NEET Result 2023 Topper: வெளியான நீட் தேர்வு முடிவுகள் - தமிழ்நாடு மாணவர் 720/720 மதிப்பெண் எடுத்து அகில இந்திய அளவில் முதலிடம்!
NEET Result 2023 Topper:நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபஞ்சன் முதலிடம் பிடித்துள்ளார்.
இளங்கலை நீட் நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் 99.99% பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்
நீட் தேர்வு முடிவுகள்:
இளங்களை நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் முதல் பத்து இடங்களில் 4 இடங்களை தமிழ்நாடு மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த போரா வருண் சக்கரவர்த்தி என்ற மாணவரும் 99.99% மதிப்பெண் எடுத்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற டாப் 10 மாணவர்கள்:
- பிரபஞ்சன் .ஜெ (Prabanjan J)
- போரா வருண் சக்கரவர்த்தி (Bora Varun Chakravarthi)
- கவுசவ் பவுரி (Kaustav Bauri)
- ப்ரஞ்சல் அகர்வால் (Pranjal Aggarwal)
- துருவ் அத்வன் (Dhruv Advan)
- சூர்யா சித்தார்த் .என். (Surya Siddharth N)
- ஸ்ரீநிகேத் ரவி (Shriniketh Ravi)
- ஸ்வயம் சக்தி திரிபாதி (Swayam Shakti Tripathy)
- வருண் எஸ். (Varun S)
- ப்ராத் கந்தேல்வால் (Parth Khandelwal)
தமிழ்நாடு மாணவர் பிரபஞ்சன் முதலிடம்
விழுப்புரம் மாவட்டம் மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் ஜெகதீஷ் என்பவரின் மகன் திரு பிரபஞ்சன். பிரபஞ்சம் பத்தாம் வகுப்பு வரை செஞ்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்திருக்கிறார். மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் படித்து மருத்து நுழைவுத்தேர்வில் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
நீட் தேர்வு முடிவுகள்:
இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர 2023-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகளை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகள், ஆயுஷ் படிப்புகளுக்கு (சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி) நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த நுழைவுத் தேர்வை என்.டி.ஏ. எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது.
நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு மார்ச் 6-ம் தேதி தொடங்கியது. ஒரு மாதம் நிறைவடைந்து, ஏப்ரல் 6ஆம் தேதியுடன் விண்ணப்பப் பதிவு முடிவடைந்தது. இந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, தேசியத் தேர்வுகள் முகமை மீண்டும் விண்ணப்ப அவகாசத்தை நீட்டித்தது. இதன்படி, நீட் தேர்வை எழுத மாணவர்கள் மீண்டும் ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 13 வரை விண்ணப்பித்தனர்.
இந்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் 11 லட்சத்து 84 ஆயிரத்து 502 மாணவிகளும், 9 லட்சத்து 2 ஆயிரத்து 930 மாணவர்களும், 13 திருநங்கைகளும் என மொத்தம் 20 லட்சத்து 87 ஆயிரத்து 445 பேர் நீட் தேர்வை எழுதினர். தமிழகத்தில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 581 பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, திருச்சி, மதுரை உட்பட 24 மாவட்டங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. சென்னையில் மட்டும் 28 மையங்களில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் தேர்வு எழுதினர்.
இதில் 11 லட்சத்து 45 ஆயிரத்து 976 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ப்ரஞ்ஜன் அகர்வால், ஆஷிகா அகர்வால், ஆர்யா, மிமன்சா மவுன், ஸ்மெஹா சிங் ஆகிய மாணவிகள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதை தொடர்ந்து, கடந்த ஆண்டை போலவே, மகாராஷ்டிராவில் இருந்து அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1.31 லட்சம் மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இராஜஸ்தானிலும் அதிக தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது.