மேலும் அறிய

பெரியார் பல்கலைக்கழகம் இந்திய அளவில் இரண்டாம் இடமும், தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை.

தேசிய தர மதிப்பீட்டில் A++ சான்றிதழ் பெற்று சேலம் பெரியார் பல்கலைக்கழகம் இந்திய அளவில் இரண்டாம் இடமும், தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை.

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் உள்ளிட்ட உயர்நிலைக் கல்வி நிறுவனங்களில் கல்வி ஆராய்ச்சி கட்டமைப்பு விரிவாக்கப் பணிகளை மதிப்பீடு செய்து தரவரிசை வழங்க தேசிய தர மதிப்பீட்டுக் மற்றும் நிர்ணய குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நேரடியாக உயர் கல்வி நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்து தர மதிப்பீடு சான்றிதழ் வழங்குகிறது.

அதன்படி, கடந்த 22 ஆம் தேதி சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்கள் ராஜாராமி ரெட்டி கொண்டிபால் தலைமையிலான குழுவினர் மூன்று நாட்கள் தொடர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் அடிப்படையில் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்ட வடிவமைப்பு, கற்றல், கற்பித்தல் மற்றும் மதிப்பீடு ஆராய்ச்சி புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் விரிவாக்கப் பணிகள் கட்டமைப்பு கற்றல் வள ஆதாரங்கள் மாணவர்கள் சேவை நிலை வளர்ச்சி நிர்வாகம் தலைமைத்துவம் மேலாண்மை நிறுவனத்தின் மதிப்பீடுகள் புதுமை கண்டுபிடிப்புகள் சிறப்பு நடைமுறைகள் ஆகிய ஏழு அடிப்படை கூறுகளை அளவுகோலாகக் கொண்டு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவு நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி சேலம் பெரியார் பல்கலைக் கழகம் 3.61 புள்ளிகளைப் பெற்று. தமிழகத்தில் A++ தரச்சான்று பெற்று முதல் மாநில பல்கலைக்கழகமாக தேர்வாகியுள்ளது. மேலும், அகில இந்திய அளவில் மாநில பல்கலைக் கழகங்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 

பெரியார் பல்கலைக்கழகம் இந்திய அளவில் இரண்டாம் இடமும், தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை.

மொத்தம் 4 புள்ளிகள் என்ற அடிப்படையில் பாடத்திட்டங்கள் வடிவமைப்பில் 3.6 புள்ளிகளையும், கற்றல் கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டில் 3.76 புள்ளிகளையும், ஆராய்ச்சி புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் விரிவாக்கப் பணிகளில் 3.72 புள்ளிகளையும், கட்டமைப்பு மற்றும் கற்றல் வள ஆதாரங்கள் 3.7 புள்ளிகளையும், நிர்வாகம் தலைமைத்துவம் மேலாண்மையில் 3.33 புள்ளிகளும், மதிப்பீடுகள் சிறப்பு நடைமுறைகளில் 3.96 புள்ளிகளும் என ஒட்டுமொத்தமாக 3.61 புள்ளிகளைப் பெற்று பெரியார் பல்கலைக்கழகம் A++ தர நிலையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக, பெரியார் பல்கலை கழக துணை வேந்தர் ஜெகநாதன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர், தேசிய அளவிலான தர மதிப்பீட்டில் சேலம் பெரியார் பல்கலை கழகம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இதனால் மத்திய அரசிடம் இருந்து 100 கோடி அளவிற்கு பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறினார். மேலும், அகில இந்திய அளவில் ஆன்லைன் கல்வி கற்பிக்கவும்; வெளி நாட்டவர்களுடன் பிராஜெக்ட் செய்தல், மத்திய அரசு ஒப்புதல் இன்றி வெளி நாட்டு மாணவர்களை பல்கலையில் சேர்க்கலாம் என்றார். பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு விருப்பம் உள்ள தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 40 சதவீத ஆராய்ச்சி கட்டுரைகள் ஆரோக்கியம் சார்ந்தே உள்ளது. கேன்சர் நோயை முன்கூட்டியே கண்டறிந்து, கட்டுபடுத்தும் எலக்ட்ரானிக் நோஸ் கருவியை கண்டுபிடித்துள்ளோம் என்றார். 

வெளிநாடுகளில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட பெரியார் பல்கலை கழகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. தொல்லியியல் துறை சார்பாக 7500 ஆண்டுகளுக்கு முந்தையது தமிழ் நாகரிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது. பல்கலையில் ரூ. 9.66 கோடியில் சிண்டேக் ட்ராக் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
Embed widget