அரசு பொதுத்தேர்வு, நுழைவுத் தேர்வில் மோசடி செய்தால் 10 ஆண்டு சிறை, ரூ.1 கோடி அபராதம்: வருகிறது புது சட்டம்
இந்த மசோதா இன்று (பிப்.5) தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) மசோதா என்று பெயரிடப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே உள்ளிட்ட அரசு பொதுத் தேர்வுகளின் வினாத் தாள்களை கசிய விடுவோருக்கும் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபடுவோருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இதற்காகப் புதிய சட்டம் கொண்டு வரவும் முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா இன்று (மக்களவையில்) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) மசோதா -The Public Examinations (Prevention of Unfair Means) Bill, 2024 என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில், மருத்துவ நுழைவுத் தேர்வான நீட், பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு நடத்தப்படும் க்யூட் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட தேர்வுகளுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) தேர்வுகள், எஸ்எஸ்சி, ரயில்வே பணிகள் உள்ளிட்டவற்றுக்காக பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், இந்தப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்து பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. வட மாநிலங்களில் இந்த சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. இதனால் தகுதியான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதிய மசோதா
இதைத் தடுக்கும் நோக்கில் புதிய மசோதா ஒன்றை மத்திய அரசு இன்று கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா இன்று (பிப்.5) தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) மசோதா -The Public Examinations (Prevention of Unfair Means) Bill, 2024 என்று பெயரிடப்பட்டுள்ளது.
மசோதா கூறுவது என்ன?
தேர்வு வினாத் தாள்களை வேண்டுமென்றே கசிய விடும் நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட், ஜேஇஇ, க்யூட், யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே தேர்வுகள், தேர்வுகள் என அனைத்துத் தேர்வுகளுக்கும் இது அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி தேர்வு வினாத்தாளை கசியவிடும் குற்றத்தைச் செய்யும் நபர்களுக்கு 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும், திட்டமிட்ட குற்றங்களுக்கு 5 முதல் 10 ஆண்டு வரையும், ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா அமல்படுத்தப்பட்டு சட்டமானால், முறைகேடுகள் பெருமளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிக்கலாம்: JEE Main 2024: ஜேஇஇ மெயின் தேர்வு இரண்டாம் அமர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்; எப்படி விண்ணப்பிக்கலாம்?