மேலும் அறிய

பாடப்புத்தகம் மட்டுமல்ல தனித்திறமையும் முக்கியம்.! மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அட்வைஸ்

தனது குழந்தை வெற்றி பெற வேண்டும் என்பது அப்பா, அம்மா இரண்டு பேரின் ஆசை, ஆனால் ஒரு குழந்தை மட்டுமல்ல தன்னிடம் படிக்கும் அனைத்து குழந்தைகளும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர்கள் ஆசிரியர்கள் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கான போட்டி

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்தியன் அபாகஸ் மையம் தேசிய அளவில் மனக்கணிதப் போட்டியை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தாண்டு 7-வது சர்வதே எண்கணித  மற்றும் திறன் மேம்பாட்டுப்  போட்டியை இன்று (சனிக்கிழமை) சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்தியது.  2500-க்கும் மேற்பட்ட மாண- மாணவியர்கள் பங்கேற்ற 7-வது  தேசிய அபாகஸ் அடிப்படையிலான  எண்கணித  மற்றும் திறன் மேம்பாட்டுப் போட்டியை இந்தியன் அபாகஸ் நிறுவனம் நடத்தியது.

இதனை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்து பேசிய அவர், உலக முழுவதும் சுற்றியுள்ளேன், பல நாடுகளில் பார்த்துள்ளேன். அங்குள்ள ஆசிரியர்கள், மாணவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. அந்த விஷயங்களையெல்லாம் இங்கு கொண்டு வந்து சேர்த்து விட முடியாத என எண்ணிப்பார்த்துள்ளேன். 

மாணவர்களுக்கு தனித்திறமையும் முக்கியம்

வெறும் பாடப்புத்தகத்தை மட்டுமல்ல தனித்திறமை வளர்க்க மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். கணக்கு பாடம் மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்காமல் விளையாட்டாக இனிய நிகழ்வாக, எளிய முறையாக செய்ய முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டு தான் அபாகஸ், குழந்தைகளை தனது இடுப்பில் வைத்திருப்பார்கள், அந்த குழந்தை அழுதால் எதற்காக அழுகிறது என தாய்க்கு தான் தெரியும், பசியால் அழுகிறதா.? வயிற்று வலியால் அழுகிறதா என தெரியும். அதே போல தனது குழந்தை வெற்றி பெற வேண்டும் என்பது அப்பா, அம்மா இரண்டு பேரின் ஆசை, ஆனால் ஒரு குழந்தை மட்டுமல்ல தன்னிடம் படிக்கும் அனைத்து குழந்தைகளும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர்கள் ஆசிரியர்கள். 

குழந்தைகளுக்கு முதல் டீச்சர் பெற்றோர்

அதே நேரம் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் தொடங்குவது வீடு, குழந்தைகள் காலையில் எழுப்பும் போது அன்பாக, பாசமாக எழுப்ப வேண்டும் ஆனால் நம் வீட்டில் எருமை மாடு எழுந்திரு என திட்டியே எழுப்புவார்கள். ஆனால் வெளிநாடுகளில் குழந்தைகளோடு உரையாடுவது கூட மரியாதையாக இருக்கும். எனவே வீட்டில் இருந்து தான் இனிமையான சூழல் உருவாகிறது. குழந்தைகளுக்கு அப்பா அம்மா தான் முதல் டீச்சர்
குழந்தைகளுக்கு உண்மையை பேச சொல்லி கொடுங்கள். வீட்டுப்பாடம் செய்யவில்லையென்றால் டீச்சரிடம் உண்மையை பேச சொல்லிக்கொடுங்கள். லீவ் எடுத்தால் உண்மையை சொல்ல சொல்லுங்கள் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். 

பாடப்புத்தகம் மட்டுமல்ல தனித்திறமையும் முக்கியம்.! மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அட்வைஸ்

தமிழக மாணவர்கள் உலகரங்கில் வளர்ச்சி

இதனை தொடர்ந்து பேசிய இந்தியன் அபாகஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பஷீர் அகம்மது கூறுகையில், எங்கள் நோக்கம் தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள எளிய மற்றும் அனைத்து மாணவர்களும் இந்த கணித பயிற்சியினை பயன்படுத்தி சாதனை மாணவர்களாக திகழ வேண்டும் அதுதான் எங்களது முதல் நோக்கம். அது மட்டுமல்லாது உலக அளவில் இந்திய மாணவர்கள்  எண்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் சாதனை படைத்து திகழ வேண்டும் அந்த இலக்கை நோக்கி நாங்கள் தொடர்ந்து பயணித்து வருகிறோம்.

அதன் ஒரு வழி தான் இந்த சர்வதேச எண்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப்  போட்டியை ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தி வருகிறோம் இதை மேலும் மேலும் நடத்த மாநில அரசு துணை நின்றால் நிச்சயமாக நாம், நமது இந்திய மாணவர்களை உலக அரங்கில் கல்வியில் சிறக்க செய்வோம் என தெரிவித்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
திருச்சி மாஸ் சாதனை! உயர்கல்வி சேர்க்கையில் தமிழகத்திலேயே முதலிடம்: வெற்றிக் கொடி நாட்டியது
திருச்சி மாஸ் சாதனை! உயர்கல்வி சேர்க்கையில் தமிழகத்திலேயே முதலிடம்: வெற்றிக் கொடி நாட்டியது
குரூப் 4: லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள்; வெறும் 6,574 அறிவிப்பா? - கொந்தளித்த டிடிவி தினகரன்
குரூப் 4: லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள்; வெறும் 6,574 அறிவிப்பா? - கொந்தளித்த டிடிவி தினகரன்
தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!
தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Embed widget