NEET- PG Counselling | ஜனவரி 6-க்குள் நீட் முதுகலை கலந்தாய்வு: மத்திய அரசு உறுதி
மருத்துவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்படாது. கோவிட் வைரஸ் புதிய திரிபுக்கு யாரும் அச்சம்கொள்ள வேண்டாம்.
ஜனவரி 6-ம் தேதிக்குள் நீட் முதுகலை கலந்தாய்வு தொடங்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா உறுதி அளித்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தாண்டு, ஜனவரியில் நடத்தப்படவேண்டிய முதுகலை படிப்புக்கான நீட் தேர்வு கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கூடிய மாணவர்கள் கொரோனா பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அதேபோன்று, முதுகலை மாணவர்களின் புதிய குழு இணையும் வரை, முதுகலை இறுதியாண்டு பயிலும் மாணவர்களின் மருத்துவ சேவை (பொதுவான மற்றும் சிறப்பு தனித்தன்மை வாய்ந்த) தொடரலாம். அதேபோல புதியவர்கள் நியமிக்கப்படும் வரை மூத்த மருத்துவர்கள்/ பதிவாளர்களின் சேவைகளையும் தொடரலாம் என்றும் தெரிவித்தது.
இத்தகையை போக்கு முதுகலை மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு மனச்சோர்வையும், ஊக்கமின்மையும் ஏற்படுத்தும் என்றும், சேர்க்கையை ஒத்திவைப்பதால் நாட்டின் அடிப்படை சுகாதார கட்டமைப்பு சீர்குலையும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அண்மையில் டெல்லியில் மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியது. பேரணியில் ஈடுப்பட்ட 10க்கும் மேற்பட்ட மருத்துவர்களை காவல்துறை சிறைபிடித்ததைக் கண்டித்து, கடந்த டிசம்பர் 28ஆம் தேதி மாலை டெல்லி சரோஜினி நகர் காவல் நிலையம் முன்பு நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.
காவல்துறையின் அடக்குமுறையைக் கண்டித்தும், முதுகலை மருத்துவப் படிப்பு சேர்க்கையும் வலியுறுத்தியும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அகில இந்திய மருத்துவர் சங்க கூட்டமைப்பு அறிவித்தது.
இதற்கிடையே ஜனவரி 6-ம் தேதிக்குள் நீட் முதுகலை கலந்தாய்வு தொடங்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா உறுதி அளித்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அதேபோல மருத்துவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்படாது எனவும், கோவிட் வைரஸ் புதிய திரிபுக்கு யாரும் அச்சம்கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அவசியம் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று (டிச.30) தலைவர் சஹஜானந்த் பிரசாத் தலைமையில் இந்திய மருத்துவ சங்கத்தின் குழுவினர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மண்டவியாவைச் சந்தித்துப் பேசிய நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்