UPSC Scholarship: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் ஊக்கத்தொகை : யுபிஎஸ்சி தேர்வர்களுக்கு முதல்வர் அழைப்பு..
நான் முதல்வன் ஊக்கத்தொகை திட்டத்தை யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
நான் முதல்வன் ஊக்கத்தொகை திட்டத்தை யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
ஏற்கெனவே அரசு சார்பில் யுபிஎஸ்சி (UPSC) முதன்மைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்ட நிலையில், தற்போது முதல்நிலைத் தேர்வை எழுதும் மாணவர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் 7500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும். நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
புதியவர்களுக்கும் வாய்ப்பு
இதில், 50 மாணவர்கள் முதல்முறையாகத் தேர்வை எழுதுபவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு 21 வயது முடிந்திருக்க வேண்டும். அதேநேரத்தில் 01.08.2024-ல் 22 வயதை எட்டாமல் இருக்க வேண்டும். எனினும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. ஏதேனும் ஓர் இளங்கலைப் பட்டத்தை முடித்திருக்க வேண்டும்.
தேர்வு மையங்கள்
தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களிலும் தேர்வு மையங்களில் கொள்குறி வகையில் மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. கேள்விகளின் மொத்த எண்ணிக்கை - 150 (100 பொது அறிவு - 50 CSAT)
1. தவறான பதில்களுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் இல்லை.
2. கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த மதிப்பீட்டுத் தேர்வை எழுதி ஊக்கத்தொகை பெற விரும்பும் ஆர்வமுள்ள மாணவர்கள் https://nmcep.tndge.org/register?sub_id=eyJpdiI6ImZreUFYN0E3V0tjc0hxa3doZmQ4UXc9PSIsInZhbHVlIjoiS0kwQURNVTB1WTM1ZSt6eXVhYVlUdz09IiwibWFjIjoiNzI0MzVjMjY2YjQxYzQ5ZGI3MWI3NDFjOGQ3MWRmMDc4ZGYyOTk5NmM3ZmIwNDJiYjk5MjlhNTk3ZGFmMDU1ZSIsInRhZyI6IiJ9 என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து, முன்பதிவு செய்துவிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 2ஆம் தேதிதொடங்கிய நிலையில், தேர்வர்கள் 17.08.2023 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நான் முதல்வன் ஊக்கத்தொகை திட்டத்தை யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’’தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்திய ஆட்சிப் பணிக்கு அதிகம் தேர்வாக வேண்டும் என்று பல முன்முயற்சிகளை நமது அரசு எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக, #நான்_முதல்வன் போட்டித்தேர்வுகள் பிரிவு வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊக்கத்தொகைத் திட்டத்தை #UPSC தேர்வுக்குத் தயாராகும் நம் இளைஞர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இளைய தமிழகம் உலகை வெல்லட்டும்’’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேர்வு முறை குறித்து முழுமையாக அறிய https://naanmudhalvan.tn.gov.in/pdfs/UPSC%20PRELIMS%20Scholarship%20Exam-%20Notification.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.
கூடுதல் தகவல்களுக்கு: செல்பேசி எண்கள்- 9043710214 / 9043710211 (10:00 am – 05:45 pm)
இதையும் வாசிக்கலாம்: UPSC SCHOLARSHIP EXAM 2023: யுபிஎஸ்சி தேர்வரா நீங்க? மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை, பாடத்திட்டம் இதோ!