மேலும் அறிய

RIMC: ராணுவக் கல்லூரியில் சேர நாளை மறுநாள் கடைசி! வாய்ப்பை தவறவிடாதீர்கள்! விண்ணப்பிப்பது எப்படி?

இராஷ்ட்ரிய இந்திய இராணுவக்‌ கல்லூரியின்‌ விண்ணப்பப்‌ படிவங்கள்‌ மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்‌.

இந்திய இராணுவக்‌ கல்லூரியில்‌ சேர தகுதி வாய்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்க நாளை மறுநாள் (அக்.15) கடைசித் தேதி ஆகும். இதற்கான தேர்வு 2025ஆம்‌ ஆண்டு டிசம்பர்‌ மாதம்‌ 7-ஆம்‌ தேதி அன்று நடத்தப்பட உள்ளது.

டேராடூனில்‌ உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக்‌ கல்லூரியில்‌ ஜூலை 2026 பருவத்தில்‌ 8ஆம்‌ வகுப்பில்‌ மாணவர்கள்‌ (சிறுவர்கள்‌ மற்றும்‌ சிறுமியர்கள்‌ ) சேருவதற்கான தேர்வு இந்திய நாட்டில்‌ குறிப்பிட்ட சில மையங்களில்‌ 2025ஆம்‌ ஆண்டு டிசம்பர்‌ மாதம்‌ 7ஆம்‌ தேதி அன்று நடைபெற உள்ளது. சென்னை நகரிலும்‌ இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வு முறை

இத்தேர்வு எழுத்துத்‌ தேர்வு மற்றும்‌ நேர்முகத்‌ தேர்வு ஆகிய இரண்டும்‌ கொண்டதாக இருக்கும்‌. எழுத்துத்‌ தேர்வு, ஆங்கிலம்‌, கணக்கு மற்றும்‌ பொதுஅறிவு ஆகிய தாள்களைக்‌ கொண்டது.

கணக்குத் தாள்‌ மற்றும்‌ பொது அறிவுத்‌ தாள்‌ ஆகியன ஆங்கிலத்தில்‌ அல்லது இந்தியில்‌ விடையளிக்கப்பட வேண்டும்‌. நேர்முகத்‌ தேர்வானது விண்ணப்பதாரர்களின்‌ அறிவுக்‌ கூர்மை, தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக இருக்கும்‌. எழுத்துத்‌ தேர்வின்‌ அடிப்படையில்‌ தகுதியானவர்‌ தேர்வு செய்யப்பட்‌டு அவர்களுக்கு மட்டும்‌ நேர்முகத்‌ தேர்வு நடத்தப்படும்‌. நேர்முகத்‌ தேர்வு பற்றிய விவரம்‌ பின்னர்‌ அறிவிக்கப்படும்‌.

இத்தேர்விற்கான விண்ணப்பப்‌ படிவம்‌, தகவல்‌ தொகுப்பேடு மற்றும்‌ முந்தைய தேர்விற்கான வினாத்தாள்‌ தொகுப்பை “கமாண்டன்ட்‌, இராஷ்ட்ரிய இந்திய இராணுவக்‌ கல்லூரி, கர்ஹிகான்ட்‌, டேராடூன்‌, உத்தரகாண்ட்‌ - 248 003- என்ற முகவரிக்கு வரைவோலையை அனுப்பி பெற்றுக்‌ கொள்ளலாம்‌..

வரைவோலை மூலம்‌ இராஷ்ட்ரிய இந்திய இராணுவக்‌ கல்லூரி, கர்ஹிகான்ட்‌, டேராடூன்‌, உத்தரகாண்ட்‌, அஞ்சல்‌ குறியீட்டு எண்‌ - 248 003 என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல்‌ வாயிலாக எழுத்து மூலம்‌ விண்ணப்பித்து -கமாண்டன்ட்‌, இராஷ்ட்ரிய இந்திய இராணுவக்‌ கல்லூரி, நிதி” அவர்களுக்கு வரைவோலைக்குரிய கிளை எச்.டி.எப்‌.சி. வங்கி, பல்லூபூர்‌ செளக்‌, டேராடூன்‌ (வங்கிக்‌ சுறியீடு-1399) உத்தரகாண்டில்‌ செலுத்தத்தக்க வகையில் பொதுப்‌ பிரிவினர்‌ ரூபாய்‌ 600/-ம்‌ மற்றும்‌ பட்டியல்‌ மற்றும்‌ பழங்குடி வகுப்பினர்  சாதிச் சான்றுடன்‌ ரூபாய்‌ 555/-ம்‌ வரைவோலை அனுப்பி விண்ணப்பப்‌ படிவத்தை பெற்றுக்‌ கொள்ளலாம்‌.

