மேலும் அறிய

புதுச்சேரி: மொபைல் ஆப்பில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு - புதிய வசதி அறிமுகம்!

புதுச்சேரி மாநிலத்தில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை மொபைல் ஆப் மூலமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை மொபைல் ஆப் மூலமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொழிலாளர் துறை செயலர் ஸ்மித்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

தேசிய தகவல்தொழில்நுட்ப மையத்துடன் இணைந்து ஏற்பாடு:

புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலகம், 2025–26-ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ்களைப் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் மூலம் பெற்றுள்ளது. இவை அனைத்தையும் தேசிய தகவல்தொழில்நுட்ப மையத்தின் (NIC) உதவியுடன் மொபைல் ஆப்பில் பதிவேற்றம் செய்யத் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் செல்லத் தேவையில்லை:

பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழைப் பெற்ற பிறகு, இந்த மொபைல் ஆப்பைப் பயன்படுத்தி சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள பத்தாம் வகுப்பு ஸ்டேட் போர்டு மற்றும் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் தங்களின் உண்மை மதிப்பெண் சான்றிதழைப் பெற்ற பின்னர், வேலைவாய்ப்புப் பதிவுக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுக வேண்டிய அவசியமில்லை.

பதிவு செய்யும் முறை:

பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை மொபைல் ஆப்பில் பதிவு செய்யும் வழிமுறைகள் மற்றும் விவரங்கள் தொழிலாளர் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான https://labour.py.gov.in மற்றும் https://ee.py.gov.in ஆகியவற்றில் வழங்கப்படும்.

முதுநிலை (Seniority) பாதிக்கப்படாது:

பத்தாம் வகுப்பு மூப்பைப் (Seniority) பொறுத்தவரை, மாணவர்கள் பதியும் தேதியே அவர்களின் மூப்புத் தேதியாகக் கருதப்படும். இந்த மொபைல் ஆப் லிங்கைப் பயன்படுத்தி, மாணவர்கள் தங்களின் கல்வித் தகுதியைப் பதிந்து, அடையாள அட்டையையும் நேரடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இந்த ஆப் மூலம் தங்களது பிராந்தியம், பத்தாம் வகுப்பு ஏழு இலக்க எண், பிறந்த தேதி மற்றும் இதர விவரங்களைப் பதிந்து, தங்களது பதிவு எண்ணையும் எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம்.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget