மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
NEET UG Result Topper: நீட் தேர்வில் 720/ 720 எடுத்து சாதனை: ரகசியம் பகிர்ந்த விழுப்புரம் மாணவர் ரஜநீஷ்!
NEET UG Result 2024 Topper: நீட் தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியான நிலையில், விழுப்புரம் பகுதியை சேர்ந்த மாணவன் ரஜநீஷ் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
![NEET UG Result Topper: நீட் தேர்வில் 720/ 720 எடுத்து சாதனை: ரகசியம் பகிர்ந்த விழுப்புரம் மாணவர் ரஜநீஷ்! NEET UG Result 2024 Topper villupuram student Rajaneesh Secured 720 Out of 720 NEET UG Result Topper: நீட் தேர்வில் 720/ 720 எடுத்து சாதனை: ரகசியம் பகிர்ந்த விழுப்புரம் மாணவர் ரஜநீஷ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/05/9310a2af2972c43a6bdee383f406f7311717585718600113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நீட் தேர்வு முடிவு : 720/720 மதிப்பெண் எடுத்து விழுப்புரம் மாணவன் சாதனை
2024ஆம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு நாடு முழுவதும் 571 நகரங்களில் நடத்தப்பட்டது. கடந்த மே 5-ம் தேதி நடந்த இந்தத் தேர்வை எழுத 24,06,079 பேர் விண்ணப்பித்த நிலையில், 23,33,297 பேர் எழுதினர். தமிழகத்தில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி பகுதியை சார்ந்த ரயில்வே அதிகாரி பிரபாகரன் மற்றும் கல்லூரி பேராசிரியை தம்பதியின் மகனான ரஜநீஷ். இவர் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண் எடுத்து விழுப்புரம் மாவட்டத்தை பெருமைப்படச் செய்துள்ளார். நீட் தேர்வில் ரஜநீஷ் முழு மதிப்பெண் எடுத்ததை அடுத்து, அவருக்கு பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் இனிப்புகள் ஊட்டி பாராட்டினர்.
மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவு
சிறு வயதிலிருந்து மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவுகளோடு பள்ளி படிப்பினை முடித்துள்ள ரஜநீஷ், பத்தாம் வகுப்பில் 482 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பன்னிரெண்டாம் வகுப்பில் 490 மதிப்பெண்கள் எடுத்து நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வு சிறப்பு வகுப்புகளில் பயிற்சி பெற்றுள்ளார். இதனால் முழு மதிப்பெண் எடுத்துள்ளதாக ரஜநீஷ் தெரிவித்துள்ளார்.
மாக் டெஸ்ட் அதிகமாக எழுதினால் அதிக மதிப்பெண்
மருத்துவம் படித்து இதயவியல் அறுவை சிகிச்சை மருத்துவராக ஆக வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்றும் அதிகமாக பயிற்சி மேற்கொண்டதால் அதற்கான பலன் கிடைத்துள்ளதாகவும், மாக் டெஸ்ட் அதிகமாக எழுதினால் அதிக மதிப்பெண் எடுக்கலாம் எனவும் நீட் தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவன் ரஜநீஷ் கூறியுள்ளார்.
மாணவனின் தாய் விமலா தேவி தனது மகன் நீட்தேர்வில் சாதிக்க தொடர்ந்து உறுதுணையாக இருந்ததாகவும் உழைப்பினை கொடுத்தால் அதற்கான பலன் கிடைக்கும் என மகனிடம் அடிக்கடி வலியுறுத்தி வந்ததால் அதற்கான பலன் கிடைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion