்ச்சி திறனை மேம்படுத்திடவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்திடவும் முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகைத் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 120 மாணவ, மாணவியர்களுக்கு ஆராய்ச்சி படிப்பைத் தொடர மாதம் ரூ.25,000/- ஊக்கத் தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு ஊக்கத் தொகை பெறுவதற்கான ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (22.08.2024) வியாழக்கிழமை காலை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாட்டில்‌ உயர்கல்வியை மேம்படுத்தும்‌ நோக்கில்‌, அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல்‌, அதன்‌ வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகள்‌, இதொமில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில்‌
மாணவர்களின்‌ திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல்‌, "நான்‌ முதல்வன்‌" திட்டத்தின்‌ மூலம்‌ தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல்‌, முதல்‌ தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள்‌, அரசுப்‌
பள்ளிகளில்‌ ஆறாம்‌ வகுப்பு முதல்‌ பன்னிரண்டாம்‌ வகுப்பு வரை பயின்ற மாணவிகள்‌ மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ தமிழ்‌ வழியில்‌ பயின்ற மாணவிகள்‌ இடைநிற்றலின்றி உயர்கல்வி பயில மாதந்தோறும்‌ ரூ.1000/- உதவித்‌தொகை வழங்கும்‌ "புதுமைப்‌ பெண்‌" திட்டம்‌, அதேபோன்று மாணவர்கள்‌ உயர்கல்வி பயின்றிட "தமிழ்ப்‌ புதல்வன்‌" திட்டம்‌, கல்லூரிகள்‌ மற்றும்‌ பல்கலைக்கழகங்களின்‌ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்‌ போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால்‌ அகில இந்திய அளவில்‌ உயர்கல்வி
சேர்க்கையில்‌ தமிழ்நாடு முதலிடம்‌ வகித்து வருகிறது.

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில்‌ 30.8.2022 அன்று நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள்‌ மாநாட்டில்‌, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌, "நம்முடைய மாணவர்களின்‌ ஆராய்ச்சி திறமையை மேம்படுத்தவும்‌, புதிய கண்டுபிடிப்புகளை தமிழ்நாட்டில்‌ ஊக்கப்படுத்தவும்‌ "CM Research Fellowship"
"முதலமைச்சரின்‌ ஆராய்ச்சி ஊக்கத்தொகை" திட்டம்‌ தொடங்கப்படும்‌. இதற்காக மாநில அளவில்‌ தகுதித்‌ தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள்‌ தேர்வு செய்யப்படுவார்கள்‌" என்று அறிவித்தார்‌.

அதன்படி, தமிழ்நாட்டில்‌ உயர்கல்வி பயிலும்‌ மாணவ, மாணவியருடைய ஆராய்ச்சி திறனையும்‌, புதிய கண்டுபிடிப்புகளையும்‌ ஊக்கப்படுத்திடும்‌ வகையில்‌, முதலமைச்சரின்‌ ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்தில்‌ பயன்பெற்றிட ஆராய்ச்சி மாணவர்களை (தெரிவு செய்வதற்காக ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ தகுதித்‌ தேர்வு
10.12.2023 அன்று நடத்தப்பட்டு, 120 மாணவ, மாணவியர்கள்‌ தெரிவு செய்யப்பட்டனர்‌. இவர்களில்‌ 60 மாணவர்கள்‌ அறிவியல்‌ பாடப்‌ பிரிவையும்‌, 60 மாணவர்கள்‌ கலை, மானுடவியல்‌ மற்றும்‌ சமூகவியல்‌ பாடப்‌ பிரிவையும்‌ சார்ந்தவர்கள்‌ ஆவார்கள்‌.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 120 மாணவ, மாணவியர்கள்‌ தங்கள்‌ ஆராய்ச்சி படிப்பினை அரசு பல்கலைக்கழகங்கள்‌ மற்றும்‌ அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ தொடர மாதம்‌ ரூ.25,000/- ஊக்கத்‌ தொகையாக மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும்‌. இத்திட்டத்திற்காக 12.31 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்‌டுள்ளது.

தொடர்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக வேளாண்மை - உழவர் நலத் துறையில் 158 உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget