மேலும் அறிய

தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்

நீட் முதல் டெட் வரை: வினாத்தாள் கசிவு, மோசடி,தேர்வு ரத்து- மத்திய அரசால் தொடரும் குழப்பங்கள் - தவிக்கும் மாணவர்கள்!

இந்தியாவில் சமீப காலமாக நடைபெறும் தேசிய மற்றும் மாநில அளவிலான முக்கியப் போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு, திடீர் ஒத்திவைப்பு மற்றும் ரத்து நடவடிக்கைகள் தொடர் கதையாகி வருகின்றன.

இதனால் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், குறைந்தபட்சம் தேர்வை நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என்று நாடு முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரவு பகலாகப் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில் நாடு முழுவதும் பல்வேறு தேர்வுகளில் நடந்த குளறுபடிகளின் முழுமையான தொகுப்பு இதோ:

நீட் தேர்வு

தேசிய அளவிலான இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் யுஜி தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாக நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

மாணவர்களின் தொடர் போராட்டங்களை அடுத்து, இந்த விவகாரம் சிபிஐ விசாரணை மற்றும் உச்சநீதிமன்றத்தின் தலையீடு வரை சென்றது. தொடர்ந்து நீட் மறுதேர்வு நடத்தப்பட்டது. எனினும் தொடர்ச்சியான முறைகேடுகள் காரணமாக மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று எதிர்க் குரல்கள் தீவிரமடைந்து வருகின்றன.


தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்

2024 நெட் தேர்வுகள் (UGC-NET & CSIR-NET)

பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் தகுதி மற்றும் ஆராய்ச்சி உதவித்தொகைக்கான யுஜிசி நெட் தேர்வு நடந்து முடிந்த மறுநாளே அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. தேர்வின் ரகசியத்தன்மை டார்க் வெப் இணையதளம் மூலமாக கசிந்து சமரசம் செய்யப்பட்டதாக கல்வி அமைச்சகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது.

இதன் எதிரொலியாக, ஜூன் மாதம் நடைபெறவிருந்த அறிவியல் பாடங்களுக்கான சிஎஸ்ஐஆர்-நெட் தேர்வும் தவிர்க்க முடியாத நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)

மத்திய அரசின் தேர்வுகள் மட்டுமின்றி, மாநில அளவிலான தேர்வுகளிலும் இதே அவலநிலைதான். பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வான 'டெட்' (TET) மற்றும் காவலர், அரசுப் பணியாளர் தேர்வுகளிலும் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் அரங்கேறின. பல இடங்களில் வினாத்தாள் லீக் ஆனதால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

குறிப்பாக 2024ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச போலிஸ் கான்ஸ்டபிள் தேர்வு (UP Police Constable Recruitment Exam), மறுஆய்வு அதிகாரி அல்லது உதவி மறுஆய்வு அதிகாரி முதல்நிலைத் தேர்வு (UP RO, ARO Prelims) ஆகியவையும் ரத்து செய்யப்பட்டன.


தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்

பல்வேறு மாநிலத் தேர்வுகள் 

அதேபோல உத்தராகண்ட் UKSSSC  தேர்வுகள் 2025ஆம் ஆண்டில் வினாத்தாள் கசிவால் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து ஹரியாணா உதவிப் பேராசிரியர் இந்தி தேர்வு, உ.பி. இசிஆர் டிபார்ட்மெண்ட்டல் தேர்வு (ECR Exam) ஆகியவற்றிலும் சர்ச்சை எழுந்து தேர்வு ரத்து செய்யப்பட்டது.

விமர்சனத்தில் NTA

இந்த நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகள் தற்போது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. முறைகேடுகளைத் தடுக்க புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும், தேர்வு முறையில் உள்ள ஓட்டைகளை அடைத்து, முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர வேண்டும் என்பதே கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
பி.டெக்., பி.காம். படிப்புகளுக்கு ரூ.25,000 வரை கட்டணச் சலுகை: புதுச்சேரி மகளிர் பொறியியல் கல்லூரி அதிரடி!
பி.டெக்., பி.காம். படிப்புகளுக்கு ரூ.25,000 வரை கட்டணச் சலுகை: புதுச்சேரி மகளிர் பொறியியல் கல்லூரி அதிரடி!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
Embed widget