மேலும் அறிய

PG medical rank list: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

முதுநிலை மருத்துவ இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார்.

முதுநிலை மருத்துவ இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். இதற்கு, நாளை முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

முன்னதாக, 23 அரசு கல்லூரிகள்,16 தனியார் மருத்துவக் கல்லூரிகளில்  2,346 முதுநிலை மருத்துவ இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகின. இதை அடுத்து, முதுநிலை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. அனைத்து விண்ணப்பங்களும் சான்றிதழ்களும் பரிசீலனை செய்யப்பட்டு வந்தன. 

இந்த நிலையில் இன்று (செப். 28) அதற்கான தரவரிசை பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

’’முதுநிலை மருத்துவ படிப்பிற்கான அரசுக் கல்லூரிகளில் 1,162 இடங்களும் நிர்வாக நிலை கல்லூரிகளில் 763 இடங்களும் காலியாக உள்ளன. 

அதேபோல முதுநிலை பல் மருத்துவத்திற்கான அரசுக் கல்லூரிகளில் 31  இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் உள்ள 296 முதுநிலை பல் மருத்துவ இடங்கள்,   தேசிய வாரிய பட்டப்படிப்பு இடங்கள் 94 என மொத்தம் 2346 இடங்கள் உள்ளன. இந்த இடங்களானது 23 அரசு கல்லூரிகளிலும் 16 சுயநிதி கல்லூரிகளிலும் இருக்கின்றன.

முதுநிலை மருத்துவ மேற்படிப்பிற்கான விண்ணப்பங்கள்

அரசுக் கல்லூரி இடங்களில் சேர 6,968 பேர் விண்ணப்பித்ததில் 6,893 விண்ணப்பங்கள் தகுதியான விண்ணப்பங்களாகக் கண்டறியப்பட்டன. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2,925 பேர் விண்ணப்பித்தனர். அதில் 2,286 விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்தவையாக உள்ளன.

பல் மருத்துவ படிப்பிற்கு அரசு கல்லூரிகளில் 679 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 662 விண்ணப்பங்கள் தகுதியான விண்ணப்பங்கள் ஆகவும் நிர்வாக ஒதுக்கீட்டில் 341 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 310 விண்ணப்பங்கள் தகுதியானவையாகவும் உள்ளன. 

கலந்தாய்வு எப்போது?

இவை அனைத்திற்கும் ஆன்லைன் கலந்தாய்வானது இணையதளம் வாயிலாக நடைபெறும். இந்தக் கலந்தாய்வு நாளை முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை நடைபெறும். முதல் நாளான நாளை (செப்.29) மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறும்’’.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Quarterly Holidays : மாணவர்களுக்கு ஸ்வீட் நியூஸ்.. காலாண்டு தேர்வு விடுமுறை மீண்டும் நீட்டிப்பு.. எதுவரை? 

எஸ்.எஸ்.சி. தேர்வுகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு..இலவச பயிற்சி வகுப்புகள் உங்களுக்காக.. முழு விவரம் இதோ!

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
கழிப்பறை அடைப்பு: மாணவர்களையே பள்ளம் தோண்ட வைத்த எச்.எம்.- அதிர்ச்சி வீடியோ!
கழிப்பறை அடைப்பு: மாணவர்களையே பள்ளம் தோண்ட வைத்த எச்.எம்.- அதிர்ச்சி வீடியோ!
எல்லாத்துக்கும் அமைச்சர் ராஜினாமா செய்யணுமா? - நீட் விவகாரத்தில் காங்கிரஸ், பா.ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய நமச்சிவாயம்!
எல்லாத்துக்கும் அமைச்சர் ராஜினாமா செய்யணுமா? - நீட் விவகாரத்தில் காங்கிரஸ், பா.ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய நமச்சிவாயம்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
Embed widget