மேலும் அறிய

புதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?

புதுச்சேரி: மின் கட்டண உயர்வை கண்டித்து நாளை புதுச்சேரி முழுவதும் பந்த் போராட்டம்

புதுச்சேரி: மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி நாளை புதுச்சேரியில் இண்டியா கூட்டணிக் கட்சியினர் முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். 

மின் கட்டண உயர்வு 

புதுச்சேரியில் ஆண்டுதோறும் மின்கட்டணம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான மின் கட்டண உயர்வு தொடர்பாக இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஜனவரி மாதம் பொதுமக்களிடம் கருத்து கேட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் கட்டண உயர்வு அறிவிக்கப்பட தாமதமானது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. அதன்படி வீட்டு உபயோக மின்சாரத்துக்கு யூனிட்டுக்கு 40 காசுகள் முதல் 75 காசுகள் வரை உயர்த்தப்பட்டது.

பிரிபெய்டு திட்டத்தை கைவிட வேண்டும்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினரும், சமூக அமைப்புகளும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் மின் கட்டண உயர்வினை ரத்து செய்ய வேண்டும், பிரிபெய்டு திட்டத்தை கைவிட வேண்டும், மின்துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 'இந்தியா' கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் புதுச்சேரி மாநிலத்தில் நாளை புதன்கிழமை 'பந்த்' முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

இந்த போராட்டம் புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் என 4 பிராந்தியங்களிலும் நடைபெற உள்ளது. இதற்காக இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் தனியார் பஸ் உரிமையாளர்கள், டெம்போ, ஆட்டோ மற்றும் கடை உரிமையாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை 

தமிழக அரசு பேருந்துகள் புதுச்சேரி எல்லையில் நிறுத்தப்படும். இதே போல் கடைகளும் அடைக்கப்படுகிறது. தற்போது தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதால் ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு நாளை புதன்கிழமை விடுமுறை விடப்பட்டு அன்று நடைபெறும் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. 

அனைத்து சேவையும் இயங்கும் - மாவட்ட ஆட்சியர் 

புதுச்சேரியில் சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் நாளை செப்டம்பர் 18, 2024 (புதன்கிழமை) அன்று பந்த் மற்றும் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. பொது மக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும். மாணவர்கள் எந்தவித கவலையும் இன்றி பள்ளிக்கு வருவதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து அத்தியாவசிய சேவைகளும் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கபடுகிறது. என மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
பழனி கோயில் பஞ்சாமிர்தம்... காலாவதி தேதி 15 நாட்களில் இருந்து 30 நாட்களாக உயர்வு..!
பழனி கோயில் பஞ்சாமிர்தம்... காலாவதி தேதி 15 நாட்களில் இருந்து 30 நாட்களாக உயர்வு..!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Breaking News LIVE: தமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்கும்!
Breaking News LIVE: தமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்கும்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?Cuddalore Mayor | Thirumavalavan meets MK Stalin | மிரட்டப்பட்டாரா திருமா? அந்தர் பல்டி பேச்சுகள்Manimegalai Priyanka issue | மணிமேகலை மட்டும் ஒழுங்கா? தலைவலியில் விஜய் டிவி! ரக்‌ஷணின் சோகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
பழனி கோயில் பஞ்சாமிர்தம்... காலாவதி தேதி 15 நாட்களில் இருந்து 30 நாட்களாக உயர்வு..!
பழனி கோயில் பஞ்சாமிர்தம்... காலாவதி தேதி 15 நாட்களில் இருந்து 30 நாட்களாக உயர்வு..!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Breaking News LIVE: தமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்கும்!
Breaking News LIVE: தமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்கும்!
கேரளாவில் குரங்கம்மையா? மீண்டும் க்வாரண்டைனா? அச்சத்தில் பொதுமக்கள்
கேரளாவில் குரங்கம்மையா? மீண்டும் க்வாரண்டைனா? அச்சத்தில் பொதுமக்கள்
பிரிஞ்சு மூணு வருஷமாச்சு.. டேட்டூவை ஏன் அழிக்கல? சமந்தா - நாக சைதன்யா கொடுத்த பதில் என்ன?
பிரிஞ்சு மூணு வருஷமாச்சு.. டேட்டூவை ஏன் அழிக்கல? சமந்தா - நாக சைதன்யா கொடுத்த பதில் என்ன?
Prithviraj Sukumaran : மும்பையில் அடுக்குமாடி வீடு வாங்கிய நடிகர் பிருத்விராஜ்...விலை இத்தனை கோடியா!
Prithviraj Sukumaran : மும்பையில் அடுக்குமாடி வீடு வாங்கிய நடிகர் பிருத்விராஜ்...விலை இத்தனை கோடியா!
தொடரும் சோகம்..மதுரை பெண்கள் விடுதி தீ விபத்து உயிரிழப்பு 3 ஆக உயர்வு
தொடரும் சோகம்..மதுரை பெண்கள் விடுதி தீ விபத்து உயிரிழப்பு 3 ஆக உயர்வு
Embed widget