தகவல் பெறுவது எப்படி?

ராஷ்ட்ரிய இந்திய இராணுவக்‌ கல்லூரியின்‌ இணையதளம்‌ தற்போது பராமரிப்பு மற்றும்‌ தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக இயங்கவில்லை. இத்தேர்வு தொடர்பாக விண்ணப்பப்‌ படிவம்‌ மற்றும்‌ தகவல்‌ தொகுப்பேடு ஆகியன தற்போது RIMC இணையதளத்தில்‌ கோருதல்‌ இயலாது. எனினும்‌, மேற்படி விண்ணப்பப்‌ படிவங்களை https://admission.schoolmitra.com/#/admission/newEnquiry/6396eff3fc26e41841a5afd6 என்ற இணைய தளத்தில்‌ பெற்றுக்‌கொள்ளலாம்‌.

கமாண்டன்ட்‌, இராஷ்ட்ரிய இந்திய இராணுவக்‌ கல்லூரி, கர்ஹிகான்ட்‌, டேராடூன்‌, உத்தரகாண்ட்‌, அஞ்சல்‌ குறியீட்டு எண்‌ - 248 003 என்ற முகவரியை அஞ்சல்‌ குறியீட்டு எண்‌ மற்றும்‌ தொடர்பு எண்ணைத்‌ தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ அனுப்புதல்‌ வேண்டும்‌.

விண்ணப்பப்‌ படிவம்‌ மற்றும்‌ ததவல்‌ தொகுப்பேடு ஆகியன சென்னையிலுள்ள இத்தேர்வாணைய அலுவலகத்திலிருந்து விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.

விண்ணப்பப்‌ படிவங்கள்‌ அனுப்புவது எப்படி?

இராஷ்ட்ரிய இந்திய இராணுவக்‌ கல்லூரியின்‌ விண்ணப்பப்‌ படிவங்கள்‌ மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்‌. மேலும்‌, தனிப்பட்ட முறையில்‌ அச்சிடப்பட்ட விண்ணப்பப்‌ படிவங்கள்‌, ஒளி நகல்‌ எடுக்கப்பட்ட விண்ணப்பப்‌ படிவங்கள்‌ அல்லது ராஷ்ட்ரிய இந்திய இராணுவக்‌ கல்லூரி ஹாலோகிராம்‌ முத்திரையிடப்படாத விண்ணப்பப்‌ படிவங்கள்‌ நிராகரிக்கப்படும்‌. எந்தவொரு சூழ்நிலையிலும்‌ விண்ணப்பக்‌ கட்டணம்‌ திரும்பச்‌ செலுத்தப்பட மாட்டாது.

விண்ணப்பதாரர்களின்‌ (சிறுவர்கள்‌,சிறுமியர்‌, பெற்றோர்‌ அல்லது பாதுகாப்பாளர்‌ தமிழ்நாட்டில்‌ வசிப்பவராக இருத்தல்‌ வேண்டும்‌. விண்ணப்பதாரர்‌ 01-07-2026 அன்று 11.5 வயது நிரம்பியவராகவும்‌, 13 வயதை அடையாதவராகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. அதாவது அவர்கள்‌ 02-07-2013-க்கு முன்னதாகவும்‌ 01-01-2015-க்கு பின்னதாகவும்‌ பிறந்திருக்கக்‌ கூடாது. இந்த வயது வரம்பில்‌ எந்த தளர்த்தலும்‌ கிடையாது.

விண்ணப்பதாரர்‌ மேற்குறிப்பிட்ட இராணுவக்‌ கல்லூரியில்‌ சேர அனுமதிக்கப்படும்‌பொழுது, அதாவது 01-07-2026-ல்‌ அங்கீகரிக்கப்‌ பெற்ற பள்ளியில்‌ ஏழாம்‌ வகுப்பு படிப்பவராகவோ அல்லது தேர்ச்சி பெற்றவராகவோ ஒருத்தல்‌ வேண்டும்‌.

நாளை மறுநாள் கடைசி

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்‌ படிவங்கள்‌ (இரட்டிப்பு படியுடன்‌) தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌, தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌, தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர் தேர்வாணயச்‌ சாலை, பூங்கா நகர்‌, சென்னை - 600 003 என்ற முகவரிக்கு 15.10.2025 (புதன்கிழமை) அன்று மாலை 5.45 மணிக்குள்‌ வந்து சேர வேண்டும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூடுதல் தகவல்களுக்கு: https://rimc.edu.in/rimc-index.aspx

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
Embed widget